Peoples money Rs190 crores wasted by MPs | பட்டப்பகலில் ரூ 190 கோடியை வீணடித்த MP க்கள்? யாராவது கேட்டீங்களா ?
இந்திய மக்கள் கடினமாக வேலைசெய்து அரசிற்கு செலுத்திய வரிப்பணத்தில் ரூ 190 கோடியை 21 நாளில் வீணடித்துள்ளனர் இந்திய MP க்கள்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துவிட்டது. 21 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் சில மணி நேரங்கள் மட்டுமே உருப்படியாக நாடாளுமன்றம் நடந்தது. ஒரு நிமிடம் நாடாளுமன்றம் நடத்துவதற்கு 2.5
லட்சம் செலவாகிறதாம் அப்படி பார்த்தால் ஒருநாளைக்கு 6 மணி நேரம் என 21 நாட்கள் இரு அவைகளை நடத்த செலவாகிற தொகை ரூ 190 கோடி.
சத்தமில்லாமல் நாட்டின் மிக முக்கிய நபர்களை கொண்ட இரு அவைகளின் முறையற்ற செயல்பாடுகளினால் மக்களின் வரிப்பணம் கிட்டத்தட்ட ரூ 190 கோடி 21 நாட்களில் பட்டப்பகலில் வீணடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றமும் அதன் முக்கியத்துவமும் (Importance of Parliament):
நாட்டின் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் இடம் நாடாளுமன்றம் தான். அங்கு நடத்தப்படும் விவாதங்கள்,
நிறைவேற்றப்படும் மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பிட்ட தினத்தில் ஒரு மசோதா நிறைவேறாமல் போனால் அந்த திட்டம் அடுத்த கூட்டத்தொடர் வரை முடங்கி போக வாய்ப்புள்ளது.
ஆக்கபூர்வமான கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பிடவும் அதற்க்கு அரசு விளக்கம் அளிக்கவும் வாய்ப்புகள் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்படுகின்றன.
மாநிலங்களவை முடக்கம் குறித்து பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு “பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் 44 மணி நேரம் மட்டுமே அவை ஒழுங்காக செயல்பட்டுள்ளது. 121 மணிநேரம் எம்.பி.க்கள் அமளி, குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட 419 கேள்விகளுக்கு, 5 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தில் கடந்த 27 நாட்களில் ஒரு முறை கூட கேள்விநேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எம்.பி.க்களின் இதுபோன்ற செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய இடத்தை முக்கியத்துவம் இல்லா இடமாக மாற்றிவிடக்கூடாது.
இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி, கூச்சல் குழப்பத்தால், அனைவரும் பொன்னான நேரத்தை இழந்துவிட்டோம். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் அரசு, இந்த மக்கள், அரசு ஆகிய அனைத்தும் நேரத்தை இழந்துவிட்டன.” என்றார்.
காவேரி மற்றும் சிறப்பு அந்தஸ்து பிரச்சனையால் முடங்கிய நாடாளுமன்றம் :
தமிழக MP க்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனவும் ஆந்திர MP க்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் போராடியதால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
MP க்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளும் (Salary and Allowance for MP’s) :
தமிழ்நாடு, ஆந்திரா இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே இந்தியாவில் இல்லை. ஆகவே இவர்களின் பிரச்சனைக்காக இந்தியாவின் மற்ற மாநிலங்கள் சம்பந்தப்பட்ட அவை நடவடிக்கைள் பாதிக்கப்படுவது சரியல்ல.
தற்போது சம்பள உயர்வு பெற்று இருக்க கூடிய ஒவ்வொரு நாடாளுமன்ற MP க்கும் 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது, மேலும் ஓய்வு பெற்றால் 25,000 வழங்கப்படுகிறது.
சம்பளம் : 1 லட்சம்
நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டால் நாள் ஒன்றுக்கு : ரூ 2000
போக்குவரத்து செலவு :
அலுவலக சம்பந்தமாக போனால் இலவசம் (திரும்பி வரவும் )
One free non-transferable First class AC or Executive class of any train pass
34 முறை விமான பயணம்
சாலை பயணத்திற்கு ரூ 16/கிலோமீட்டர்
தங்குமிடம்/ சாப்பாடு : இலவச விடுதி மற்றும் சாப்பாடு
தொலைபேசி : மூன்று இலவச இணைப்புகள் (ஒவ்வொன்றிலும் 50,000 அழைப்புகள் இலவசம்)
இதில் உறுப்பினரின் மனைவிக்கும் அவரது குடும்பத்திற்கும் வழங்கும் சலுகைகைகள் குறிப்பிடப்படவில்லை.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் (What people should do?) :
ஏதேனும் ஒரு அலுவலகத்திலோ அல்லது கடையிலோ வேலைக்கு சேர்த்துவிட்டு வேலையினை செய்யாமல் போராடுகிறோம் என்கிற போர்வையில் அலுவலகத்தை முடக்கினால் அவர்களுக்கு சம்பளம் தருவார்களா ?
அதையே தானே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்திருக்கிறார்கள், இந்தியாவின் மிக முக்கிய அமைப்பில் இவ்வாறு செயல்பட்டவர்களுக்கு எதற்க்காக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.
ஜனநாயத்தின் தூணாகிய, வரி கட்டுகிற மக்களாகிய நீங்கள் தான் இதனை தட்டி கேட்க வேண்டும். கேட்பீர்களா இந்த பகல் கொள்ளையை ?
நன்றி
பாமரன் கருத்து