ஊடகங்களை வேசி என்றால் நம்மை என்ன சொல்லி அழைப்பது?

ஊடகங்கள் நமக்கு எதுவுமே செய்திடவில்லை என சொல்வதனைவிடவும் மேலான பொய் ஒன்று இருக்கவே முடியாது. நிர்வாகம் எனும் வட்டத்திற்குள் நேர்மையாக செயலாற்றிட வேண்டும் என நினைக்கும் பல ஊடகவியலாளர்களின் தன்னிகரற்ற செயலையும் அல்லவா நாம் கொச்சை படுத்துகிறோம்
#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்
https://youtu.be/9A4grqQhF24

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் முன்னனியில் இருந்துவருகின்றது . இதற்கு மிக முக்கிய காரணம் , நடிகர் சங்க தேர்தலை முக்கிய நிகழ்வுபோல கருதி செய்திகளை நேரலையில் உடனுக்குடன் வழங்கிவந்தனர் முன்னனி தொலைக்காட்சிகள்  . பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது , பொதுமக்களே நீர்நிலைகளை சுத்தப்படுத்திட களமிறங்கி இருக்கிறார்கள் , இதுபோன்ற நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்காமல் நடிகர் நடிகைகளை காட்டிக்கொண்டு இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தினால் தான் இப்படிப்பட்ட ஹேஷ்டாக் உருவாகியது . இந்த கோவத்தினை  நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது .

 

இந்தப்பதிவு ஊடகங்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற பதிவு அல்ல ,ஊடகங்களை குற்றம் சொல்லிட்டு நாம் என்ன செய்துகொண்டு இருக்கின்றோம் என நம்மிடம் இருக்கின்ற குறைகளை சுட்டிக்காட்டுகிற பதிவுதான் இது .

வேசி என்ற வார்த்தை பிரயோகம் தவறானது

தற்போதைய நிலவரப்படி 32 ஆயிரம் ட்விட்டுகள் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டாக்கில் போடப்பட்டுள்ளன . இதில் எத்தனைபேர் திரும்ப திரும்ப பல ட்விட்டுகளை போட்டார்களோ என தெரியவில்லை . கூட்டிக்கழித்து பார்த்தால் அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம் . அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .

 

பிறர் முதுகில் அழுக்காக இருக்கின்றது என்ற குறையை கூறுவதற்கு முன்னதாக நம் முதுகிலே அழுக்கு இருக்கிறதா என பார்த்துக்கொள்வது நல்லதென நினைக்கின்றேன் .

 

பிகில் திரைப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆனது அனைவரும் அறிந்ததே . அதனை எத்தனைபேர் பகிர்ந்தோம் , ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கினோம் . போட்டிக்காக இன்னொரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதனை எப்படி டிரெண்ட் செய்தோம் . பிக்பாஸில் யாரெல்லாம் போட்டியாளர்கள் என எத்தனைபேர் தேடி தேடி படித்தோம்  , பார்த்தோம் . எத்தனை பேர் இப்போதே பிக்பாஸ் பார்ப்பதற்காக அட்டவணைகளை போட்டுவிட்டோம் .

 

கிட்டத்தட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான இளைஞர்களும் மக்களும் செய்தவை இவைதானே . இதனை எவராலும் மறுக்க முடியுமா ? வறட்சியால் பாதிக்கப்பட்டு கிடக்கின்ற நாமே இப்படி பொறுப்பற்ற தன்மையில்தானே செயல்பட்டுவருகிறோம் , ஆனால் பணம் சம்பாதிப்பதற்காகவே தொலைக்காட்சிகளை நடத்துபவர்களை நமக்காக குரல் கொடுக்கவேண்டும் என வற்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது ?

 

அவர்களை வேசி என சொன்னால் நம்மை என்ன சொல்லி திட்டிக்கொள்ளப்போகிறோம் ?

 

சிந்திப்போம் !






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *