காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர் , கௌசல்யாவின் பெற்றோர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் . கௌசல்யா தனது கணவரின் ஆணவ படுகொலைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி தனது பெற்றோர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை பெற்றுத்தந்தார் .
சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக போராட்டதை தொடங்கிய அவர் இன்று பறை இசைக்குழு நடத்தி வருகின்ற சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டிருக்கிறார்.
சங்கர் குடும்பத்தின் முழு ஆதரவோடுதான் திருமணம் நடந்திருக்கின்றது.
கொள்கையில் பின்னடைவா?
காதல் புனிதமானது… எனது காதலன் #சங்கருக்காக சாகும் வரை #தாம்பத்யம் ஏற்கமாட்டேன்… எனது #அப்பவாவை #தூக்கிலிடுங்கள் – நீதிபதிகள் முன்னிலையில் கௌசல்யா சபதம்.
அந்த களசல்யா இன்று திருமணம்….
ஷங்கரின் ஆத்மா……?????@@@$$$$%%%%@@€€££₩₩£€€?????
— Saravana Prasath (@saravana140286) December 9, 2018
கௌசல்யா மறுமணம் செய்தி கேட்ட சிலர் அதனை முற்போக்கான விசயமாக நினைத்துகொண்டாடும் சூழலில் மறுபக்கம் சிலர் ,அவ்வளவுதான் கொள்கையெல்லாம் , சங்கரின் குடும்ப நிலை என்னாவது என தங்களின் அதிருப்தியை வெளியிடுகின்றனர் . அதனை அதிருப்தி என்றில்லாமல் ஆணாதிக்கம் என்றே கூறலாம் .
சங்கர் குடும்பத்தின் மீதான அக்கறையில் இதுபோன்ற பதிவுகளை பதிவிடுவதில்லை . சாதியத்திற்கு எதிராக போராடுகின்ற , குறிப்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகவே இதுபோன்ற பதிவுகள் இடப்படுகின்றன .
எப்படி ஏற்கவேண்டும் ?
நம்மை சுற்றி எத்தனை சாதி ஆணவக்கொலைகள் நடக்கின்றன . எத்தனை பெண்கள் அதனை எதிர்த்து குரல் கொடுத்தார்கள் ? சிலர் தான் .
அந்த சிலரில் மிக முக்கியமானவர் கௌசல்யா . தன்னுடைய பெற்றோர் என்றும் பாராமல் அவர்களுக்கு தண்டணை வாங்கிக்கொடுத்தவர் கௌசல்யா. இன்றும் அதற்காக போராடிக்கொண்டு இருப்பவர் கௌசல்யா.
அத்தனைக்கும் மேலாக அவர் ஒரு இளம்வயது பெண்
வாழ்த்துகள் தோழர். கௌசல்யா…
சமூக மாற்றத்திற்கான புதிய நகர்வாக இது அமையும்….
மகிழ்ச்சி!!!@beemji pic.twitter.com/iyQtfOEclN— Manivannan (@redhortrose) December 9, 2018
நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்ணிண் கணவர் இறந்துவிட்டால் மறுமணம் செய்ய நினைக்கும் நாம் இவரது மறுமணத்தை ஏற்காமல் எப்படி போக முடியும் ?
போராடுகிறார் என்பதற்காகவே இவர் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது என நினைப்பது எப்படி நியாயம் ?
போராளி என்பதற்கு முன்பதாக அவர் மனிதர் , உணர்வுள்ள மனிதர் , சுதந்திரமுள்ள மனிதர் . அவருடைய வாழ்வினை தீர்மானிப்பதற்கு முழு உரிமையுள்ள மனிதர் .
கொள்கையில் மாறுபாடு அல்லது பின்னடைவு ஏற்பட்டால் அதில் கேள்வி எழுப்பலாம் . ஆனால் மறுமணம் செய்துகொண்டார் என்பதற்காகவே அவரது கொள்கையில் பின்தங்கிவிட்டார் என முடுச்சு போடுவது என்பது ஆதிக்கசக்திகளின் குரலாகவே இருக்க முடியும் .
உங்கள் கருத்து ?