இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன?

 


 

புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீதான தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள் . ஒட்டுமொத்த இந்தியாவையும் படுதுயருக்கு ஆளாக்கிய இந்த செயலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தீவிரவாத குழுக்களின் தங்குமிடங்களில் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தின . இந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் , இந்திய போர் விமானம் ஒன்றினை சுட்டு வீழ்த்தியது . பாராசூட் மூலமாக தரையிறங்கிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டிடம் பிடிபட்டார் .

 

 

இருநாடுகளுக்கு இடையேயான இந்த பதட்டமான சூழலை “மிக மிக பதட்டமான சூழலாக மாற்றி ” செய்திகளை அடுக்கடுக்காய் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள் . போர் தவிர்க்கபடவேண்டும் என்ற எந்தவொரு நோக்கமும் அவற்றின் செயல்பாடுகளில் தென்படவேயில்லை என்பது வருத்தத்திற்கு உரியது .

 

இந்திய அரசாங்கமும் ராணுவமும் கூட இந்த விசயத்தை நிதானமாக கையாண்டிருக்கலாம் , ஆனால் தமிழக செய்தி நிறுவனங்களும் , youtube சேனல்களும் சமூக வலைதள நண்பர்களும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டன .

 




இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன உங்களது பதிலை கமெண்டில் பதிவிடுங்கள்.


 

விவாதங்கள் , யூகங்கள் , அனிமேசன் வீடியோக்கள் , துரித செய்திகள் என ஊடகங்கள் அல்லோலப்பட்டன . கிட்டத்தட்ட நமது ராணுவம் பற்றிய அனைத்து தகவல்களையுமே நமது ஊடகங்கள் விவாதித்துவிட்டன .

 




ஒவ்வொரு ராணுவ வீரருமே வீர தீரத்தில் சிறந்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது .நமது ராணுவ வீரர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதனை உறுதிப்படுத்திட ஒரு வீடியோ வெளியிடப்பட்டது . ஆனால் அதனையும் நமது ஊடகங்களில் சில தில்லாக பேசிய ராணுவ வீரர் என்கிற தொனியில் செய்திகளை வெளியிட்டன . அரசாங்கங்கள் நல்ல நோக்கத்திற்காக சில செயல்களை செய்ய முன்வரும்போது அதனை வரவேற்காமல் கோழைத்தனம் , வீரம் என பேசுவது எதற்காக ?  

 


பின்வரும் குறுஞ்செய்தி நம்ம ஊர் ஊடகங்கள் செயல்பட்டவிதம் குறித்த உண்மையை விளக்குகின்றன .

பாகிஸ்தான்  : நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் ?

அபிநந்தன் : நான் எதற்காக சொல்லவேண்டும் ?

மீடியாக்கள் : தமிழகத்தை சேர்ந்தவர் பிடிபட்டார் . அவர் இங்கெல்லாம் பணியாற்றி இருக்கிறார் . அவரது குடும்பம் இதுதான் .

 

ஊடகங்கள் இந்த செய்தியை ஒளிபரப்பவே  கூடாதா என கேட்டால் , நிச்சயமாக ஒளிபரப்பலாம் . ஆனால் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக செய்திகள் ஒளிபரப்பபடக்கூடாது . வெறுமனே மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்க்காகவே பல்வேறு தலைப்புகளுடன் செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் .

பொதுமக்கள் பதட்டமாக இருந்தால் அதனை தணித்து அமைதியை நிலைநாட்டும்  விதமாக செய்திகளை ஒளிபரப்பவேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கின்றது . இனியாவது பொறுப்புடன்  நடந்துகொள்ளுமா ஊடகங்கள் ?


Read this too :

போர் வேண்டுமா? 


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *