நான் என்கிற அடையாளம் இழந்தேன் – இப்படிக்கு அவள்

பெண்களுக்கு பொருளதார சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்பதையும் நல்ல திறமை படிப்பறிவு இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டு அடுப்பாங்கரையோடு அடங்கிப்போகும் பெண்களுக்கு இப்பதிவு .

நான் , தம்பி , அப்பா, அம்மா என நிறைவான குடும்பம் . அப்பா நல்ல வேலையில் இருப்பதால் கஷ்டம் தெரியாமல் என்னையும் தம்பியையும் வளர்த்து வந்தார் .

அப்பாவிற்கு பெரியார் கொள்கைகளின் மீது பெரிய நாட்டம் . ஆகையால் எங்கள் வீட்டில் ஆண் பெண் பேதமிருக்காது . அனைவரையும் சமமாகவே பார்க்க வேண்டும் என சொல்லியே வளர்த்து வந்தார் .தம்பி படித்த பள்ளியிலேயே நானும் படித்தேன் . அவனுக்கு என்ன செய்வாரோ அதில் குறைவில்லாமல் எனக்கும் செய்வார் .

பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தேன் .நான் படித்து முடித்தவுடன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன் . நான் ஓராண்டு நன்றாக வேலை பார்த்தபடியால் எனக்கு பதவி உயர்வும் கொடுத்தார்கள் .

எனக்கு இருபத்து மூன்று வயதிருக்கும் போது ஒரு விபத்தில் அப்பா எங்களை விட்டு பிரிந்து போனார் . அவர் சேமித்து வைத்த பணத்தையும் விபத்து இழப்பீட்டில் வந்த பணத்தையும் வைத்து எனது அம்மா என் திருமணத்தை 25 வயதில் நடத்தி முடித்தார் .

கணவர் நான் வேலை பார்த்த ஊரில் இருந்து தொலைவில் இருந்தபடியால் அம்மா , மற்றவர்களின் அழுத்தத்தால் வேலையை விடவேண்டியதாகிவிட்டது .நாட்கள் நகர்ந்தன .

அப்பாவை போல இல்லை என் கணவர் . என் கணவர் வீட்டில் ஆண்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் பெண்கள் . எதிர்த்து பேசிவிட்டால் அவ்வளவுதான் தன் மானம் மரியாதை அத்தனையும் போய்விட்டதாக கருதிவிடும் நபர்களாகவே இருந்தார்கள் .

அப்பா சொல்லிகொடுத்த விசயங்கள் என் மனதில் இருந்தபடியால் என்னால் இந்த மாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை . அப்பா இருந்தபோது எனக்கு என்ன உடை வேண்டும் என்ன கலரில் வேண்டும் என அனைத்தையும் நானே செய்வேன் . ஆனால் இங்கோ அவர் எடுத்துக்கொண்டு வருவதை நான் கட்டியாக வேண்டும் .

ஏதாவது நான் கருத்து சொல்லிவிட்டால் அவ்வளவுதான் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என அமுக்கிவிடுகிறார் என் கணவர் . இத்தனைக்கும் அவரை விட கூடுதல் மதிப்பெண் பெற்றவள் நான்தான் .நான் வேலைக்கு செல்லும்போது இப்போது அவர் வாங்கக்கூடிய சம்பளத்தைவிட அதிகமாகவே பெற்றேன் . இதை பெருமைக்காக சொல்லவில்லை , நான் ஒருமண்ணுக்கும் லாயக்கில்லாதவள் அல்ல என்பதற்க்காக சொல்கிறேன்

வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்கிறேன் . ஆனால் சம்பாதிக்கும் அவர்தான் முடிவுகளை எடுப்பாராம் .

ஆனால் என் கணவரின் அண்ணண் மனைவிகள் இதனை சாதாரணமாக எடுத்துகொண்டு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் .

என்னால் இந்த மாற்றங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை . ஒவ்வொருமுறையும் ஆண் பெண் பேதம் பார்க்கப்படும் போதெல்லாம் எனக்கு கோபமாய் வருகின்றது .ஆனால் என்ன செய்வது அம்மாவிடம் செல்ல முடியாது ,ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு சுமையாக முடியாது . இனிமேல் வேலைக்கு செல்வதும் அவ்வளவு எளிதல்ல .வாழ்க்கையைஓட்டுகிறேன் சுய மரியாதையில்லாமல் அடையாளமில்லாமல் .

என்னோடு இந்த கொடுமை முடியுமென்றால் அவர் என் குழந்தைகளுக்கும் இதையே கற்று கொடுக்கிறார் . என் மகன் மகளிடம் , ஆண் சொல்வதைத்தான் பெண் கேட்க வேண்டும் . பெண்கள் சமைக்க கற்றுக்கொண்டால் போதும் என .

அவர் இருக்கும்போது இதைக்கூட என்னால் மறுத்து ஆண் பெண் இருவரும் சமமென்று சொல்ல முடியாதவளாய் ஆகிவிட்டேன் . ஆனாலும் அவர் இல்லாதா நேரங்களில் பெண்களை மதித்து நடக்கவேண்டும் என என் மகனிடமும் ஆணுக்கு பெண் நிகரானவள் என என் மகளிடமும் கூறியே வருகிறேன் .

எனக்கு ஒன்றுமட்டும் இப்போது புலப்படுகிறது . ஒருவேளை நான் வேலைக்கு சென்று பொருளதார சுதந்திரம் அடைந்திருந்ததால் நான் தனியாக கூட வாழ்ந்திருக்க முடியும் . என் பிள்ளைகளை என் அப்பா வளர்த்ததை போல வளர்ந்திருக்க முடியும் .

நான் இப்போது நான் என்கிற அடையாளம் இழந்தவளாக இருக்கிறேனோ என எண்ணுகிறேன் .
இக்கால தோழிகளே திருமணத்திற்கு பிறகு வேலையை உதறி தள்ளிவிட்டு கணவன் பின்னால் சென்றுவிடாதீர்கள் . முடிந்த அளவுக்கு வேலைக்கு சென்று பொருளதார சுதந்திரத்தோடு வாழுங்கள் .அதுவே உங்களுக்கு தைரியத்தை தரும் .உங்களுக்கு அடையாளமாக இருக்கும் .

இப்படிக்கு அவள்
காவ்யா

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *