செல்போன்களை பூட்டி வைக்கும் கலிபோர்னியா பள்ளி, ஏன் தெரியுமா?

இந்த திட்டத்திற்கு பிறகு நாங்கள் சக மாணவர்களுடன் அதிக நேரம் உரையாடுகிறேன், ஆசிரியருடன் அதிக நேரம் செலவிடுகிறேன் – மாணவி

இப்போது இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்போன்களுடன் வரத்துவங்கிவிட்டனர். அமெரிக்காவில் சொல்லவா வேண்டும். கிட்டத்தட்ட 1700 மாணவர்கள் படிக்கின்ற San Mateo High School இல் மாணவர்கள் செல்போன்களுடன் தான் வருகிறார்கள். சில நிமிடங்களுக்கு ஒருமுறை போன்களில் மெசேஜ் வருகிறதா, அப்டேட் வருகிறதா என எடுத்து எடுத்து பார்க்கின்றனர். இதனால் சக மாணவர்களுடன் கூட பேசுவதில்லை, ஆசிரியர் – மாணவர் உறவு பாதிப்பு, படிப்பில் கவனச்சிதறல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் குற்றம் சொல்லப்பட்டது.

சொன்னாலும் கேட்காத மாணவர்கள்

பாதிப்புகளை எடுத்துக்கூறி இனிமேல் பள்ளியில் செல்போன்களை பயன்படுத்துவதனை தவிர்த்து விடுங்கள் என பள்ளி சார்பாக கேட்டுக்கொண்டாலும் யாரும் கேட்பதாக இல்லை. ஆகவே தான் தற்போது செல்போன்களை பூட்டி வைக்கும் Yondr pouch முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். காலையில் மாணவர்கள் வந்தவுடன் அந்த Yondr pouch இல் மொபைலை வைத்துவிட வேண்டும். இதற்காக $20,000 செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கட்டணமில்லை என்றாலும் மாணவர்கள் Yondr pouch ஐ தொலைந்துவிட்டால் $25 கொடுத்து புதிதாக பெற வேண்டும்.

பள்ளி முடிந்தபிறகு பள்ளி நிர்வாகத்தில் இருந்து வருகிற நபர் Yondr pouch ஐ திறந்து மொபைலை எடுத்துக்கொடுப்பார்.

ஆதரவும் எதிர்ப்பும்

வழக்கம்போல இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் கிளம்பியுள்ளனர். மொபைலை இப்படி கட்டாயமாக பிடுங்கி வைப்பதனால் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தமும் அதன் காரணமாக கவன சிதறலும் கூடுகிறது என கூறுகிறார்கள்.

ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் இந்த முறை சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது என கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

மொபைலுக்கு குட்பை சொல்லுவோம்

கழுத்து குனியாமல் பயன்படுத்துதல்

நானும் கூட அதிகப்படியாக மொபைலை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறேன். அதனை தவிர்க்க முயற்சித்தும் வருகிறேன். இனிமேல் ஒரு பூட்டு போட்டு பூட்டிவிடலாமா என நினைக்கிறன். நீங்களும் முடிந்தவரையில் மொபைல் பயன்பாட்டை குறைக்க முயலுங்கள். பிள்ளைகளுக்கு மொபைல் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள்.

உடலை பாதிக்காமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *