நடுரோட்டில் வாகனத்திலேயே சாமி கும்பிடும் பக்திமான்களே

நடுரோட்டில் வாகனத்திலேயே சாமி கும்பிடும் பக்திமான்களே  – கடவுள் யார் பக்கம் இருப்பார் தெரியுமா? நிச்சயமாக உங்கள் பக்கமில்லை .

 

இன்று சனிக்கிழமை, பெரும்பாலான இந்துக்கள் சனி பகவான் கோவிலுக்கோ அல்லது பிற கோவில்களுக்கோ செல்வதை  வழக்கமான ஒன்றாக கொண்டிருப்பார்கள் .

 

கதிரவன் பிறக்கின்ற காலை பொழுதில் கோவிலுக்கு சென்று ஒன்றுபட்ட மனத்தோடு தெய்வத்தை தரிசிப்பது என்பது உடலுக்கும் மனதுக்கும் பெரிய புத்துணர்ச்சியை , ஆக்க சக்தியை கொடுக்க கூடிய ஒரு செயல் , மாற்றுக்கருத்தே இல்லை .

 

  • ஆனால் கடவுளை எவ்வாறு தரிசிப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியையும் ஆக்க சக்தியையும் தரும் என்பதில் பலபேருக்கு உண்மை தெரியவில்லை , இதில் பலர் பரம்பரை பக்திமான்களாக இருப்பது குறிபிடத்தக்கது . 

    என்னை பொருத்தவரையில் நான் கருதுவது ….. 

    கடவுள் ஒருவரே

    கடவுளுக்கு உருவமில்லை பெயருமில்லை

  •  

  • நல்லது செய்தால் கடவுள் இருந்தால் கவனிப்பார்
  •  

 இதனை எந்த பக்திமான்களும் மறுக்கமாட்டார்கள் என நம்புகின்றேன் .

 

 

நீங்கள் வெங்கட்நாராயணா
சாலையில் பயணிப்பவராக இருந்தால் அவசியம் ஒருமுறையேனும் இதை சந்தித்து இருப்பீர்கள் . குறிப்பிட்ட வேகத்தில் அனைத்து வாகனங்களும்  சென்று கொண்டு இருக்கும் , திடீரென ஒரு கார் காரரோ , பைக் காரரோ நடு சாலையில் நிறுத்தி இங்கிருந்து கோவிலுக்குள் எட்டி சாமி கும்பிட்டுக்கொண்டு இருப்பார் .

 

பின்னால் வரும் வாகன ஓட்டுநர்கள் கொஞ்சம் கவனமாக இல்லை என்றாலும் அந்த இடத்தில் கடவுளை கும்பிட்டவருக்கும் ஆபத்து , பின்னால் வருகின்றவருக்கும் ஆபத்து .

 

சிலமுறை இந்த அனுபத்தை நான் சந்தித்து  இருக்கின்றேன் , அந்த வாகனத்தை கடந்து யார் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதனை காணுவதில் எனக்கு ஆர்வம் . நான் கண்ட பலரும் நன்றாக படித்தவர்கள் , வேலைக்கு விரைவாக சென்றுகொண்டிருப்பவர்கள் .

 

பின்னால் வருபவர் கவனிக்கவில்லையென்றால் இருவருக்கும் நடக்கும் விபத்தை ஆண்டவனாலும் தடுக்க இயலாது .

 

இதுவா பக்தி?

 

நான் கேட்கின்றேன் ? கடவுளை தரிசிக்க வேண்டும் என நோக்கமிருப்பவர் அரைமணி நேரத்திற்கு முன்பாக கிளம்பிவந்து கடவுளை தரிசித்து விட்டு போகலாம் அல்லது மாலையில் வீடு திரும்பும்போது கோயிலுக்கு சென்று கடவுளை தரிசித்துவிட்டு போகலாம் . இந்த இரண்டையும் விட்டுட்டு ஏதோ கும்பிடவேண்டும் என்ற கடனுக்காக போறவழியில் வாகனத்தில் இருந்துகொண்டு அடுத்தவனுக்கும் தொந்தரவை கொடுத்துக்கொண்டு கடவுள் தரிசனம் செய்வதால் நன்மை எப்படி உண்டாகும் , கடவுள் எவ்வாறு அருள்பாளிப்பார் ?

 

 அடுத்தவருக்கு தொந்தரவில்லாமல் மனநிம்மதியோடு ஒரு செயலை செய்யும்போது , அது கடவுளை தரிசிப்பதாக இருந்தாலும் சரி , வேறு எந்த விசயத்தை செய்வதானாலும் சரி மன நிம்மதியை , சந்தோசத்தை , ஆக்க சக்தியை தருமென்பது எனது மேலான கருத்து .

 

 எவருக்கும் தொந்தரவில்லாமல் நடந்துகொள்வோரின் பக்கம் கடவுள் நிற்கிறார் .

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *