என் ஜன்னலுக்கு வெளியே : வார்த்தைகளில் இவ்வளவு வக்கிரமா ?
காலை வெயில் வந்துவிட்டது , அதனையும் தாண்டி திடீரென சட சடவென கோடை மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது . இந்த கடும் வெயிலுக்கு கோடை மழை சற்று ஆறுதலான விசயம்தான் .
ஆனால் என் ஜன்னலுக்கு வெளியே ஆறுதலை கொஞ்சமும் கொடுக்காத அளவிற்கு வன்முறையாக பலர் பேசி வருவது எனக்கு மன வருத்தத்தை கொடுக்கின்றது .

இத்தனைக்கும் பேசுபவர்கள் விபரம் அறியாதவர்கள் அல்லர். நல்ல படிப்பறிவையும் , பெரிய அளவில் நட்பு வட்டத்தையும் , மிக பெரிய அளவில் அறிவுள்ளவர்களாகவும் இருக்கின்றனர் .
நிர்மலா தேவி பிரச்சனை ஏதோ ஊழல் பிரச்சனை அல்ல , சமூக பிரச்சனை . ஒவ்வொரு மாணவ மாணவியரும் படித்தால் மட்டும் வாழ்வில் வெற்றிபெற முடியாது என்கிற கேவலமான எண்ணவோட்டத்தை விதைக்கின்ற ஆபத்தான பிரச்சனை .
இதில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரை கேள்வி எழுப்பாமல் சாலையில் உறங்கிக்கொண்டிருப்பவர்களையா கேள்வி கேட்க முடியும் . அப்படி கேள்வி எழுப்புவர்களை அநாகரிகமாக பேசி நிலைகுலைய வைப்பதென்பது எவ்வளவு மோசமான செயல்பாடு .
ஆளுநர் அல்ல ஆண்டவனாகவே இருந்தாலும் ஒரு பெண்ணிண் கண்ணத்தை அவரது அனுமதியில்லாமல் தொடுவது என்பது எப்படி நியாயமாகும் . அதனை துணிவோடு எதிர்த்த பெண்ணை பாராட்டாமல் வெறும் பாஜகவின் ஆதரவாளர் ஆளுநர் என்பதனால் பத்திரிக்கை துறையையே அவமதிப்பது சிறந்ததா ?
ஒருவர் பெண் பத்திரிகையாளரை இவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறார் . ஆனால் அலட்டிக்கொள்ளாமல் செய்தி நிறுவனங்கள் இயங்குகின்றன .
பெரியார் சிலையை உடைப்பேன் என்பதாகட்டும் , பிறரை தனிபட்ட முறையில் விமர்சிப்பதாகட்டும் , பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாகட்டும் அனைத்துமே தவிர்க்கப்படவேண்டியவையே .
செய்வார்களா வாய்ச்சொல் வீரர்கள் ?
பாமரன்