அரசியல்வா(வியா)திகள்

அரசியல்வா(வியா)திகள்

 

அன்று ஒரு பேச்சு

இன்று ஒரு செயல்

அன்று ஒரு துண்டு

இன்று ஒரு வேட்டி

 

எழுதிவைத்த பேச்சுக்கள்

ஏமாற்ற துடிக்கும் எண்ணங்கள்

எண்ணிக்கையில்லா வேடங்களை

ஏற்று நடிக்கும் நடிகர்கள்

வெள்ளை வேட்டிக்குள்

ஊழல் கரை படிந்த உத்தமர்கள்

கறுப்பு காருக்குள்

கலர்த்துண்டு கனவான்கள்

கொள்கைகள் இல்லை
கோடிகள் உண்டு
உண்மைகள் இல்லை
ஊழல்கள் உண்டு

ஊருக்கொரு பங்களா வீடு

கிணறு முழுக்க பணமூட்டை

கழுத்துவரைக்கும் மலர்மாலை

ஊழலில் திளைத்த பெரு முதலை

 

இவர்களே இன்றைய அரசியல்வா(வியா)திகள்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *