44 உயிர்கள் – கீழவெண்மணி அதிர்ந்தது டிசம்பர் 25, 1968

தஞ்சை , நம்மை பொறுத்தவரைக்கும் நெற்களஞ்சியம் . பச்சை பசேலென்று ஜொலிக்கும் ஊர் . 1960 களில் இப்போதிருப்பதைவிட பலமடங்கு செழித்து விளங்கியது . அந்த பசுமைக்கு பின்னால் எண்ணற்ற கூலித்தொழிலாளிகளின் வியர்வையும் ரத்தமும் அடங்கியிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது . காரணம், அந்தப்பசுமை அவ்வளவு வீரியமாக இருந்தது. மிராசுதாரர்களும் பெரும் நிலத்துடன் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடமே நிலம் இருக்கும். உழைக்கும் திறன் உடம்பில் இருக்கிறவரைக்கும் உழைக்கலாம். அவர்கள் ஊதியமென்று எதை கொடுக்கிறார்களோ அதை மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அன்றைய நிலைமை. பெரும்பாலானவர்களுக்கு ஒருபடி நெல் , ஒரு கோப்பை கூழ் தான் ஊதியம் . கிட்டத்தட்ட அடிமையாகவே அவர்கள் நடத்தப்பட்டார்கள் .

Read more

NRC,CAA,CAB முழு விளக்கம் தமிழில் | அசாம் ஏன் கொதிக்கிறது?| முஸ்லீம் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

NRC என்பதற்கான ஆங்கில விளக்கம் National Register of Citizens. தமிழில் தேசிய குடிமக்கள் பதிவேடு என சொல்லலாம். அதாவது இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதற்கான ஒரு பதிவேடு. இந்தியாவின் குடிமக்கள் யார்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்? என்பது குறித்த சட்டம் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

Read more

உங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் அபாயம் குறித்து எப்படி சொல்லிக்கொடுக்க போகிறீர்கள்?

சுற்றுசூழல் பொறியாளரும் ஆர்வலருமான ஜென்னா ஜெம்பெக் நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் கடல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகபணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் 8.8 மில்லியன் டன்கள் குப்பை கடலில் கலப்பதாக அறிந்துகொண்டார், அதிர்ச்சியும் அடைந்தார். இதனால் தொலைக்காட்சியில் பணியாற்றுவதோடு நின்றுவிடாமல் அரசாங்கம் மற்றும் பல தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து இதற்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்.

Read more

வாழ்வில் ஜெயிக்க கல்வி ஒரு தடை அல்ல !

பள்ளிப்படிப்புகளை சிறப்பாக படிக்கின்ற குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள், எதிர்காலத்தில் அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர், ஆசிரியர் இடத்தில் இயல்பாக எழுகிறது. மறுபக்கம் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்காத குழந்தைகள் திறமை அற்றவர்கள் என கருதப்படுகிறார்கள். அவர்களால் எதிர்காலத்தில் சாதிக்கவே முடியாது என கருதப்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாணவர்கள் மனதிலும் விதைத்து விடுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை.

Read more

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள்? சிந்திக்க துவங்கிவிட்ட பலர்

சம்பாரித்த காசைத்தானே தருகிறார்கள், இனி எப்படியும் சம்பாரிக்கத்தானே போகிறார்கள் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நீங்கள் செய்வதை நியாப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

Read more

மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் – தமிழ்நாடு “இந்தியா டுடே” – State of the States 2019

இந்தியாவின் முன்னனி நாளிதழான இந்தியா டுடே ஆய்வில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலம் மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் ஆகியற்றிற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more

உனக்கு வெற்றி என்பது எது என சிந்தித்து அதனை நோக்கி செயல்படு

விவரம் தெரிந்தவுடன் கிட்டத்தட்ட அனைவருமே “சாதிக்க வேண்டும்” “எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்ற எண்ணத்துடனே வாழ்க்கையை துவங்குகிறோம். இதில் சிலர் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள் பலர் சாதிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் என சொல்கிறார்கள்.

Read more

கழிவுநீர் தொட்டிகளில் மரணம் தவிர்க்கப்பட வேண்டும்

ஒரு அறிவார்ந்த சமூகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது. அதிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பதென்பது வருத்தம் அளிக்கிறது.

Read more

ஏன் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம். இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வரலாற்றை நமக்கு ஏற்றவாறு திரித்து எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒன்றுமில்லாத இந்தியாவை கட்டியெழுப்பியதில் நேரு மிக முக்கியமானவர்.

Read more

வாழ்க்கையில் ஜெயிக்க ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன ஒரே ஐடியா இதுதான்

“Innovation is saying ‘no’ to 1,000 things. You have to pick carefully.” ஒரு படிப்பு, ஒரு தொழில், ஒரே விசயத்தில் முயற்சி என

Read more