பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம் | Periyar

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். பெரியார் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது ஒரு உயர்ந்த சாதியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளையால் எப்படி ஏழை எளிய மக்களின் வலியை உணர முடிந்தது? தான் சார்ந்த மேல்தட்டு மக்களையே எதிர்க்க துணிந்தது எப்படி? சாதியின் கொடுமையை எந்த தருணத்தில் பெரியார் உணர்ந்திருப்பார்? என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதற்கான பதிலை அமரர் கே பி நீலமணி என்பவர் எழுதிய “தந்தை பெரியார்” என்ற புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் இந்தப்பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

Read more

ரஜினியின் எச்சரிக்கை தமிழகத்தில் பலிக்குமா? | Rajini

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

Read more

டாஸ்மாக் மூலமாக கோடிகள் கொட்டும் ஆனால்…

அரசிடம் பணம் இல்லைஆகையால் டாஸ்மாக் கடைகளை திறப்பதைத்தவிர வேறு வழியில்லை என சிலர் சொல்கிறார்கள். உண்மைதான், அரசுக்கு குறிப்பிடத்தகுந்த வருமானம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வருகிறது என்பது உண்மைதான். தற்போது வெகுநாள்கள் கழித்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் மூலமாக கோடிகள் கொட்டப்போகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த கோடிகள் பணம் படைத்தவர்களின் பைகளில் இருந்து கொட்டப்போவது இல்லை. அன்னாடங்காச்சிகளின் பைகளில் இருந்துதான் கொட்டப்போகிறது. இதுதான் இங்கே பிரச்சனையே. இதற்காகத்தான் நான் தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது சரியானது அல்ல எனக்கூறுகிறேன்.

Read more

இவ்வளவு தான் வாழ்க்கை – புரிந்துகொள்வோம்

நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வோம். ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. எத்தனை பங்களாக்களில் சோகங்களோடு இரவில் தூங்குகிறார்கள், மிகப்பெரிய கார்களில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியும். ஆனால் உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சிப்போம். போதும், ஓடியது போதும். நிம்மதியாக வாழுவதற்கு இதுபோதும் என உங்களுக்கு தோன்றுகிறவரை ஓடுங்கள். பிறகு நின்றுவிடுங்கள், இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ பழகுங்கள்.

Read more

ஜோதிகாவிற்கு ஆதரவாக நிற்பது அவசியம்

அரசுப்பள்ளிக்கூடங்களின் அவல நிலையை தோலுரித்துக்காட்டிய ராட்சசி திரைப்படத்திற்காக விருது வாங்குவதற்காக ஒரு தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசினார் நடிகை ஜோதிகா. ராட்சசி ஒரு சமூகப்படம் என்பதனால் அது சார்ந்து சில கருத்துக்களை மேடையில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சி அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிறகு அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர் ஏதோ ராஜராஜ சோழன் படைப்பான தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி அசிங்கமாக பேசிவிட்டதைப்போலவும் தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்துவிட்டதைப்போலவும் காட்ட ஒரு கூட்டம் முயற்சி செய்துகொண்டிருந்தது.

Read more

கட்சி சார்பில்லாத செய்தி நிறுவனத்தை உருவாக்க முடியாதா?

தற்போது பத்திரிகையாளராக இருக்கும் ஒவ்வொருவரும் இளம் வயதில் “நேர்மையாக செயல்பட்டு உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக நாம் இருக்க வேண்டும்” என்ற விருப்பத்தின் பெயரிலேயே இந்தப்பணிக்கு சேர்ந்தவர்கள். ஆனால் அதன்படி நடக்காமல் போகும்போது அரசியல்வாதிகள் சொல்லும் அதே அப்பட்டமான காரணத்தைத்தான் தவறாக நடுநிலை தவறி நடக்கும் பத்திரிகையாளரும் சொல்கிறார். அது என்னவெனில் “எங்க சார் நம்மள நல்லவனா இருக்க விடுறாங்க” என்பதுதான். இவர்கள் சாக்குப்போக்கு சந்தர்ப்பவாதிகள், வேறென்ன சொல்ல முடியும். ஆனால் எத்தகைய சூழல் வந்தாலும் நடுநிலை தவறாமல் செயல்படும் பத்திரிகையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் மேல் வெளிச்சம் படுவதே இல்லை, மாறாக அவர்கள் வெறுத்து ஒடுக்கப்படுகிறார்கள்.

Read more

யானையும் மெல்லிய சங்கிலியும் – Motivational Story in Tamil

நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே முடியாது என நினைத்துக்கொண்டு முயற்சி செய்யாமலே இருந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் முயற்சி செய்தால் நிச்சயமாக நம்மால் முடியும். தடைகளை தகர்த்து எறிந்துவிட்டு வெற்றி எனும் சிகரத்தை அடைய நம்மால் முடியும்.

Read more

டெல்லியில் காற்றை தூய்மையாக்கிய கொரோனா ஊரடங்கு | சுவாசிக்க ஏற்ற காற்று இருப்பதாக தகவல்

கடந்த வாரங்களில் டெல்லியில் இருப்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் இடையே ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான செய்தி பரவிக்கொண்டு இருந்தது. அதில் “இதுவரைக்கும் சுவாசிக்க ஏதுவான காற்று டெல்லியில் இல்லை எனவும் நீங்கள் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு வைக்கப்படும் வேட்டு எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காற்றின் தர அட்டவணையை பார்த்தால் “நன்று [Good]” என வருகிறது. இப்படி வருவது ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மட்டும் தான் சாத்தியம், நம்பமுடியவில்லை” என தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Read more

இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா? | Covid 19 from dead bodies

இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக்காரணம், அனுமதி அளித்தால் எங்கே தங்கள் பகுதியில் வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம் தான். தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் நாம் சில உண்மைகளையும் தெரிந்தகொள்ள வேண்டும்

Read more

கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க …வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அதே நிலை வரும். கணவன்மார்களே, ஒரு மனைவியின் தனிமை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

Read more