பெண் மீது கற்பு திணிக்கப்பட்டது ஏன்? எப்போது?

 


 

சுருக்கம் : உண்மையில் கற்பு என்பது இருக்கின்றதா ? பெண்கள் பிறக்கும்போதே அதுவும் உடன்பிறக்கிறதா ? இல்லையென்றால் “கற்பு ” எங்கே இருந்து தொடங்கியது ? எதற்காக தொடங்கியது ?

 


 

ஆணுக்கு நிகராக பெண்கள் நடத்தப்படுவதில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் பெண் விடுதலை குறித்த  விவாதங்கள் அதிகமாக நடைபெற்றுவருகின்றன . அவை வரவேற்பிற்க்கு உரிய விசயங்களாகவே பார்க்கப்படுகின்றன .

 


 

தமிழ்ப்பெண்
தமிழ்ப்பெண்

 



பாதுகாப்பு என்கின்ற ஒற்றை காரணத்திற்காகவே பெரும்பாலான பெண்கள் வீட்டிற்குள்ளாகவே வைக்கப்படுகின்றனர் . இதற்கு மிக முக்கிய காரணம் , ஆண்களால் ஆபத்து நேர்ந்துவிடலாம் என்பது பிரதானமான காரணமாக கூறப்படுகின்றது . இன்னும் சரியாக சொன்னால் பெண்ணுடைய கற்பு பறிபோய்விடக்கூடாது  என்பதற்காக எனலாம் .

 


 

உண்மையில் கற்பு என்பது இருக்கின்றதா ? பெண்கள் பிறக்கும்போதே அதுவும் உடன்பிறக்கிறதா ? இல்லையென்றால் “கற்பு ” எங்கே இருந்து தொடங்கியது ? எதற்காக தொடங்கியது ?

 


 

இந்த கேள்விகளுக்கான விடைகளை திரு தமிழருவி மணியன் அவர்கள் தன்னுடைய பேச்சின்போது மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார் , நிச்சயமாக உங்களுக்கு அது புரிதலை ஏற்படுத்தும் என்கிற நோக்கத்திலேயே இப்பதிவு .

 


வேட்டை சமூகம்  

 

வேட்டையாடும் சிங்கம்
வேட்டையாடும் சிங்கம்

 




மனித இனம் தன்னுடைய ஆரம்பகாலத்தில் வேட்டையாடி வாழ்க்கை நடத்திடும் சமூகமாகவே இருந்தது . அந்த வேட்டை சமூகத்தில்
பெண் என்பவள் தான் ஆதிக்கம் மிக்கவளாக இருந்திருக்கிறாள். வேட்டையாடுவதும் உணவினை பங்கிட்டுக்கொடுப்பதும் குடும்பத்தை பாதுகாப்பதும் பெண்ணுக்கே உரியதாக இருந்திருக்கின்றது .

பிறகு எப்படி ஆண் பெண்ணை விட உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது ? மிக சுவாரஸ்யமான விசயம் இது .

 




வேளாண்மை சமூகம் 

 


நிலத்தை உழுதிடும் விவசாயி
நிலத்தை உழுதிடும் விவசாயி

 

வேட்டை சமூகத்தில் இருந்து மனித இனம் வேளாண்மை சமூகத்திற்கு மாறியது . அந்த தருணத்தில் தான் மிக முக்கிய மாற்றங்கள் நடந்தன

 


முதல் மாற்றம் : பொதுவுடமை சொத்துடைமையானது



அதுவரை காடுகள் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது என்ற மனிதர்களின் பொதுவுடமை எண்ணம், வேளாண்மை சமூகம் என மாறிய போது “சொத்து” என்கின்ற எண்ணம் மேலோங்கியது . அப்போது சொத்துடைமை என்ற எண்ணத்திற்கு மனிதன் ஆட்பட்டான் .

அந்த தாக்கத்தினால் தன்னுடைய சொத்துக்கள்  அனைத்தும் தன் மூலமாக பிறந்த குழந்தைக்கு மட்டுமே போய்ச்சேர  வேண்டும் என விரும்புகின்றான் . அப்படியானால் தன்னுடன் இருக்கும் பெண் வேறொருவருடன் சென்றுவிடக்கூடாது , அவளும் தனக்கு உட்பட்டவளாக இருக்கவேண்டும் எனவும் விரும்புகின்றான் . “கற்பு” உருவானது .

ஒரு பெண் இன்னொரு ஆணால் பாலியல் ரீதியான செயலுக்கு ஆட்படும்போது “கற்பு” போய்விட்டது என கூறிடும் நாம் ஏன், ஆண் இன்னொரு பெண்ணுடன் அதே வேலையை செய்திடும்போது ஆணின் கற்பு போய்விட்டதாக கூறுவது கிடையாது ?

 


இரண்டாவது மாற்றம் : நெருப்பினை பெண்ணிடம் ஒப்படைத்தது

 

சமைக்கும் பெண்
சமைக்கும் பெண்



மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய கண்டுபிடிப்பான “நெருப்பு” கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதனை பெண்ணிடம் பாதுகாக்க ஒப்படைக்கப்பட்டது  . அன்றுமுதல் இன்றுவரை நெருப்பும் அது இருக்கின்ற சமையலறையும் பூஜை அறையும் பெண்களுக்கானதாக மாறியது . இன்றுவரை அந்த தொடர்பு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது .


உலகம் அனைவருக்கும் பொதுவானது . அப்படியிருக்கின்றபட்சத்தில் ஆணுக்கு மட்டுமே இது , பெண்ணாக பிறந்துவிட்டால் இது என பாலினத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு நடத்துவது என்பது தவிர்க்கப்பட வேண்டியது . கால ஓட்டத்தில் நன்னறிவை பெற்றிட்ட சமூகமானது அடையவேண்டிய உயரம் அதுவே .

 




பாமரன் கருத்து

பாமரன் கருத்து





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *