ரஜினிக்கு இவைகளே அரசியல் எதிரிகள் ? – சமாளிப்பாரா ?
பல ஆண்டு காத்திருப்புகளுக்கு பிறகு ஒருவழியாக ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார் .
ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவருக்கான ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் ஒலிக்க தொடங்கிவிட்டன . ஆதரவு குரல்களை விட எதிர்ப்பு குரல்களை கவனிப்பதே சிறந்தது .அப்படி அவருக்கான எதிர் கருத்துக்களை காண்போம் .
தமிழர் அல்ல ரஜினிகாந்த் :
இந்த கேள்வி இன்றல்ல இதற்கு முன்பு பல சூழ்நிலைகளில் எழுந்திருக்கிறது . அப்போதெல்லாம் திரு ரஜினி அவர்கள் தான் தமிழன்தான் என கூறிவருகிறார் . என்னை தமிழனாக மாற்றிவிட்டார்கள் தமிழக மக்கள் எனவும் தமிழ்மக்கள் மீதான அன்பை கூறிவருகிறார் .
என்னதான் இருந்தாலும் அவரே கூறினாலும் அவர் தமிழரல்ல என்பதே உண்மை . இந்திய குடிமகனாக இருந்தாலே போதுமானது என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது .
ஆனாலும் இன்று பலரின் எதிர்ப்பு ரஜினி தமிழரல்ல என்பதே . இது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் நிச்சயமாக ஏற்படுத்தும் . தமிழனை தமிழனே ஆளவேண்டும் என கொள்கையினை வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாக்கையும் தடுக்கும் .
ரஜினியின் கொள்கை :
ஒரு சிறந்த அரசியல்வாதி யார் தெரியுமா ? தான் விரும்பும், மக்களுக்கு நலம் பயக்கும் கொள்கையினை கொண்ட ஒருவன் , அக்கொள்கையினை முன்நிறுத்தி அரசியலுக்கு வருவானே அவன்தான் .
ஆனால் ரஜினி அவர்களுக்கு அப்படி கொள்கையேதும் இல்லாதது போன்றே தெரிகிறது . தனியார் தொலைக்காட்சி நிரூபர் ” உங்கள் கொள்கை ” என கேட்டதற்கு ” சிரிக்கிறார் ” .
இந்த சிரிப்பு இதுவரை கொள்கையெதும் இல்லை என உணர்த்துகிறதா ?
கடந்தகால பங்கேற்பு :
ரஜினி கடந்த கால அரசியலில் சில முறை சில கட்சிகளுக்கு ஆதரவினை தெரிவித்துள்ளார் . ஆனால் அண்மைக்கால தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு கொடுத்ததில்லை .
அண்மைக்காலத்தில் அவர் தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்த போராட்டத்திலும் கலந்துகொண்டதில்லை . அதற்கு நாம் அரசியல்வாதி அல்ல என்கிற அவரின் நினைப்பா என தெரியவில்லை ..
ஆன்மிக அரசியல் :
இதுவரை அரசியலில் எவரும் பயன்படுத்தாத வார்த்தை ” ஆன்மிக அரசியல் ” . ஆனால் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் என அவரே விளக்கம் தருகிறார் .
மதம் வேறு ஆன்மிகம் வேறாக இருந்தாலும் மதமே ஆன்மிகத்திற்கு அடிப்படை என்கிறார்கள் . இருந்தாலும் ரஜினி அவர்களே நாங்கள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்போம் என விளக்கமளித்திருக்கிறார் .
உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம் .
சிஸ்டம் சரியில்லை :
அண்மையில் அரசியலுக்கு வரும் பலரும் தெரிவிப்பது சிஸ்டம் சரியில்லை என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டே .
சிஸ்டம் என்றால் சாதாரண சிஸ்டம் இல்லை நண்பர்களே ஒட்டுமொத்த அரசு நடைமுறையையும் இவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள் .
அப்படி குறை கூறும் ரஜினி அவர்கள் சிஸ்டம் முழுவதையும் எவ்வாறு மாற்றப்போகிறார் என்பதையும் கூறினால் நன்றாக இருக்கும் .
ரஜினியின் ஈடுபாடு :
உண்மையாலுமே ரஜினி அவர்களுக்கு அரசியலில் நுழைந்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என ஆசை இருந்திருந்தால் நிச்சயமாக முன்னரே வந்திருப்பார் .
ஆனால் அவருடைய இந்த தாமதமான முடிவில் சுற்றுப்புறத்தில் அவர் கூடவே இருப்பவர்களின் அழுத்தமும் ரசிகர்களின் அழுத்தமும் இருப்பதாகவே தெரிகின்றது .
சிறந்த கொள்கை , போராட்ட குணம் , நன்மை செய்யும் நல்லெண்ணம் இவை இருந்தால் மக்கள் ரஜினியையும் ஆதரிப்பார்கள் .
நன்றி
பாமரன் கருத்து