கற்பழிப்புக்கு மரண தண்டணை தீர்வா? | Are death penalty real solution for women Crimes (rape)?

 

பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டால் போதும் கடமை முடித்துவிட்டது  என நினைக்கின்ற அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும்  கேட்கின்றேன் , மரண தண்டணை மட்டுமே தீர்வா ?

 

நிர்பயா வழக்கு

 

 

டிசம்பர் 16 2012 அன்று இந்திய தலைநகர் டெல்லியில் நிர்பயா என்னும் இளம்பெண் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் . இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது . ஆண்கள் பெண்கள் மாணவர்கள்  என அனைவரும் வீதிக்கு வந்து பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தின .

 

இந்த கொடூர குற்றம் செய்தவர்களில் 18 வயது குறைவான ஒருவரை தவிர அனைவருக்கும் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது . இந்த வழக்கில் நீதிமன்றமும் அதிக அக்கறை எடுத்து கொண்டது .

 

சிறுமி ஹாசினி

 

 

சென்னையில் பக்கத்து வீட்டில் இருந்த சிறுமி ஹாசினியை தஸ்வந்த் என்னும் இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொலை செய்தார் .

 

இந்த வழக்கும் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது . விரைந்து விசாரனை செய்த நீதிமன்றம் தஸ்வந்த்க்கும் மரண தண்டணை விதித்தது .

 

—————————————–
பாலியல் குற்றங்களினாலும் ஆண்களின் மீதான நம்பிக்கை குறைவினாலும் தனியே வாழ விரும்புவதாக பெண்கள் பலர் கூறுகின்றனர்

 

 

——————————————

 மரண தண்டணையை மீண்டும் உறுதி செய்த நீதிமன்றம்

 

 

இந்த இரண்டு வழக்குகளிலும் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகள் மரண தண்டணையை குறைக்க மேல்முறையீடு செய்தனர் . ஆனால் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றங்கள் , குற்றவாளிகளுக்கு மரண தண்டணையை உறுதி செய்தன .

 

மரண தண்டணை பாலியல் குற்றங்களை தடுக்கிறதா ?

 

 

இந்த இரண்டு குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாக 2011 வரை கிட்டதட்ட 220000 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன (பதிவு செய்யப்பட்டவை மட்டுமே )

 

இந்த இரண்டு குற்றங்களுக்கும் மரண தண்டணை விதித்த பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை , பல மடங்குகள் அதிகரித்து இருக்கின்றன .

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டணை வழங்கப்படுகிறது என்று தெரியாமல் அந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே .

 

 அப்படியானால் இந்தியாவின் கடுமையான சட்டங்களும் மரண தண்டனைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எந்த விதத்தில் குறைத்திருக்கின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது ?

 

————————–

 

————————–

மரண தண்டணை அவசியமில்லையா ?

 

 

பெண்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களுக்கு மரண தண்டணை கொடுப்பதற்கு எதிர்ப்பானது அல்ல என்னுடைய கருத்து . கொடுக்கும் மரண தண்டனையால் அடுத்த வன்புணர்வு கொடுமை நடைபெறாமல் இருக்கின்றதா என்பதுதான் என்னுடைய கேள்வி .

 

சட்டம் இயற்றுவதோடு கடமை முடிந்துவிட்டதாக அரசும் மரண தண்டணை கொடுப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக நீதிமன்றமும் எண்ணுவது ஆகப்பெரிய குற்றம் இல்லையா ?

 

பாலியல் குற்றங்களை தடுக்க என்ன தான் தீர்வு ?

 

பாலியல் கல்வி எங்கே ?

 

பாலியல் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் .

 

சிறந்த மனநல ஆலோசகர்களை பள்ளி தோரும் பணிக்கு அமர்த்தி , மாணவர்களுக்கு பாலியல் குறித்த புரிதல்களை ஏற்படுத்திட வேண்டும்

 

பல பாலியல் குற்றங்கள் தெரிந்தவர்களால் நடைபெறுகிறது  .

 

முதலில் பெண்களுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்திட வேண்டும் , அதற்கு எதிராக புகார் அளிக்கும் மன தைரியத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் .

 

 

காவல்துறையினரால் அந்த புகார்கள் முறைப்படி விசாரனை செய்யப்பட வேண்டும் . காவல்நிலையத்திற்கு சென்றால் பாதுகாப்பு என்கிற மணநிலைக்கு பெண்களை கொண்டுவர வேண்டும் .

 

நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தண்டணை வழங்கிடும் வாய்ப்பாக தனி நீதிமன்றங்களை அமைத்திடுதல் வேண்டும்.

 

பெண்கள் போதைப்பொருள் அல்ல அவர்கள் மனிதர்கள் , அவர்களுக்கு உணர்வு இருக்கின்றது என்பதனை ஒவ்வொருவரும் உணரும்பட்சத்தில் குற்றங்கள் தடுக்கப்படும் . 

அதனை நோக்கியே நமது பயணமும் இருக்க வேண்டும்

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *