சச்சின் அடித்ததிலேயே வலி நிறைந்த சதம் இதுதான் | Sachin scored 140 after his father death

சாதாரண மனிதர்களைக்காட்டிலும் ஒரு சூழ்நிலையை சிறப்பாக கையாள விளையாட்டு வீரர்களுக்கு தெரியும். அவர்கள் அதற்காகவே பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இறுதியில் அவர்களும் மனிதர்கள் தான். அப்பாவின் திடீர் மறைவு ஏற்படுத்திய வலிகளை கடந்து சச்சின் அடித்த 140 ரன்கள் என்பது மகத்தான சாதனை.

Read more

கரோனா வைரஸ் க்கு எதிரான “மக்கள் பந்த்” – வெற்றி பெறட்டும்

அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவெடிக்கைகள் குறித்தும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

Read more

கரோனாவை அலட்சியமாக எதிர்கொள்ளும் தமிழர்கள் [இந்தியர்கள்]

கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி இருக்கும்.

Read more

கொரோனா வைரஸ் இத்தாலி அதிகமாக பாதிக்கப்பட்டது ஏன்?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதிய நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள். புதிதாக நோய் தோற்று ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. நோய் பாதிப்பு துவங்கியதாக கருதப்படும் சீனாவில் புதிதாக வைரஸ் பரவல் ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சீனாவிற்கு வெளியேயும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக இத்தாலி [1,809], ஈரான் [724] போன்ற நாடுகள் இதில் முதலிடத்தில் இருக்கின்றன.

Read more

“கேசவானந்த பாரதி வழக்கு” – இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான வழக்கு “கேசவானந்த பாரதி வழக்கு”

Read more

சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது?

கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியதாக கூறப்படும் வூஹான் நகரில் மிகப்பெரிய மருத்துவமனையை மிகவும் குறுகிய நாட்களில் கட்டிமுடித்தது சீன அரசு. இப்படிப்பட்ட வேகமான நடவெடிக்கைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. தற்போது சீனாவில் புதிதாக வைரஸ் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கு மிகமுக்கியக்காரணம் மருத்துவத்துறைக்கு பெரிதும் தொழில்நுட்பம் உதவி செய்து வருவது தான். இந்தப்பதிவில் சில தொழில்நுட்பங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

Read more

கரோனா வைரஸ் – சிறப்பாக எதிர்கொள்ளும் சிங்கப்பூர் – மற்ற நாடுகளும் பின்பற்ற முடிவு

இப்போதைக்கு வெளிப்படையாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுமைக்கும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் கரோனா வைரஸை கட்டுப்படுத்த சிறப்பான நடவெடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

Read more

கரோனா வைரஸ் முழுத்தகவல் படியுங்கள் | Corona Virus | Covid 19

மூச்சுக்குழாயில் தாக்குதலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலினால் ஆரம்பகட்டத்தில் காய்ச்சல் சளி போன்றவை ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு பின்னர் நுரையீரல் செல்களில் இருக்கும் புரத தன்மையை பாதித்து தாக்குதலை அதிகரிக்கிறது. பின்னர் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் நிமோனியாவை உருவாக்குகிறது.

Read more

அதென்ன “மகிழ்ச்சி பாடத்திட்டம்” – டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் புதுவித பாடத்திட்டம்

ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின் தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டுதான் டெல்லி அரசாங்கம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”ஒன்றினை வடிவமைக்க துவங்கியது. ஜூலை,2018 இல் சில டெல்லி அரசுப்பள்ளிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட “மகிழ்ச்சி பாடத்திட்டம்” தற்போது கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 45 நிமிட கால அளவுள்ள இந்த வகுப்பானது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

Read more

சத்துணவு திட்டத்தை முதலில் துவக்கியவர் இவரே – எல்.சி.குருசாமி

முதல் முதலில் சத்துணவு திட்டத்தை துவங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எல்.சி.குருசாமியை எப்படி வரலாறு மறந்து போனது? எல்.சி.குருசாமி என்ற பெயர் தான் அது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே மதிய உணவு அல்லது சத்துணவு திட்டத்தை துவங்கியவர் இவரே. அதன்படி சென்னையில் இருக்கும் சேத்துப்பட்டு, கோரப்பாளையம் ஆகிய இடங்களில் சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் செலவு மிகுதியால் இந்த திட்டம் வெகுகாலம் நீடிக்கவில்லை.

Read more