அதிமுக குழப்பத்திற்கு யார் காரணம் ?முடிவு என்ன ?
RTI மனுவுக்கு அளித்துள்ள பதிலில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதில் வழக்கு இருப்பதால் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம் .
அப்படி இருக்கும்போது தினகரனின் நியமனமும் அவர் நியமித்தவர்களின் நியமனமும் கேள்விக்கு உள்ளாகிறது .
எடப்பாடியின் தீர்மானம் :
அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே யாரையும் நியமிக்கவோ நீக்கவோ அதிகாரம் உண்டு . ஆனால் ஜெயலலிதா இறந்தபின் சசிகலாவை நியமித்ததும் பொது குழு உறுப்பினர்கள் தான் . தினகரனை நீக்கியதும் அவர்கள்தான் (சிலர் இல்லை )
தேர்தல் ஆணையத்தின் வேலை என்ன :
பொதுச்செயலாளர் இறந்தவுடன் கட்சி நிலைகுலைந்துபோகும் என்பது அனைவருக்கும் தெரியும் . சசிகலா நியமிக்கப்பட்டபோதே உறுப்பினர்கள் ஆதரவும் தொண்டர்களுக்கு அதிருப்தியும் இருந்தது ..
இதையெல்லாம் கண்ட தேர்தல் ஆணையம் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்திடுமாறு அறிவுறுத்தி இருக்கலாம் .அதுவரை சசிகலாவே தற்காலிக பொதுச்செயலாளராக இருப்பதால் பெரிதாக எதுவும் நடந்துவிடாது ..வேண்டுமென்றால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி புதிதாக யாரையுமே நியமிக்கக்கூடாது என உத்தரவு போட்டிருக்கலாம் ….
இப்படி செய்திருந்தால் இரட்டைஇலை யாருக்கு என்கிற பிரச்சனையே வந்திருக்காது …
யாருடைய விருப்பத்துக்காக எளிமையாக முடிக்கவேண்டிய விசயத்தை தேர்தல் ஆணையம் இப்படி செய்துகொண்டிருக்கிறதா என தெரியவில்லை .
அரசு இயந்திரங்கள் மக்களுக்காகவே சுழல வேண்டும் ..
பாமரன் கருத்து