#MeToo Hastag தெரியுமா? தெரிஞ்சுகோங்க | What is #MeToo Hastag?

 


 

Women's sharing their past harassment experiences in twitter #MeToo Hastag
Women’s sharing their past harassment experiences in twitter #MeToo Hastag

 

2007 ஆம் ஆண்டில் ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein மீது 70 கும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குற்றம் வெளிப்படுத்தப்பட்டது .  அப்போது தான் முதன் முதலாக ட்விட்டரில் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான அலீசா மிலானோ #MeToo என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி குற்றசாட்டை முன்வைத்தார் . அதன் பிறகு வெளிநாடுகளில் இருந்து பல பெண்கள் குற்றசாட்டை முன்வைத்தனர் . இந்தியாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் தற்போது பல பெண்கள் தங்களுக்கு கடந்த காலங்களில் நிகழ்ந்த பாலியல் குற்றசாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்து இருக்கின்றனர் .

 

தமிழகத்தில் இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டும் அதனை வைரமுத்து மறுத்திருப்பதும் .

 


 

#MeToo Hastag பாராட்டுதலுக்கு உரியது



பெண்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் அதனை வெளியில் சொல்லிவிட மாட்டார்கள் , சொன்னால் முதல் அவமானம் அவர்களுக்குத்தான் என்ற ஆண்களின் மனோபாவம் தான் . இந்த கருத்தாக்கத்தை உடைத்து பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல வந்திருப்பதனை பாராட்டவே வேண்டும் . அப்படி வெளிப்படும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தாருக்கும் பாராட்டுகள் .

 


 

#MeToo Hastag மட்டுமே தீர்வல்ல



சமூகத்தில் புகழ்பெற்றிருக்கக்கூடிய நபர்களின் மீது பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைக்கும் போது மிக கவனமாக வைக்க வேண்டும் .

பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விசயங்களை இப்போது கூறும்போது அதற்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும் . அப்போதைய சுயநலனுக்காக அதனை பொறுத்துவிட்டு இப்போது குமுறுவது உங்களின் மீதான பார்வையை சந்தேகிக்க வாய்ப்பு உண்டு .

ட்விட்டரில் எழுதுவது தண்ணீரில் எழுதுவதற்கு ஒப்பானது , அப்போதைக்கு வேண்டுமானால் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியையும் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு அவமானத்தையும் தரலாம் . ஆனால் ஆதாரத்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் மட்டுமே உங்கள் புகாரின் மீதான உண்மையை உணர முடியும் . பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்கும் . தேசிய மகளிர் ஆணையமும் இதனை வலியுறுத்தி இருக்கின்றது .

 


 

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள் ?



உங்களது விருப்பமில்லாமல் உங்களுடன் வேலைப்பார்க்கும் நபர்களோ அல்லது உயர் அதிகாரியோ உங்களை தொடுவதும்  தவறான செயலுக்கு உட்படுத்திடும் எண்ணத்தோடு பேசுவதும் பாலியல் அத்துமீறல்கள் .

 

MeToo Movement
MeToo Movement



பயண நேரங்களில் கூட்ட நெரிசலை காரணமாக்கியோ அல்லது சூழ்நிலையை காரணமாக்கியோ உங்களது விருப்பமில்லாமல் சில சீண்டல்களை செய்வது பாலியல் அத்துமீறல்கள் .

வெறும் செயல்கள் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் அல்ல உங்களது விருப்பமில்லாமல் பாலியல் ரீதியாக பேசுவதும் கட்டாயப்படுத்துவதும் பாலியல் அத்துமீறல்கள் .

இவை சில உதாரணங்களே . உங்களுக்கு இப்படி நடப்பின் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதனை ஒதுக்கிவிட்டு புகார் அளித்திடுங்கள் .

 

புகார் அளிப்பதற்கு தைரியம் மட்டுமே போதுமானது அல்ல ஆதாரமும் அவசியம் .

 


 

நல்ல ஆண்களை பற்றியும் பேசலாமே ?

 

 


ஆண்களால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை கூறுவது வரவேற்பிற்கு உரியது . ஆனால் அவர்கள் மட்டுமே ஒட்டுமொத்த ஆண்கள் இல்லையே . அப்படியிருக்கும்போது குற்றங்களை மட்டுமே சொல்வதென்பது பெண்களுக்கு ஆண்களின் மீதான அச்சத்தையே அதிகரிக்கும் . ஆகவே பெண்கள் தாங்கள் சந்தித்த நல்ல ஆண்களை பற்றியும் பேசவேண்டும் . அப்போதுதான் நல்லவர்களும் வெளிப்படுவார்கள் .

 


 

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *