உங்க வீட்டு பெண்களை அனுப்புங்க – சீறிய முத்துலட்சுமி ரெட்டி ஏன்? | Muthu Lakshmi Reddy on Deva Dasi Bill

முத்துலட்சுமி ரெட்டி
முத்துலட்சுமி ரெட்டி

 

தேவதாசி முறையினை ஒழிப்பதற்காக முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த மசோதாவினை கடுமையாக எதிர்த்த சத்திய  மூர்த்தி அய்யர் என்பவருக்கு எதிராக ஏற்கனவே தேவதாசிகளாக இருந்த சமூகத்தினர் அயர்ந்துவிட்டார்கள் , வேண்டுமானால் உங்களது சமூகம் சார்ந்த பெண்களை அனுப்பிடுங்கள் என சீறினார் .

 


 

தேவதாசி முறை



குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த பெண்களை கோயில்களில் பணிபுரிய கடவுளுக்காக அர்பணித்துவிடுவார்கள் . அவர்கள் கடவுளை கணவனாக நினைத்துக்கொண்டு தாலிகட்டிக்கொள்வார்கள் . இவர்களின் பணி கோயிலில் பணிவிடை செய்வது , நடனம் , பாடல் போன்றவற்றை கோயில்களில் அரங்கேற்றம் செய்வது என கோயில்பணிகளையே ஆரம்பகாலத்தில் செய்துவந்தனர் .

 



நாளடைவில் கடவுளுக்கு பணிவிடை செய்ய நேர்ந்துவிடப்பட்ட பெண்களை பெரிய பெரிய செல்வந்தர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்ய நிர்பந்தித்தனர் . நாளடைவில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாசிகளாக ஆக்கப்பட்டார்கள் , அவர்களின் குலத்தொழிலாகவே அது மாறிப்போனது .

 


 

தாசிமுறையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்



எப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தொழில் ஒதுக்கபட்டதோ அதனைபோலவே சில சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு தாசி தொழில் ஒதுக்கப்பட்டது , அக்குலத்தை சேர்ந்த பெண்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதனை செய்தே ஆகவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர் . இதனை எதிர்த்து பல குரல்களும் அவ்வப்போது எழவே செய்தன .

1868 ஆம் ஆண்டு இதற்கான முதல் முயற்சி தொடங்கியது , மகாண அரசுகளின் கருத்தை அறிந்து இம்முறையை ஒழிக்க தயார் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது

1912 உட்பட பல தருணங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன .

ஆனாலும் தொடர்முயற்சிகள் இல்லாமல் போனதால் தாசி முறை நீடித்தது .

 




சீறிய முத்துலட்சுமி ரெட்டி



இறுதியாக பிப்ரவரி 02 1929 இல் தேவதாசி ஒழிப்பு மசோதா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டுவரப்பட்டது . அப்போது அந்த மசோதாவினை எதிர்த்த சுயராஜ்ய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர் பின்வருமாறு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார் .

“தாசிகள் குலம் இன்பத்தை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் , அவர்களை ஒழித்துவிட்டால் சமூகத்திற்கு கெடுதல் தான் ஏற்படும் . குடும்பப்பெண்கள் சீரழிந்து போவார்கள் . பரதநாட்டிய கலை ஒழிந்துபோகும் . இறைவனுக்கு எதிராக  இம்முறையை ஒழிப்பது கேடுவிளைவிக்கும் . அடாத செயல் ” என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார் சுயராஜ்ய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர்.

 

செல்வந்தர்களுக்கு சுகம் கொடுக்க சில குலத்துப்பெண்களை சின்னாபின்னமாக்குவது தவறல்ல என பேசிய சத்தியமூர்த்தி  அய்யரின் பேச்சு முத்துலட்சுமி ரெட்டி அவர்களை கோபமடைய செய்தது . அவர் பின்வருமாறு பதில் அளித்தார் .

குறிப்பிட்ட சில குலத்துப்பெண்கள் தேவதாசிகளாக இருந்து அலுத்துப்போய்விட்டார்கள் . அவர்கள் போதும் என நினைத்துவிட்டார்கள் . சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் , தாசிகள் சமூகத்திற்கு தேவையென கருதினால் தன் குலம் சார்ந்த பெண்களை தாசி தொழிலுக்கு அனுப்பி சிற்றின்பத்தை வாரி வழங்கிட செய்யலாம் என சீறினார் .

இறுதியாக தாசி ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது , குறிப்பிட்ட சில சமூகப்பெண்களை சீரழித்தது ஒழிந்தது .


 

பாமரன் கருத்து

 

 

Share with your friends !

One thought on “உங்க வீட்டு பெண்களை அனுப்புங்க – சீறிய முத்துலட்சுமி ரெட்டி ஏன்? | Muthu Lakshmi Reddy on Deva Dasi Bill

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *