Leaf Wearables | Women Safety Device won 1 million dollars | பெண்கள் பாதுகாப்பு கருவி , $1 மில்லியன் வென்ற இந்தியர்கள்

Safety is a fundamental human right and should not be considered a luxury for women.

– Anu Jain, philanthropist and entrepreneur

ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்  பெண்களின் பாதுகாப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த இளம் தொழில் முனைவோர்கள் 1 மில்லியன் பரிசுத்தொகையினை வென்றுள்ளனர் .

கண்களுக்கு எளிதில் புலப்படாத மெல்லிய இந்த கருவி (Leaf Wearables) பெண்கள் ஆபத்தில் இருக்கும்போது உதவிக்கு அழைக்கும் , இண்டெர்நெட் வசதி இல்லாமலும் , மொபைல் போன் உங்களுக்கு அருகிலே இல்லாமல் போனாலும் .

 

    அனு (Anu) மற்றும் நவீன் ஜெயின் (Navin Jain) ஆகிய இரு அமெரிக்க இந்திய பாரம்பரியம் கொண்டவர்களினால் அமைக்கப்பட்ட Women’s Safety XPRIZE அமைப்பிடம் தான் 1 மில்லியன் பரிசுத்தொகையினை வென்றுள்ளது இந்திய அணி .

 

Prize winners
மாணிக் மேத்தா, நிகாரிகா ராஜிவ் , அவினாஷ் பன்சால் ஆகிய மூன்று பேரை கொண்ட இந்திய அணி தான் பரிசினை வென்றது .

 

நிர்பயா டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டபிறகு பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டும் ஆபத்தில் இருக்ககூடிய பெண்களை காப்பாற்ற , அவர்கள் கைகளில் அணிந்திருக்கும் கருவியின் மூலமாக சம்பந்தப்பட்டவர்க்ளுக்கு தகவல்களை தெரிவிக்கும் விதமாகவும் இந்த கருவி (Leaf wearables device) வடிவமைக்கப்பட்டது .

 

18 நாடுகளில் இருந்து பங்கேற்ற 85 அணிகளில் இறுதிப்போட்டிக்கு 5 அணிகள் சென்றன . அதிலும் வென்ற இந்திய அணி 1 மில்லியன் பரிசினை பெற்று இருக்கின்றது . இவர்கள் கண்டுபிடித்த கருவியினை 40 டாலருக்கும் குறைவான விலையிலேயே உருவாக்க முடியும் .

 

மேலும் இந்த கருவியில் ஆடியோவினை பதிவு செய்யக்கூடிய வசதியும் (Audio Recorder) இருக்கின்றது . ஒரு பெண் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும்போது பதியப்படுகிற ஆடியோ ஆதாரமாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு .
எதிரி உங்களிடம் இருந்து போனை பிடுங்கிவிட்டாலும் பெண்கள்  அணிந்திருக்கும் அந்த மெல்லிய கருவியினை கொண்டு பெண்கள் இருக்கும் இடத்தினை (Location) அறிய முடியும் .

இந்த leaf கருவியை மோதிரமாகவோ அல்லது வேறு விதமாகவோ அணிய முடியும் . ஆகையால் பிறரால் இந்த கருவியினை அடையாளம் கண்டுகொள்ள முடியாது .

மொபைல் போன் உதவியின்றி  செயல்படக்கூடியது இந்த கருவி , மேலும் குறைந்த நெட்ஒர்க் (Low Network Coverage) உள்ள இடத்திலும் இந்த கருவி செயல்படும் .

XPRIZE அமைப்பினுடைய நபர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பினை கருவியாக சந்தைப்படுத்த பல நிறுவனங்களிடம் அணுகியுள்ளனர் .

இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அரசாங்கமே அங்கீகரித்து கருவிகளை  உற்பத்தி செய்யவும் , அதனை பெண்களிடம் கொண்டு சேர்க்கவும் முன்வர வேண்டும் .

 

புதிய புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிப்பதோடு நில்லாமல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது அது அர்த்தம் பெறும் .

 

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *