ISEF(Intel International Science and Engineering Fair 2018) Top 3 Winners | போட்டியில் வென்ற அசத்தல் கண்டுபிடிப்புகள்
ISEF (Intel International Science and Engineering Fair 2018) :
பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் புதிய ஐடியாக்களையும் வெளிப்படுத்த களம் அமைத்து ஊக்கத்தோடு பரிசும் கொடுத்து வருகிறது ISEF என்கிற அமைப்பு. 1950 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த அமைப்பானது Society for Science & the Public நடத்தப்படுகிறது. கல்லூரிப்படிப்புக்கு முன்னாலேயே இப்படி மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிடும் சில அமைப்புகளில் முதன்மையானது.
2018 ஆம் ஆண்டுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி களத்தில் 1383 Projects (1790 ஸ்டுடென்ட்ஸ்) புதிய அறிவியல் திட்டங்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களால் சமர்பிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்ட இந்த ஆண்டு போட்டிக்கு உதவியது இன்டெல் (INTEL) கார்பொரேஷன்.
இந்த அறிவியல் களத்தில் உயர்ந்த பரிசு பெற்ற மூன்று கண்டுபிப்பாளர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் தான் பார்க்க இருக்கிறோம்.
உயர்ந்த கட்டிடங்களின் வெளிப்புற கண்ணாடியை சுத்தம் செய்யும் ரோபோ :
கண்டுபிடித்தவர் : ஓலிவர் நிக்கோலஸ்
பரிசு : $75,000
உயரமான கட்டிடங்களின் வெளிப்புற கண்ணாடியை தொங்கி கொண்டு துடைக்கும் பணி ஆபத்து நிறைந்த பணி. ஓலிவர் தனது பகுதியில் இவ்வாறு வேலை செய்யும் பணியாளர்கள் விபத்தை சந்திக்கிற செய்திகளை கேட்ட ஓலிவர் இதனை ஏன் மனிதர்கள் செய்ய வேண்டும், ரோபோ செய்தால் என்ன என முடிவெடுத்து தனது கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறார்.
சுமார் 12 முதல் 15 கிலோகிராம் எடையுள்ள இவரது ரோபோ சுவற்றில் பற்றிக்கொண்டு கண்ணாடியின் மீது முதலில் தண்ணிரை தெளிக்கும் பிறகு துடைப்பானில் (microfiber-covered scrubbers) துடைத்துவிடும். ஒரு கண்ணாடியை துடைத்து முடித்தவுடன் ரோபோவுடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ரொபெல்லர்ஸ் அதனை விடுவிக்கும் பிறகு ரோபோவோடு இணைக்கப்பட்டிருக்கும் கேபிள் மூலமாக ரோபோ அடுத்த கண்ணாடிக்கு நகர்த்தப்படும். நகர்ந்தவுடன் அடுத்த ப்ரொபெல்லர்ஸ் சுவற்றோடு ரோபோவை இணைத்து பிடித்துக்கொள்ளும்.
19 வயதேயான ஓலிவர் நிக்கோலஸ் $75,000 பரிசுத்தொகையும் இந்த போட்டியில் முதலிடம் பெற்ற பெருமையையும் தட்டிச்சென்றது.
குறைந்த விலை மின்தேக்கிகள் : (Cooking up low-cost supercapacitors)
கண்டுபிடித்தவர் : மேகனா போலிம்பாளி (Meghana Bollimpalli)
பரிசு : $50,000
மின்சாரத்தை இரண்டு விதங்களில் சேமிக்கலாம். ஒன்று பேட்டரி, இதில் மின்சார சக்தி வேதிப்பொருள்கள்(Chemically) வாயிலாக சேமித்துவைக்கப்படும். அதேசமயம் மின்தேக்கிகள் (capacitors) இல் மின்சாரம் நேரடியாக (physically) எலெக்ட்ரான்களாக சேமித்து வைக்கப்படும்.
பல உயர் தொழில்நுட்ப கருவிகளில் பேட்டரியை விட மின்தேக்கிகள் (capacitors) தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவை நேரடியாக எலக்ட்ரான்களை சேமித்து வைத்திருப்பதனால் விரைவாக அதிக மின்னாற்றலை கொடுக்க வல்லவை.
உதாரணத்திற்கு defibrillator என்னும் கருவி, ஹார்ட் அட்டாக் (Heart Attack) ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சுப்பகுதியில் பொருத்தப்படும் கருவி.
இந்த கருவிகளின் அதீத விலைக்கு மிக முக்கிய காரணம் இதில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் தான். இதனால் பல கருவிகள் $4000 க்கு கூட விற்கப்படுகின்றன. ஆனால் இவர் கண்டுபிடித்த மின்தேக்கிகளை பயன்படுத்தினால் அந்த கருவிகளை $300 க்கு வாங்க முடியும்.
இவரது கண்டுபிடிப்புக்கு $50,000 பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த பேட்டரி உருவாக்குதல் (Building a better battery) :
கண்டுபிடிப்பாளர் : துருவிக்
பரிசு : $50,000
உலகமே பெரும்பாலும் பேட்டரியை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. நம் அனைவருக்குமே தெரிந்தது தான் பேட்டரியின் ஒரு பக்கத்திலிருந்து எலெக்ட்ரான்கள் (ஆனோடு) இன்னொரு பக்கத்திற்கு (கேதோடு ) வாயிலாக பயணிக்கும். சில சமயங்களில் பேட்டரிகள் திடீரென மின்சக்தியை இழந்துவிடும் அல்லது குறைந்து போகும். அதற்கு முக்கிய காரணம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பக்கங்களுக்கு இடையே ஏற்படும் லீக்கேஜ் தான்.
காற்றாலைகளில் பயன்படுத்தும் பேட்டரிகள் போன்ற பெரிய பேட்டரிகளில் இந்த குறைபாடு அதிகமாக நடக்கும். இந்த பேட்டரிகளுக்குள் இருக்கக்கூடிய வேதிப்பொருள்கள் மூலமாக இந்த லீக்கேஜ் எளிமையாக நடக்கும்.
இவர் plastic membrane அதாவது இரண்டு பக்கங்களுக்கும் இடையே வைக்கக்கூடிய பொருளை உருவாக்க முனைந்தார். அதில் சின்னஞ்சிறு துளைகள் இருக்கும், அந்த துளைகளை நிரப்ப அதன் மேல் பூசுவதற்கு பேஸ்ட் ஒன்றினை தாயார் செய்தார். அதன்படி tetraethyl orthosilicate எனும் பொருளானது தண்ணீருடன் வினைபுரியும் போது உருவாகும் சிலிகா அந்த துளைகளை சிறப்பாக அடைக்கும் வேலையை செய்கிறதாக கண்டறிந்தார்.
இவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தினால் 30% அளவிற்கு பேட்டரியின் விலையை குறைக்கலாம். பேட்டரிகளில் 40% சதவிகித விலை அடங்கியிருப்பது இந்த தடுப்பான்களில் (barrier) தான். ஆகவே இவரது இந்த கண்டுபிடிப்பால் பேட்டரிகளை குறைவான விலையில் உருவாக்க, விற்க முடியும்.
இவருக்கு Intel Foundation Young Scientist Award மற்றும் $50,000 பரிசாக வழங்கப்பட்டது.
இவர்களை போன்றே இந்த போட்டியில் பலர் வெற்றிகளை பெற்று கோப்பைகளையும் பரிசுகளையும் வென்றனர்.
Thanks – https://www.sciencenewsforstudents.org
PAMARAN KARUTHU