கட்சிகளில் இருந்து வெளியேறுங்கள்

 


 

மத்தியில் ஆளுகின்ற பாஜகவிற்கு எதிராகவும் தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுகவிற்கு எதிராகவும் , திமுக அதிமுக கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் பேசிவந்த பாமக வரப்போகும் நாடளுமன்ற தேர்தலில் (பாஜக + அதிமுக) கட்சிகளுடனேயே தேர்தல் கூட்டணியை வைத்திருப்பது மிகப்பெரிய சலசலப்பையும் எதிர்ப்பையும் கிளப்பியிருக்கிறது .

 



தரமாக விமர்சித்த பாமக



அரசியல்வட்டாரத்தில் பாமக முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கு என்றுமே நல்ல கவனிப்பு இருக்கும் . அதற்கு மிக முக்கிய காரணம் புள்ளிவிவரங்கள் , ஆதாரங்கள் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டுகள் இருக்கும் .

 

 



ஊழலுக்கு எதிராகவும் மதுவிற்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களையும் சட்டப்போராட்டங்களையும் பாமக நடத்திவந்தது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது .

 




தடம் மாறிய பாமக



கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு வந்த பாமக , தாங்கள் யாருக்கு எதிராக கடுமையாக வைத்தார்களோ அவர்களுடனையே கூட்டணி வைத்தார்கள் . இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அளித்த பதிலின் சாரம்சம் ” மத்தியில் தங்களுடைய பங்களிப்பு இருந்தவரை தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவந்தோம் , மீண்டும் எங்களுடைய பங்களிப்பு மத்தியில் இருக்கவேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இணைந்தோம் ” என்றார் .

 

மேலும் தங்களது கொள்கையில் சமரசம் எதுவும் செய்துகொள்ளமாட்டோம் என 10 கட்டளைகளையும் அறிவித்து இருந்தார் .

 

ஆனால் இவை எதுவுமே சாதாரண அரசியல் பார்வையாளர்களை திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை .

 


 

பழைய அசிங்கத்தை பின்பற்ற வேண்டுமா ?



முன்னர் விமர்சிப்பது பின்னர் தேர்தல் வந்தவுடனே விமர்சித்தவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களுக்காக வாக்குகள் கேட்பது இப்போது பாமக மட்டுமே செய்த செயல் அல்ல . காலம் காலமாக ஒவ்வொரு தேர்தலுக்கும் இதனை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம் .

திமுக – பாஜக வுடன் கூட்டணி வைத்த நிகழ்வுகளும் மதிமுக திமுக , அதிமுக என மாறி கூட்டணி வைத்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நாம் கண்டவையே .

 

ஆனால் அதனையே முன்னுதாரணமாக கொண்டு இப்போதும் நாங்கள் அப்படித்தான் செய்வோம் , அதில் தவறில்லை என்பதும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது .

இன்றைய தலைமுறை அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறது  , அரசியலிலும் பங்கேற்கிறது . இப்பேற்பட்ட சூழலில் அவர்களுக்கு கொள்கைக்கான அரசியலை கற்றுக்கொடுக்கவேண்டுமே அல்லாமல் பதவி அரசியலை கற்றுக்கொடுக்க கூடாது .

 

பாமகவின் இத்தகைய முடிவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்களை பாமரன் கருத்து வரவேற்கின்றது . அதேபோல பாமக பெண் நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறியதும் மகிழ்ச்சிக்கு உரிய செய்தி .

ஒரு கட்சி, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு மாறாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அதிலிருந்து தயங்காமல் வெளியேற துவங்குங்கள் . அப்படி செய்ய துவங்கிவிட்டால் மக்களின் கட்சியாக அது மாறிவிடும் .

 


 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *