LGBTQ என்றால் என்ன? LGBTQ In Tamil

மூன்றாம் பாலினத்தவர், ஓரின சேர்க்கையாளர் என அடையாளம் காணப்பட்டோர் பெரும் தவறு புரிந்தவர்களாகவும் அறுவருக்கத்தக்கவர்களாகவும் கருதப்பட்ட காலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்த மாற்றம்  இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என்பதே பலரது விருப்பம் (என்னுடைய விருப்பமும்). LGBTQ சமூகம் குறித்து விரிவாக இங்கே பேசலாம்.

LGBTQIA+ is an abbreviation for Lesbian, Gay, Bisexual, Transgender, Queer

ஜூன் மாதத்தின் முதல் வாரம் LGBTQ சமூகத்திற்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி சென்னையில் வண்ணமயமான பேரணி LGBTQ அமைப்பினரால் நடத்தப்பட்டது. அதிலே அவர்கள் தங்களுக்கான உரிமை, அங்கீகாரம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கையாக இருப்பது என்னவெனில் “தங்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும்” என்பது தான். பல உலக நாடுகளில் இவர்களுக்கான சமூக அங்கீகாரம் வேகமாக கிடைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இந்த மாற்றம் மெதுவாகவே நடந்து வருகிறது. LGBTQ வில் இருப்பவர்கள் குறித்த புரிதல் பரவலாக நடந்தால் மட்டுமே இந்த சமூகம் மாற்றம் அடையும். அதற்கான ஒரு முயற்சியே இந்தப்பதிவு.

LGBTQ என்றால் என்ன? LGBTQ Meaning In Tamil

LGBTQ என்பது ஒரு ஒருங்கிணைந்த அமைப்பினரின் சுருக்கம்,

 

L : Lesbian லெஸ்பியன் என்றால் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டிருப்பது

 

G : Gay கே என்றால் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவு கொண்டிருப்பது

 

B : Bisexual இருபால் உறவு என்றால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர் அதே பாலினத்தை சேர்ந்தவருடனும் எதிர் பாலினத்தை சேர்ந்தவருடனும் பாலியல் உறவு கொண்டிருப்பது

 

T : Transgender மூன்றாம் பாலினத்தவர் என்றால் பிறக்கும் போது ஆண் என அறியப்பட்டு வளரும் போதோ அல்லது வளர்ந்த பின்னரோ பெண்ணாக மாறுவோர் அல்லது பிறக்கும் போது பெண் என அறியப்பட்டு வளரும் போதோ அல்லது வளர்ந்த பின்னரோ ஆணாக மாறுவோர்.

Q : Queer மேலே உள்ள அனைவரையும் உள்ளடக்கிய சமூகம்.

பாலினத் தேர்வு மதிக்கப்பட வேண்டும்

பிறப்பு என்பது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. நாம் எப்படிப்பட்டவராக பிறக்க வேண்டும், எப்படிப்பட்ட உணர்வுகள் நமக்கு இருக்க வேண்டும் என எதையுமே நம்மால் தீர்மானிக்க முடியாது. பெரும்பாலானவர்களுக்கு, பிறக்கும் போது எப்படி அவர்கள் அடையாள படுத்தப்பபடுகிறார்களோ அப்படியே வளரும் போதும் அந்த பாலின உணர்வுகளே இருக்கும். ஆனால், குறைந்த அளவிலான குழந்தைகளுக்கு அப்படி இருப்பது இல்லை. அவர்கள் பிறக்கும் போது அவர்களது பிறப்புறுப்பின் அடிப்படையில் அவர்கள் ஆண் அல்லது பெண் என தீர்மானம் செய்யப்படுகிறார்கள்.

ஆனால், வளரும் போது அவர்கள் எதிர் பாலினத்திற்கான உணர்வுகளை கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்புறுப்பின் அடிப்படையில் ஆண் என நினைத்து வளர்க்கப்படுகிறது. ஆனால், அந்தக்குழந்தை வளரும் போது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உணர்வு மாற்றம் ஏற்படுகிறது எனில் அவர்களை நாம் மூன்றாம் பாலினத்தவர் என சொல்கிறோம். அதேபோல பிறப்புறுப்பின் அடிப்படையில் பெண் என நினைத்து வளர்க்கப்படும், அந்தக்குழந்தை வளரும் போது ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் உணர்வு மாற்றம் ஏற்படுகிறது எனில் அவர்களையும் நாம் மூன்றாம் பாலினத்தவர் என சொல்கிறோம்.

இந்த மாற்றங்களை அவர்கள் தாங்களாக செய்வது இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் அவர்களை மதிப்பதில் நமக்கு சிக்கல் இருக்காது. ஆனால், இந்த சமூகத்தின் பெரும் பகுதியினர் அவர்களை மதிப்பது இல்லை. அவர்களை பெரும் தவறு செய்தவர்கள் போல பாவிக்கிறார்கள். குறிப்பாக குடும்பத்திலேயே அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. அண்மைய காலமாக, சில குடும்பங்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள  ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த மாற்றம் விரிவடைய வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

அடுத்ததாக, ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீதோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணின் மீதோ ஈர்ப்பு கொள்வதும் பாலியல் உறவு கொள்வதும் மட்டுமே இயற்கை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்ற எண்ணம் நீண்ட காலமாக நம் சமூகத்தில் உள்ளது.அதனை தவிர்த்த பாலியல் உறவுகள் அனைத்தும் தவறானதாக கருதப்படுகிறது. நமது சட்டங்களும் சம்பிரதாயங்களும் அதனை நீண்ட காலமாக கூறி வந்துள்ளன. ஆனால், நீண்ட காலமாகவே எதிரெதிர் பாலின உறவு தவிர மேற்கூறிய பிற உறவுகளும் இருக்கவே செய்திருக்கின்றன. ஆனால், வெளிப்படையாக சொல்ல அச்சப்பட்டு ஒரு ரகசியமான உறவாகவே அவை இருந்துள்ளது.

 

ஆனால், அண்மைய காலமாக ஒருபால் உறவு கொள்வோரும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தோரும் தங்களை வெளிப்படையாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்ள ஆரம்பித்து உள்ளார்கள். பல வெளிநாடுகளில் இவர்களுக்கு அங்கீகாரம் வெகு விரைவாக கிடைத்து வருகிறது. இதுவும் இயற்கையானது என்ற எண்ணம் பலரிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் இந்தியாவில் மிக மெதுவாக நடந்து வருகிறது. 

எப்படி ஆணுக்கு பெண்ணின் மீதும் பெண்ணுக்கு ஆணின் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதை நாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறோமோ அதைப்போலவே ஓரின ஈர்ப்பு என்பதும் சாதாரணமானது, இயற்கையானது என்பதை நாம் ஏற்க வேண்டும். அந்தப்புரிதல் நமக்கு வந்துவிட்டால் அவர்களை வித்தியாசமானவர்கள் போல பார்க்க மாட்டோம். நமக்கு அருகில் எவரேனும் இப்படிபட்டவர்களாக அறியபட்டால் அவர்களை எப்போதும் போல சக மனிதராக நடத்துவது தான் சிறந்தது.

நீதித்துறை ஏற்றதை சமூகமும் ஏற்க வேண்டும்

இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள் என்ற விதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 வது பிரிவில் உள்ளது. 

 

இதனை மிகவும் பழமையான சட்டப்பிரிவு என்றும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களும் மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டு 150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த விதியை உச்ச நீதிமன்றம் நீக்கியது. 

ஆனால், LGBT சமூகத்தினர் நம்மைப்போன்றவர்கள் தான் என்ற மனநிலை சமூகத்தில் பரவ வேண்டும். அவர்களை வேறு மனிதர்கள் போல இழிவாக பார்க்காமல், விலக்கி வைக்காமல் சக மனிதராக அவர்கள் நடத்தப்பட வேண்டும். குடும்பத்திலும், சமூகத்திலும் அவர்கள் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். பணியிடங்களில் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களை வேற்று மனிதர்கள் போல எண்ணாமல் நடந்துகொண்டால் சமூக மாற்றம் நிச்சயமாக உண்டாகும்.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *