கௌசல்யா மறுமணம் – சமூகத்தின் பார்வை எப்படி இருக்க வேண்டும்?

 


 

காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர் , கௌசல்யாவின் பெற்றோர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் . கௌசல்யா தனது கணவரின் ஆணவ படுகொலைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி தனது பெற்றோர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை பெற்றுத்தந்தார் .

 

கௌசல்யா - சக்தி
கௌசல்யா – சக்தி



சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக போராட்டதை தொடங்கிய அவர் இன்று பறை இசைக்குழு நடத்தி வருகின்ற சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டிருக்கிறார்.

சங்கர் குடும்பத்தின் முழு ஆதரவோடுதான் திருமணம் நடந்திருக்கின்றது.


 

கொள்கையில் பின்னடைவா?

 



கௌசல்யா மறுமணம் செய்தி கேட்ட சிலர் அதனை முற்போக்கான விசயமாக நினைத்துகொண்டாடும் சூழலில் மறுபக்கம் சிலர் ,அவ்வளவுதான் கொள்கையெல்லாம் , சங்கரின் குடும்ப நிலை என்னாவது  என தங்களின் அதிருப்தியை வெளியிடுகின்றனர் . அதனை அதிருப்தி என்றில்லாமல் ஆணாதிக்கம் என்றே கூறலாம் .

 

சங்கர் குடும்பத்தின் மீதான அக்கறையில் இதுபோன்ற பதிவுகளை பதிவிடுவதில்லை . சாதியத்திற்கு எதிராக போராடுகின்ற , குறிப்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகவே இதுபோன்ற பதிவுகள் இடப்படுகின்றன .

 


 

எப்படி ஏற்கவேண்டும் ?



நம்மை சுற்றி எத்தனை சாதி ஆணவக்கொலைகள் நடக்கின்றன . எத்தனை பெண்கள் அதனை எதிர்த்து குரல் கொடுத்தார்கள் ? சிலர் தான் .

அந்த சிலரில் மிக முக்கியமானவர் கௌசல்யா . தன்னுடைய பெற்றோர் என்றும் பாராமல் அவர்களுக்கு தண்டணை வாங்கிக்கொடுத்தவர் கௌசல்யா. இன்றும் அதற்காக போராடிக்கொண்டு இருப்பவர் கௌசல்யா.

அத்தனைக்கும் மேலாக அவர் ஒரு இளம்வயது பெண் 

 

 

 


நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்ணிண் கணவர் இறந்துவிட்டால் மறுமணம் செய்ய நினைக்கும் நாம் இவரது மறுமணத்தை  ஏற்காமல் எப்படி போக முடியும் ?

போராடுகிறார் என்பதற்காகவே இவர் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது என நினைப்பது எப்படி நியாயம் ?

போராளி என்பதற்கு முன்பதாக அவர் மனிதர் , உணர்வுள்ள மனிதர் , சுதந்திரமுள்ள மனிதர் . அவருடைய வாழ்வினை தீர்மானிப்பதற்கு முழு உரிமையுள்ள மனிதர் .

கொள்கையில் மாறுபாடு அல்லது பின்னடைவு ஏற்பட்டால் அதில் கேள்வி எழுப்பலாம் . ஆனால் மறுமணம் செய்துகொண்டார் என்பதற்காகவே அவரது கொள்கையில் பின்தங்கிவிட்டார் என முடுச்சு போடுவது என்பது ஆதிக்கசக்திகளின் குரலாகவே இருக்க முடியும் .



உங்கள் கருத்து ?


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *