நக்கீரன் கோபால் கைது to விடுதலை – முழு விவரம் | Nakkeran Gopal Arrest to Release Complete Details
நக்கீரன் வார இதழின் தலைமை ஆசிரியர் திரு நக்கீரன் கோபால் அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தமிழக போலீசாரால் பிரிவு 124 இன் கீழ் கைது செய்யப்பட்டார் . நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை நீதிமன்றக்காவலில் வைப்பதற்கான முகாந்திரம் இல்லையென கூறி நீதிபதி நக்கீரன் கோபால் அவர்களை சொந்த ஜாமினில் விடுதலை செய்தார் .
நக்கீரன் கோபால் மீதான வழக்கு ஏன் ?
மாணவிகளை தவறான செயல்களுக்கு இட்டுச்சென்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட நிர்மலா தேவி அவர்களுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பிருப்பதாக நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை மற்றும் அட்டைப்படம் வெளியிடப்பட்டது . இது ஏப்ரல் மாதத்தில் இருந்தே நடந்திருக்கின்றது . இதனால் அவர் மீது சட்டப்பிரிவு 124 இன் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் மாளிகையின் துணை செயலாளர் புகார் அளித்தார் .
இதனை ஏற்றுக்கொண்ட தமிழக காவல்துறை செவ்வாய்கிழமை காலை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்தது .
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரனை முடிக்கப்பட்டு அவர் அல்லிக்குளம் எழும்பூர் 13 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் . நீதிபதி திரு கோபிநாத் அவர்கள் முன்னிலையில் விசாரனை நடைபெற்றது .
விசாரனையில் வைக்கப்பட்ட விவாதங்கள்
நக்கீரன் கோபால் அவர்களின் வழக்கறிஞர் பி டி பெருமாள் முன்வைத்த வாதத்தில் இரண்டு முக்கிய வாதங்களை முன்வைத்தார் . அதன்படி சட்டப்பிரிவு 124 இன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் எனில் குடியரசுத்தலைவரையோ அல்லது ஆளுநரையோ பணி செய்யவிடாமல் கிரிமினல் குற்றங்களை செய்திருக்க வேண்டும் அல்லது செய்வேன் என மிரட்டியிருக்க வேண்டும் .
ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது ஏன் ? தவறான பிரிவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த பத்திரிகையாளர் ராம் அவர்கள் பத்திரிகையாளர்களின் சார்பாக எடுத்துவைத்த விவாதங்கள் முக்கியமானவை .
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
நக்கீரன் கோபால் பத்திரிக்கையில் எழுதியதற்காக 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது மிகப்பெரிய தவறு . பிரிவு 124 என்பது தேசத்துரோக வழக்கு பிரிவு
தேச துரோக குற்றப்பிரிவு 124 இன் கீழ் கட்டுரையை பிரசுரித்ததற்காக பத்திரிகையாளரை கைது செய்தது இதுவே முதல் முறை
இப்போது நக்கீரன் கோபால் அவர்களை ரிமாண்ட் செய்தால் நாடு முழுமைக்கும் தவறான முன்னுதாரணத்தையும் மீண்டும் இந்த பிரிவினை தவறாக பயன்படுத்துவதற்குமான வாய்ப்பினையும் கொடுத்துவிடும் . மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு 19 (1 ) A பிரிவு சில பாதுகாப்புகளை வழங்குகின்றது .
Freedom of Press – Article 19(1)(a)
Freedom of press is not specifically mentioned in article 19(1) (a) of the Constitution and what is mentioned there is only freedom of speech and expression. In the Constituent Assembly Debates it was made clear by Dr. Ambedkar, Chairman of the Drafting Committee, that no special mention of the freedom of press was necessary at all as the press and an an individual or a citizen were the same as far as their right of expression was concerned.
IPC பிரிவு 124 என்ன சொல்கிறது ?
Whoever, with the intention of inducing or compelling the President of India, or Governor of any State, to exercise or refrain from exercising in any manner any of the lawful powers of such President or Governor, assaults or wrongfully restrains, or attempts wrongfully to restrain, or overawes, by means of criminal force or the show of criminal force, or attempts so to overawe, such President or Governor, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
இந்திய குடியரசுத்தலைவர் அல்லது மாநில ஆளுநர் இருவரின் பணிகளை செய்யவிடாமல் கிரிமினல் நடவெடிக்கைகளில் ஈடுபடுவதும் அல்லது கிரிமினல் செயல்களில் ஈடுபடுவேன் என மிரட்டுவதும் குற்றமாக கருதப்படுகிறது . இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும் .
குற்றத்திற்க்கான முகாந்திரம் இருப்பின் நீதிமன்ற பிடியாணை இல்லாமலேயே கைது செய்ய முடியும் , பெயிலில் வர முடியாது .
வழக்கினை விசாரனை செய்த நீதிமன்றம் ரிமாண்ட் செய்வதற்கு போதிய காரணங்கள் இல்லையென கூறி நக்கீரன் கோபால் அவர்களை சொந்த ஜாமினில் விடுதலை செய்தது .
ஆளுநர் மாளிகை என்ன செய்திருக்க வேண்டும் ?
நிர்மலா தேவி வழக்கோடு ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி நக்கீரனில் மட்டும் கட்டுரை எழுதப்படவில்லை. பல முன்னனி நாளிதழ்கள் தொலைக்காட்சிகளில் கூட செய்திகள் வெளிவந்தன . இப்படி வருகின்ற பட்சத்தில் ஆளுநர் மாளிகை என்ன செய்திருக்க வேண்டும் ? தங்களை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறீர்கள் , அதனை நாங்கள் மறுக்கிறோம் என மறுப்பு கட்டுரை ஒன்றினை எழுதி பதிலாக கொடுத்திருக்க வேண்டும் . அவ்வாறு கொடுத்திருப்பின் அதனையும் பிரசுரிக்க வேண்டியது பத்திரிக்கைகளின் தார்மீக கடமை . அதுவே ஜனநாயகம் , கருத்து சுதந்திரம் .
சாதாரண மனிதனுக்கும் இதே பாதுகாப்பு கிடைக்குமா ?
தவறான சட்டப்பிரிவில் வழக்கினை பதிவு செய்கின்றோம் என போலீசாருக்கு தெரிந்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இன்னொருமுறை இப்படி நடக்காது எனபதற்கு உத்தரவாதம் என்ன ?
நக்கீரன் கோபால் சமூகத்தில் தெரிந்த நபர் ஆகையால் அவருக்காக வாதாட மூத்த வழக்கறிஞர்களும் ராம் போன்ற முன்னனி பத்திரிக்கையாளர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர் . வழக்கும் முக்கியதுவம் பெற்றது .
ஒரு சாதாரண நபர் facebook பதிவோ அல்லது சிறு பத்திரிக்கையிலோ எழுதியிருந்து கைது செய்யப்பட்டிருந்தால் இதுபோன்றதொரு முக்கியத்துவமும் விடுதலையும் கிடைத்திருக்குமா என்றால் மிக பெரிய கேள்விக்குறியே ?
நக்கீரன் கோபால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது . அதே சமயத்தில் சாதாரண மனிதர்களுக்கும் தங்களது கருத்துக்களை சொல்வதற்கான முழு சுதந்திரம் கிடைக்கபெற வேண்டும் . இதற்கு ஆளுகிறவர்கள் பரந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் . போலீசாரும் தவறான சட்டங்களை பயன்படுத்தி யாரையும் கைது செய்யக்கூடாது . இருவருமே தவறு செய்தால் நீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை காப்பற்றிட வேண்டும் .