இடைத்தரகர்களை அணுகி சின்னத்தை பெற முடியுமா ? தேர்தல் ஆணையத்திலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனரா ?
ஊடகங்களும் தினகரன் கைதுசெய்யப்படுவாரா அப்படி இப்படி என போட்டு தாக்குகின்றன …ஆனால் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் அணுகலாம் என்று நினைக்கிறன் .
ஒருவேளை தினகரன் அவர்களே இடைதரகரை அணுகியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் , தினகரன் ஏதோ நம்போன்ற பாமரன் கிடையாது . அவர் இடைதரகரை அனுக்கிருக்கிறார் என்றால் அதன்முலமாக காரியம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வாய்ப்பும் இருக்கும் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அவர் அணுகியிருப்பார் அல்லவா ?
அப்படியென்றால் காசுக்காக வேலைசெய்யும் சிலர் தேர்தல் ஆணையத்திலும் இருக்கின்றனர் என்பதுதானே உண்மை அல்லது தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளவர்கள் காசுக்காக வேலை செய்யலாம் .
அப்படி நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாக மத்திய அமைச்சரவையில் உள்ள பெரும் தலைகளாகத்தான் இருக்க முடியும் .
இடைதரகர் பிடிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் முந்தய கால செயல்பாடுகள் நம்மிடத்தில் சந்தேகத்தை கிளப்புகின்றன .
இந்திய அமைப்புகளில் மிக முக்கிய அமைப்பு தேர்தல் ஆணையம் .அது தனது தூய்மையை மக்களிடத்தில நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது இருகின்றது .
எனவே முதலில் பிடிக்கவேண்டியது தினகரணை அல்ல லஞ்சத்திற்க்காக வேலை பார்க்கக்கூடிய அந்த கருப்பு ஆட்டை தான் பிடிக்க வேண்டும் .
கேள்வி சரியென்றால் பகிருங்கள்.
நன்றி
பாமரன் கருத்து