Gender Equality in Kaalaa | பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியதுவம் | செல்வி , செரினா , புயல் | அருமை ரஞ்சித்

பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவு முக்கியதுவம் கொடுக்கபடுவதில்லை என குற்றசாட்டு சொல்லப்படுவது உண்டு . பெரும்பலான திரைக்கதைகள் நடிகர்களை மையப்படுத்தியதாகவே இருக்கும் . அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடிகைகள் காதல் செய்வதற்கும் , பாடல் காட்சிகளில் நடிப்பதற்கும் மட்டுமே இருப்பார்கள் . இன்னும் சொல்லப்போனால் கதைக்கு பிடிமானம் இல்லாமல் வெறும் கிளாமருக்காகவே நடிகைகள் இருப்பார்கள் .

 

தற்போது வெளியாகி இருக்கக்கூடிய காலா திரைப்படத்தில் பின்தங்கிய மக்களின் உரிமை போராட்டத்தையும் , அவர்கள் தங்களது நிலத்தினை அதிகார வர்க்கத்தினரோடு போட்டியிட்டு வெல்லும் விதத்தினையும் அழகாக படம் ஆக்கியிருந்தனர் .

 

 

ரஞ்சித் அவர்களின் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கக்கூடியது அல்ல . அவரின் பேச்சுக்கள் எண்ணங்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே இருக்கும் .

 

இந்த காலா திரைப்படத்தில் இன்னும் சிறப்பாக பெண்கள் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்திருக்கிறார் .

 

இன்னும் சொல்ல வேண்டுமானால் காலா ரஜினிக்கு இணையாக அவரது மனைவி செல்வி , முன்னால் காதலி செரினா , மகனை காதலிக்கும் ஒரிசா பெண்ணான புயல் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது .

 

இதில் என்னை மிகவும் கவர்ந்தவர் புயல் தான் . பெயருக்கு ஏற்றவாறு அதிகாரவர்க்கத்தை எதிர்த்து ஒவ்வொரு காட்சியிலும் அதிரடியாக கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பார் . 

தொடக்க போராட்ட சீனில்  ரஜினியின் இளைய மகனும் புயலின் காதலனுமாக இருக்க கூடிய ஆண்மகன் தயங்கும் போதும் அமைதியாக பேசாமல் இரு என சொல்லிடும்போதும் அடங்காமல் கோபக்கணைகளை வீசி எரிவாள் . இதேபோல பல கட்டங்களில் புயல் பொங்கி எழுவது நடந்துகொண்டே இருக்கும் .

 

 

இறுதி போராட்டத்தில் காவலர்கள் புயலின் கீழாடையை அவிழ்த்து அவளை நிலைகுலைய வைக்க முயல்வார்கள் . ஆனாலும் கவலையின்றி மானம் ஆடையில் அல்ல என்பதனை உணர்த்திட கையிலே கட்டையுடன் அந்த கொடுமைக்காரர்களை அடித்து நொறுக்கும் காட்சி அத்தனை அருமை .

 

ரஜினியின் திரைப்படமாக காலா இருந்தாலும் அவருடைய மனைவி கதாபாத்திரமான செல்விக்கும் காதலியாக வரக்குடிய செரீனாவிற்கும் ரஜினிக்கு இணையான அளவிற்கு முக்கியதுவம் , நேர அளவு கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு .

 

 

இன்னும் கூடுதலாக தன்னுடய வெற்றி அனைத்திற்கும் தன் மனைவி செல்விதான் காரணம் என சொல்லிடும்பொதும் ரஜினியையே செல்வியும் செரீனாவும் கேள்வி கேட்கும்போதும் ரஜினி செல்விக்கு பயந்தமாதிரி காட்சி வரும்போதும் ஆண் பெண் பாலின வேறுபாடு முழுவதுமாக அற்றுப்போகிறது .

 

தற்போது வரக்கூடிய படங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக காலாவில் ஆண் பெண் பாலின வேறுபாட்டையும் நிச்சயமாக கலைந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் . இது நிச்சயமாக வரவேற்கதப்பவேண்டிய விசயம்.

 

PAMARAN KARUTHU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *