துணைநிலை ஆளுநர் – முதல்வர் யாருக்கு அதிகாரம் ? தீர்ப்பு என்ன சொல்கிறது ?
வென்ற சனநாயகம்
இதே வழக்கில் இதற்கு முன்னர் உயர்நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து இருந்தது . இதனை எதிர்த்துதான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் இல்லை ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் இருப்பதாக வாதிட்டது .உச்சநீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது .
தீர்ப்பின் முக்கிய விவரங்கள்
துணை நிலை ஆளுநருக்கு என தனி அதிகாரம் ஏதுமில்லை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைப்படியே நடந்துகொள்ள வேண்டும்
அமைச்சரவை அனைத்து முடிவுகளுக்கும் ஆளுநரின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை
யாருக்கு அதிக அதிகாரம் என்பது அந்ததந்த விசயங்களை பொறுத்தது .
புரிந்துகொள்வார்களா துணை நிலை ஆளுநர்கள் மற்றும் ஆளுநர்கள்
சிலர் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாண்டிச்சேரிக்கு பொருந்துமா தமிழக ஆளுநருக்கு பொருந்துமா என்றெல்லாம் விவாதம் நடத்துகிறார்கள் , அது தேவையில்லாதது .
அனைவருக்குமே இது பொருந்தும்
ஆளுநர் பதவியென்பது ஆட்டுக்கு தாடியை போன்றது தான்
மத்திய அரசின் மேற்பார்வையாளராக இருக்கத்தான் ஆளுநர் என்பவர் நியமிக்கப்படுகிறார் . அவரது முக்கியவேலை மாநில அரசை கண்காணித்து சட்டம் ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதனை கண்காணிப்பதும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அதனை நிர்வகிப்பதும் தான் .
ஆளுநர் – அமைச்சரவை உறவு எப்படி இருக்க வேண்டும் ?
ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் . இல்லையெனில் மாமியார் மருமகள் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் மகனை போல மக்களும் அதிகாரிகளும் குழப்பமடைவார்கள் .
யார் சொல்வதை கேட்டு நடைப்பது என்கிற சூழ்நிலைக்கு அதிகாரிகளை தள்ளுவது நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் .
இனி அந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன் .