How to put EGG into a bottle? | Tamil | முட்டை உடையாமல் கண்ணாடி பாட்டிலுக்குள் நுழைப்பது எப்படி?
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் அவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகதான் . பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தப்போகும் அந்த சிறுவர்களுக்கு அறிவியலை அறிமுகப்படுத்திடவே எளிமையான ஆய்வுகளை பதிவு செய்கிறோம் . இவற்றை வீட்டிலேயே செய்து பார்க்க முடியும் .
அந்தவகையில் இதற்கு முன்னர் ஒளிரும் லாவா விளக்கினை உருவாக்குவது எப்படி? என்பதனை விளக்கியிருந்தேன் . வீட்டில் செய்து பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன் .
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
இங்கு நாம் பார்க்கப்போவது ,
அவித்த முட்டையை நசுக்காமல் குறுகிய வாயுடைய கண்ணாடி பாட்டிலுக்குள் நுழைப்பது எப்படி ?
தேவையான பொருள்கள்
அவித்த முட்டை
கண்ணாடி பாட்டில்
பேப்பர் துண்டு
தீப்பெட்டி
செய்முறை
காலியாக உள்ள கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளவும் . அதன் முகத்துவாரம் அவித்த முட்டையின் அளவினை விட சற்று சிறிதாக இருக்க வேண்டும் அல்லது முட்டையை அதற்கேற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள் .
அவித்த முட்டையை தயாராக வைத்துக்கொள்ளவும்.
சிறிய பேப்பர் துண்டினை பற்றவைத்து கண்ணாடி பாட்டிலுக்குள் போட்டு விடவும் .
போட்ட மூன்று அல்லது ஐந்து நொடிகளுக்குள் கண்ணாடி பாட்டிலின் மூடி பகுதியில் அவித்த முட்டையை காற்று போகாதவாறு வைக்க வேண்டும் .
பேப்பர் எரிவது நின்றுவிடும் (காரணம் அங்கே ஆக்சிஜன் குறைந்துவிடும் ).
நன்றாக கவனியுங்கள் பேப்பர் துண்டு எரிந்து முடிந்தவுடன் முட்டை மெல்ல மெல்ல உள்ளே நுழைந்து செல்லும் .
ஏன் முட்டை தானாக உள்ளே சென்றது ?உள்ளிருக்கும் அறிவியல் உண்மை
காலியாக உள்ள பாட்டில் என்றாலும் அதற்குள் காற்று இருக்கத்தான் செய்யும் . தீப்பற்ற வைத்த பேப்பர் துண்டினை பாட்டிலுக்குள் போடும்போது அங்கு ஏற்படும் வெப்பத்தினால் காற்று மூலக்கூறுகள் விரிவடைந்து பாட்டிலை விட்டு வெளியேற ஆரம்பிக்கும் .
உடனடியாக முட்டையை மூடி பகுதியில் வைக்கும்போது வெளியேறும் காற்றினை அது தடுக்கும் , முட்டையின் மீது அழுத்தம் உண்டாவதை காண முடியும் .
பிறகு சிறிது நொடிகளில் நெருப்பு நின்றவுடன் வெப்பமும் குறைந்துவிடும் . விரிவடைந்த காற்று மூலக்கூறுகள் தற்போது இறுக ஆரம்பிக்கும் . இதனால் வெளியேறிய காற்றிற்க்கான வெற்றிடம் பாட்டிலிலுக்குள் உருவாகும் . அப்போது அந்த வெற்றிடத்தை நிரப்பிட வெளியிலிருக்கும் காற்று உள்ளே நுழைந்திட முயலும் . அழுத்ததையும் கொடுக்கும் . அதனால் முட்டை அழுத்தப்பட்டு உள்ளே நுழையும் .
செய்துபாருங்க ….
தொடர்ச்சியாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை படிக்க பாமரன் கருத்து இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள் .
பாமரன் கருத்து