வெற்றி பெற்றவர்கள் புரிந்துகொண்ட 10 உண்மைகள், மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இங்கே அனைவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்களை நீங்கள் பட்டியலிட்டு அவர்களது கடந்த காலத்தை கவனித்துப் பார்த்தால் அதிலே அவர்கள் பல தோல்விகளை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதே தோல்வியை சந்தித்த பலர் காணாமல் போயிருக்கும் போது சிலர் மட்டும் எப்படி வெற்றியாளர்களாக மாறினார்கள் என யோசித்தால் ‘அவர்கள் உண்மைகளை புரிந்துகொண்டவர்கள்’ என்பது புலப்படும். நீங்களும் வெற்றிக்காக போராடுகிறவர் எனில் பின்வரும் உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.

Read more

மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக… Video

மீராபாய் க்கு ஆர்ச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்த குஞ்சராணி தேவி என்ற பளுதூக்கும் வீராங்கனை பற்றி படித்தபிறகு பளு தூக்குதலில் விருப்பம்கொண்டார் .விருப்பத்தை அம்மாவிடம் சொல்ல அம்மாவும் ஒப்புக்கொண்டார். மீராபாய் பளுதூக்கும் பயிற்சியை பெறத்துவங்கினார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றபிறகு இவர் மீதான கவனம் அதிகரித்தது.

Read more

இந்த விசயங்களை செய்யாமல் இருந்தாலே மகிழ்ச்சியாய் வாழலாம்

இந்த உலகில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது எதுவென்று நீங்கள் நிதானமாக சிந்தித்துப்பார்த்தால் ‘நேரம்’ என்பது மட்டும் தான் சரியான பதிலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நேரம் என்பது யாருக்காகவும் எதற்காகவும் காத்துகொண்டு இருப்பது இல்லை, திரும்பவும் வருவதும் இல்லை. குறிப்பிட்ட அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில் தான் நாம் எவ்வளவு புத்திசாலி என்பதை அறிய முடியும். நம்மில் பலர் தேவையற்ற பல விசயங்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை கடினமானதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் எந்தெந்த விசயங்களுக்காக நேரம் ஒதுக்கிகொண்டு வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

Read more

மகிழ்ச்சியாய் வாழ இரண்டு வழிகள் | Two Easy Ways for Happy Life

இங்கே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனை நாம் எங்கெல்லாமோ தேடி அழைகிறோம். நான் இங்கே குறிப்ப்டப்போகும் இரண்டு வழிகளை பின்பற்றினால் இலவசமாகவே நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும்.

Read more

ஷகிரா பாப் பாடகியின் வெற்றிக்கதை | Shakira Isabel Mebarak Ripoll Success Story

பாப் உலகில் கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வாங்கிவிட்ட ஒரு பாப் பாடகி தான் ஷகிரா. இளமைப்பருவத்தில் இவரது குரல் ஒரு பாடகருக்கான குரல் போல இல்லாமல் இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏழை குடும்பத்தில் பிறந்த ஷகிரா இன்று மாபெரும் பாப் பாடகியாக மாறியிருக்கிறார், கோடிகளில் சம்பாதிக்கிறார், பாடல் எழுதுகிறார், உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ‘Whenever, Wherever‘, ‘Hips Don’t Lie.’ and ‘Waka Waka‘ என்பன போன்ற பல சூப்பரான ஆல்பம்களை பாடியுள்ள ஷகிரா கிராமி விருது, லத்தீன் கிராமி விருது, அமெரிக்கன் மியூசிக் விருது என பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். உலகம் முழுமைக்கும் இவரது 70 மில்லியன் ஆல்பம்கள் விற்று தீர்ந்துள்ளன.

Read more

மகளின் கனவை சிதைத்த தந்தை | நீங்க இதை செஞ்சுறாதீங்க

நேர்மையை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். ஆனால் சமூகத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனுக்காக என்றெண்ணி தவறுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம். இங்கே பெற்றோர்கள் எண்ணுவது ஒரே விசயம் தான், பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்கும் ஒரு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் அவ்வளவே. நேர்மையான நபராக அவர் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் போய்விட்டது. இதனால் தான் இங்கே பிள்ளைகளின் எதிர்காலம் அழிந்துபோகிறது. உங்களது பிள்ளைகளுக்கு தயவு செய்து இப்படியொரு தவறை செய்திடாதீர்கள்.

Read more

பழைய சைக்கிள், ஷூ இல்லை – வைரலாகும் சிறுவனின் கதை கேளுங்கள்

என்னிடம் அது இல்லை, இது இல்லை ஆகவே தான் நான் அதைச் செய்திட முயற்சி செய்திடவில்லை, வெட்கமாயிருக்கிறது என தாழ்வு மனப்பான்மையால் மூழ்கிக்கிடப்போருக்கு இந்த சிறுவனின் கதை

Read more

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே கே ரௌலிங் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டார் தெரியுமா?

எந்த விதத்தில் பார்த்தாலும் எனக்கு தெரிந்தவரையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவள் நானாகத்தான் இருப்பேன்

ஹாரிபாட்டர் என்ற நாவலின் மூலமாக பில்லியனர் ஆக மாறிய முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கு உரிய ரௌலிங் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அடுத்த நாவல் எப்போது வரும்? ஹாரிபாட்டருக்கு என்னவாகும்? என உலகம் முழுமைக்கும் இவரது அடுத்த பதிவிற்க்காக காத்திருந்தவர்கள் கோடி. இவருடைய புத்தகங்கள் 73 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் பணத்தை சம்பாதித்த இவர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நபரா? என உங்களின் புருவம் உயரலாம். ஆனால் அதுதான் உண்மை.

Read more

2019 இல் இவ்வளவு தற்கொலைகளா? : கவனம் தேவை

2019 இல் மட்டும் 1,39,123 பேரும், 2018 இல் 1,34,516 பேரும் 2017 இல் 1,29,887 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கூர்ந்து இந்தத் தகவலை கவனித்தால் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

Read more

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ 10 ஆலோசனைகள் | Life Hacks in Tamil

வாழ்வென்பது இவ்வளவு தான் என்பதையும் நடந்து முடிந்தவற்றை நாம் கவலைப்பட்டாலும் மாற்றிட முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். ஒருவர் தனக்கு நடந்தவற்றை எண்ணி எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டு நில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு பயணிக்கத் துவங்கினால் பின்வருவனவற்றை எளிமையாக செய்திட இயலும்.

Read more