உண்மையான பெண்ணியம் எது தெரியுமா? | Which is real Feminism? | Message to Women

ஆண்களுக்கு நிகராக மது அருந்துவது , புகை பிடிப்பது போன்றவற்றை செய்வது தான் உண்மையான பெண்ணியமா? உண்மையான பெண்ணியம் எது?
which is real feminism

தற்போது பெண்கள் அதிக விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். தங்களுக்கான உரிமைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் போராட துவங்கி இருக்கிறார்கள். பெண்ணியம் குறித்த விவாதங்கள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன அதில் வலிமையான விவாதங்களை பெண்கள் வைக்கிறார்கள்.

ஆனால் அப்படி பேசக்கூடிய பெண்களுமே “பெண்ணியம் அல்லது பெமினிசம் என்றால் என்ன” என்பது குறித்த தெளிவோடு இருக்கிறார்களா என பார்த்தால் குறிப்பிட்ட சிலர் பெண்ணியம் குறித்த புரிதல்களை பெற்று இருந்தாலும் பலர் அது குறித்த புரிதல்கள் இல்லாமல் தான் பேசி வருவதாக தெரிகிறது. அவர்களுக்காக இந்த பதிவு…

பெண்ணியம் என்றால் என்ன?

சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல், அதிகாரம், உரிமை போன்ற அனைத்திலும் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சம உரிமை பெறுதலே பெண்ணியம்.

தவறாக புரிந்துகொள்ளப்பட்ட பெண்ணியம்

தற்போது பெண்ணியம் பேசும் பெரும்பாலான பெண்களின் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் என்னவாக இருக்கிறது என்றால் ” ஆண் செய்வது அனைத்தையும் பெண் செய்வது தான் பெண்ணியம்”. சிலர் கேட்கலாம் ஆண் செய்வதை பெண் செய்ய கூடாதா என்று, செய்யலாம் நிச்சயமாக செய்யலாம். ஆனால் உங்களின் எண்ணத்தில் இருக்கும் முரண்பாட்டை கூறுகிறேன் கேளுங்கள்.

    • ஆண் மது அருந்துகிறார் நான் ஏன் அருந்த கூடாது?
    • ஆண் சிகரெ குடிக்கிறார் நான் ஏன் குடிக்க கூடாது?
    • ஆண் ஜீன்ஸ் அணிகிறார் நான் ஏன் அணியக்கூடாது?

இதுவே பெரும்பாலும் நான் எதிர்கொள்கிற பெண்ணிய கேள்விகள். பெண்கள் இவ்வாறு கேட்பது தவறா? என கேட்டால் நிச்சயமாக கிடையாது என்று தான் நானும் சொல்வேன். ஒருவர் என்ன அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரவர் உரிமை. ஆனால் இந்த கேள்விகள் தான் பெண்களுக்கு உண்மையான உரிமையை பெற்று தரப்போகிற கேள்விகளா? என நான் கேட்கிறேன். பதில் கூறுங்கள்.

    • எதற்க்காக அண்ணனுக்கோ தம்பிக்கோ தரப்படுகின்ற கல்வி எனக்கு தரப்படுவதில்லை?
    • எதற்க்காக ஆண் பணியாளருக்கு வழங்கப்படுகிற சம்பளம், பதவி உயர்வு எனக்கு வழங்கப்படுவதில்லை?
    • எதற்க்காக கணவனே அனைத்து முடிவையும் எடுக்கிறார்,என்னை கேட்பதில்லையே?
    • நன்றாக படித்திருந்தும் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு நான் ஏன் செல்லக்கூடாது?
    • அரசியலில் பெண்களுக்கு ஏன் இன்னும் சரியான இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை?

இதுபோன்ற கேள்விகள் தானே பெண்களை உயர்த்த போகிற கேள்விகள். ஏன் இவற்றை பற்றி எவருமே பேசுவதில்லை. இந்த கேள்விகள் தானே உண்மையான பெண்ணியக்கேள்விகள்.

பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்

இந்திய கடற்படையை சேர்ந்த பெண்கள் குழுவொன்று உலகினை வலம்வந்து சாதனை படைக்கிறது

மதிப்புமிக்க இக்கால பெண்களே! உங்களில் சிலர் நினைக்கலாம், நாங்கள் என்ன கேட்க வேண்டும் என சொல்ல நீ யார்? இதுவே ஆணினத்தின் அடக்குமுறை தானே? என கேட்கலாம். அதனை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு தவறாக படுகிற விசயங்களை சகோதரிகளுக்கு சொல்வது என் கடமை எனவே நான் எண்ணுகிறேன்.

இயற்கையில் ஆணும் பெண்ணும் வெவ்வேறானவர்கள், உடல் அமைப்பிலும் , செயல்பாடுகளிலும் வேறுபாடானவர்கள். அப்படி இருக்கும் போது ஆண்கள் செய்கின்ற அனைத்தையும் பெண் செய்வதுதான் பெண்ணியம், அதுவே பெண்களுக்கான வெற்றி என எண்ணிட வேண்டாம். அது பல வழிகளில் தவறான முடிவுகளையே தரும் என்பது எனது கருத்து.

ஆண்கள் செய்வதை பெண்கள் செய்யக்கூடாது என்பதல்ல, அது உண்மையான பெண்ணியம் அல்ல





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *