முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? – பாமரன் கருத்து

ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் சார்ந்த விசயம். தனிப்பட்ட உரிமை கூட. அதனை விமர்சிப்பது என்பது அடிப்படை நாகரீகமற்றது.
கோட் சூட்டில் முதல்வர்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருக்குவதற்காக தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கோட் சூட்டில் இருக்கும் புகைப்படங்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது [சிலர் வரவேற்கவும் செய்கிறார்கள்]. இது சரியா? முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? என்பது குறித்து விவாதிப்போம்.

எங்கே துவங்குகிறது பிரச்சனை?

#LondonAmbulanceService #NHS #London pic.twitter.com/C8gZnoIOdD

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) 30 August 2019

 

நாம் சிலரை “அவர்கள் இப்படித்தான்” என கணித்து வைத்துவிட்டோம். அதனை மாற்றிக்கொள்ள மறுக்கிறோம். ஜெயலலிதா என்றால் ஆளுமை மிக்கவர் என்பதனை போல சொல்லலாம். அதேபோலவே தான் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கட்சியினரை சாதாரண பொதுமக்களின் அளவிற்கு கூட அறிவுள்ளவர்கள், திறமையுள்ளவர்கள் என நாம் நம்பாமல் இருந்துவருகிறோம். குறிப்பாக அதிமுகவில் பெரிதாக செயல்பட வாய்ப்பு கிடைக்காத அமைச்சர்களை நாம் இன்னும் கீழே போய் வைத்துவிட்டோம்.

திடீரென நடைபெற்ற ஜெயலலிதா அவர்களின் மறைவு ஒரே நேரத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அதனை நிரப்பிட ஏராளமான முயற்சிகள் இங்கே நடந்தன. இறுதியாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அன்று நாம் எப்படி அவர்களை நினைத்துக்கொண்டு இருந்தோமோ அதைப்போலவே தான் இன்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதில்தான் இந்த பிரச்சனை துவங்குகிறது.

காலமும் அனுபவமும் தான் ஒருவரின் திறமையை அறிவை விசாலப்படுத்துகிறது என புரிந்துகொள்ளுங்கள்.

ஆடையை விமர்சனம் செய்யலாமா?

ஜனநாயக நாட்டில் ஆடை என்பது அவரவர் விசயம். ஆனால் அறிவாய் பேசிடும் பலர் தான் முதல்வரின் ஆடையை வைத்து கிண்டலித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கிண்டல்கள் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை குறிவைத்து நடத்தப்படுகிறதா அல்லது எடப்பாடி பழனிசாமி திறமை இல்லாதவர் என்ற தோற்றத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க நடத்தப்படுகிறதா என தெரியவில்லை.

யார் எந்த நோக்கத்தில் செய்தாலும் பொதுமக்கள் ஒன்றினை உணர வேண்டும். எது எப்படி இருந்தாலும் தற்போதைய சூழலில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் நம்முடைய முதல்வர். அவர்தான் தமிழக்தின் பிரதிநிதி.ஆகவே அவர் மீது நீங்கள் ஆடை குறித்து கிண்டல்களை பதிவு செய்தால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் கிண்டல் செய்வதாகத்தான் அர்த்தப்படும், பகிர்வதற்கு முன்பாக நீங்கள் இதனை உணர வேண்டும்.

சீமானை இதில் வரவேற்கிறேன்

கோட் சூட்டில் முதல்வர்

 

முதல்வர் ஆடை விசயத்தில் திரு சீமான் அவர்கள் அருமையாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஆடை அவரவர் விசயம், அவர் எனது மண்ணின் மைந்தர் என உணர்வோடு மிகச்சரியாக பேசியிருக்கிறார். இந்த உணர்வு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

இப்படி சிந்திப்பதற்கு நீங்கள் மிகப்பெரிய புத்தராக இருக்க வேண்டும் என அவசியமில்லை. தூய்மையான மனம் கொண்ட சாதாரண மனிதம் கொண்டவராக இருங்கள். அனைத்திற்கும் சிரிக்காதீர்கள், அனைத்தையும் சிரிப்பாக சித்தரிக்காதீர்கள்.

சிந்திப்போம்!

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

One thought on “முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? – பாமரன் கருத்து

  • September 1, 2019 at 8:11 pm
    Permalink

    சரியான கூற்று. இதை மக்களுக்கு உறக்க கூறினால் தான் தன் தவறை உணர்ந்து சரியாக செயல்படுவார்கள்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *