10 ideas to teach your child “The Value of Time” | நேர மேலாண்மையை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி?

காலம் பொன் போன்றது” என்கிற பழமொழியை நாம் கேட்டிருப்போம் . ஆனால் உண்மையில் நேரம் பொன்னோடு மட்டுமல்ல எதனோடும் ஒப்பிட முடியாதது .
உலகினில் இழந்த எதனையும் மீட்டெடுக்க முடியும் , நேரத்தை தவிர .

அப்படிபட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் வாழ்விலே சாதித்தார்கள் . நேரத்தின் முக்கியதுவத்தை உணராமல் செயல்பட்டவர்கள் “நேரமில்லை” என சொல்லிக்கொண்டு சாதரண வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டுவிட்டார்கள் .

உங்களது குழந்தை சாதனையாளராக வேண்டுமா அல்லது சாதரண மனிதனாய் வாழ்ந்து மடிய வேண்டுமா என்றால் நிச்சயமாக உங்களின் பதில் சாதனையாளராக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் . அப்படியெனில் இன்றே நேரத்தின் முக்கியதுவத்தை உங்களது குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள் .

இதோ உங்களுக்கு சில ஐடியாக்கள் …
  • ஒவ்வொரு குழந்தையும் பல பழக்கவழக்கங்களை  பெற்றோரிடம் இருந்தே கற்றுக்கொள்கின்றன . ஆகவே நேரத்தின் முக்கியதுவத்தை  முதலில் நீங்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் . உதாரணத்திற்கு காலையில் 5 மணிக்கு தவறாமல் எழுவது
    6 மணிக்கு உடற்பயற்சி செய்வது தவறாமல் குடும்பத்தோடு 8 மணிக்கு காலை உணவு அருந்துவது போன்ற பல பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம்  .

 

 

  • குழந்தைகளுக்கு சின்ன சின்ன விளையாட்டுபயிற்சிகளை வழங்கலாம் . குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்தால் பாராட்டலாம் , சாக்லேட் வழங்கலாம்  .

 

  • வீட்டுப்பாடங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக முடித்தால் கூடுதலாக விளையாட விடுவது , தொலைக்காட்சி பார்க்க விடுவது என அவர்களை ஊக்கப்படுத்தலாம் .
  • நேரம் தவறி ஒவ்வொரு விசயங்களை செய்யும்போதும் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதனை அவ்வப்போது உதாரணத்தோடு சொல்லி புரிய வைத்திடுங்கள். உதாரணத்திற்கு தாமதமாக எழுவதனால் பள்ளி வேனை புடிக்க முடியவில்லையெனில் அதையே உதாரணமாக சொல்லிக்கொடுங்கள் .

 

 

  • ஒருவர் நம்மை சந்திக்க வருகின்றார் அல்லது நாம் செல்கின்றோம் எனில் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நம்மை பற்றிய எண்ணத்தை எவ்வாறு குறைக்கும் என்பதனை சொல்லிக்கொடுங்கள் .

 

  • கொடுத்த வாக்குறுதியை கொடுத்த காலத்திற்குள் முடிப்பது எவ்வாறு வாழ்க்கைக்கு உதவும் , பிறருக்கு நம் மீதான நமபிக்கையை அதிகரிக்கும் என்பதனையும் சொல்லிக்கொடுங்கள் .

 

  • உங்கள் குழந்தைகளுக்கு கடிகாரம் ஒன்றினை வாங்கிக்கொடுங்கள் . வாங்கிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு செயலையும் செய்யும்போது உதாரணத்திற்கு குளிப்பதற்கு , சாப்பிடுவதற்கு , விளையாடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோம் என்பதனை கவனிக்க சொல்லுங்கள் .

 

  • குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அதே நேரத்தில் நீங்கள் ஒரு விசயத்தை திணித்தால் எளிதில் வெறுத்தும் விடுவார்கள் . ஆகவே பொறுமையாக அவர்கள் விரும்புகிற விதத்தில் சொல்லிக்கொடுங்கள் . நிச்சயமாக கற்றுக்கொள்வார்கள் .

 

  • மனிதனாக பிறந்த அனைவருக்குமே பிடித்தமான விசயம் “பாராட்டு”  . ஆகவே ஒவ்வொரு முறையும் குழந்தை சிறப்பாக செயல்படும்போது பாராட்டிட மறக்காதீர்கள் .

 

  • எப்போதும் கடிகாரம் , சார்ட் என குழந்தைகளின் மீது நேர மேலாண்மை விசயங்களை திணிக்காமல் உதாரணங்களோடும் சாதித்தவர்களின் கதைகளோடும் கற்றுக்கொடுங்கள் .
PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *