மனிதக்கணினி “சகுந்தலா தேவி” யின் சொல்லப்படாத கதை | Shakuntala Devi | Human Computer

மனிதக்கணினி “சகுந்தலா தேவி” யின் சொல்லப்படாத கதை

பெரும் திறமையுள்ள பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு தங்களது கனவுகளை தொலைத்துவிடுகிறார்கள். ஆனால் அப்படி ஒருபோதும் செய்துவிடக்கூடாது, குடும்பம் எந்த அளவிற்கு முக்கியமானதோ அந்த அளவிற்கு கனவுகளும் முக்கியம் என்பதை பெண்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை அடிக்கடி வலியுறுத்திக்கூறியவர், அப்படியே வாழ்ந்துகாட்டியவர் சகுந்தலா தேவி.

வரலாற்றில் சாதித்தவர்களின் வாழ்க்கையை சொல்லும் படங்கள் அண்மையில் அதிகம் வரத்துவங்கி இருக்கின்றன. அப்படி ஒரு வரலாற்று நாயகியின் வெற்றிக்கதையை சொல்லிடும் திரைப்படம் இந்தி மொழியில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது.  “Shakuntala Devi  [Human Computer]” எனும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம். முடிந்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம்.

 

மனிதக்கணினி “சகுந்தலா தேவி” : இளமைப்பருவம்

நவம்பர் 04,1929 ஆம் நாள் பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. அப்போது அவரது அப்பா ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சகுந்தலா தேவிக்கு மூன்று வயது இருக்கும் போது அவரது அப்பா சகுந்தலா தேவிக்கு கணிதத்தில் பெரும் ஆர்வமும் எண்களை நியாபக படுத்துவதில் பெரும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார். அதன் பின்னர் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வெளிவந்த அவர் தனது மகளின் ஆற்றலை சாலையில் பொதுமக்களிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

சகுந்தலா தேவி தனது முதல் கணிதத்திறமை மைசூர் பல்கலைக்கழகத்தில் வெளிப்படுத்தினார். பிறகு 1944 ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் லண்டனுக்கு சென்று பின்னர் 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார். 

கின்னஸ் புத்தகத்தில் இடம்

கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979 ல் விவாகரத்து ஆனது.1980 ல் சகுந்தலா பெங்களூருக்குத் திரும்பினார் .தேவி தனது கணித திறனை காண்பிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் .இவற்றில் 1950ல் ஐரோப்பா மற்றும் 1976 ல் நியூயார்க் பயணமும் முக்கியமானவை.

1988ல் ஆர்தர் ஜென்சென் என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் தேவியின் கணித திறனை பரிசோதித்தார் .அவற்றில் பெரிய எண்களை கொண்ட கணக்குகளும் அடக்கம்.உதாரணமாக 61,629,875 என்ற எண்ணின் கன மூலமும் , 170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன. இதில் விந்தை என்னவெனில் ஆர்தர் கேள்வியை தேவியிடம் கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் தேவி பதிலை துல்லியமாக சொன்னதுதான்.1990ல் ஆர்தர் தனது ஆய்வின் முடிவை intelligence என்ற கல்வி இதழில் வெளியிட்டார்.

ஜூன் 18, 1980ல் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கணினி துறை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க ஐக்கிய எண்கள் 7,686,369,774,870 × 2,465,099,745,779 லை பெருக்கி சரியாக 28 வினாடிகளில் 18.947.668.177.995.426.462.773.730 பதில் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Human Computer என்ற பெயரை விரும்பாத சகுந்தலா தேவி

1977ல் 188,132,517 என்ற எண்ணின் கன மூலத்தை வேகமாக கணக்கிடுவதில் கணினியை தோற்கடித்தார். அதே ஆண்டில், தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை 50 நொடிகளில் 546,372,891 கணக்கிட்டார். ஆனால் அதனை சரிபார்க்கU.S. Bureau of Standards யுனிவாக் 1101 என்ற கணினியில் சிறப்பு நிரல் ஒன்றை நிறுவியது குறிபிடத்தக்க விசயமாகும்.

இதுபோன்று கணக்கீட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய சகுந்தலா தேவி தன்னை ஒருபோதும் பிறர் “மனிதக்கணினி” என்று அழைப்பதை விரும்பியதே இல்லை. அவர் மனிதர்களின் மூளை கணினியுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தது என வலியுறுத்திக்கூறிவந்தார். மனிதர்களின் மூளை ஒருபோதும் கணினியுடன் ஒப்பிட முடியாதது என நம்பி வந்தார். 

சகுந்தலா தேவி திரைப்படம்

https://youtu.be/Ivx9VbPQAC8

தற்போது அமேசான் பிரைம் தளத்தில் சகுந்தலா தேவி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அனு மேனன் இயக்கத்தில் சகுந்தலா தேவி திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன். கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் விளியாகி இருக்கிற இந்தத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சகுந்தலா தேவியின் சிறப்பம்சத்தை பற்றிக்கூறும் போது “சகுந்தலா தேவியின் சிறப்பே ‘நம்மாளும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க முடியும்’ என சக மனிதர்களை நினைக்க வைத்ததுதான்.

கணிதம் அனைத்திலுமே இருக்கிறது என்று மக்களுக்கு அவர் புரியவைத்தார். கணிதம் இயற்கையிலும் இருக்கிறது, இசையிலும் இருக்கிறது, சமையலிலும் இருக்கிறது என்று அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் அவர்களுக்குக் கணிதத்தின் மீது இருந்த அச்ச உணர்வு குறைந்தது. எனவே, சகுந்தலா தேவியின் நம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய பகுதியை நான் எடுத்துக்கொண்டேன் என்றார் வித்தியா பாலன். 

சாதாரண பெண்களின் நம்பிக்கை சகுந்தலா தேவி

 

பெரும் திறமையுள்ள பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு தங்களது கனவுகளை தொலைத்துவிடுகிறார்கள். ஆனால் அப்படி ஒருபோதும் செய்துவிடக்கூடாது, குடும்பம் எந்த அளவிற்கு முக்கியமானதோ அந்த அளவிற்கு கனவுகளும் முக்கியம் என்பதை பெண்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை அடிக்கடி வலியுறுத்திக்கூறியவர், அப்படியே வாழ்ந்துகாட்டியவர் சகுந்தலா தேவி.

வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். 



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *