கக்கனும் காமராசரும் வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? சிறப்பு பதிவு

கக்கன் அவர்களுக்கும் காமராசர் அவர்களுக்கும் பிறகு எத்தனையோ கட்சிகள் வந்தாலும் எத்தனயோ ஆளுமைகள் வந்தாலும் நாம் இன்னும் சிறந்த அரசியல்வாதிக்கான உதாரணமாக இன்னும் கக்கனையும் காமராசரையுமே கூறிக்கொண்டு இருக்கிறோம் .

 

 

எதற்காக நாம் உதாரணம் சொல்ல கூட வேறு நல்ல அரசியல்வாதிகள் கிடைக்கவில்லை ? யார் காரணம் ? இது சரியானதா ?

 

சரியாக சொல்லவேண்டுமானால் நாமே காரணம் .

 

அண்மையில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசியல் நகர்வுகள் வருத்தம் அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன . மக்கள் வாக்குக்கு பணம் வாங்குவதை குற்றமென கருதாமல் சாதரண நிகழ்வாக கருதும் போக்கு அதிகரித்துவிட்டது .

 

 

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் சக மக்களின் மீதான நம்பிக்கையின்மை . ஆம் நண்பர்களே இன்று ஜனநாயகம் பண நாயகமாகிவிட்டது . காரணம் நல்லது செய்தாலே வென்றுவிட முடியாது என்கிற அரசியல்வாதியின் நம்பிக்கையின்மையும் , பக்கத்து வீட்டுக்காரன் காசு வாங்கிட்டுதானே வாக்களிக்கிறான் நாம் சரியாக போட்டு என்னாக போகிறது என்கிற வாக்காளனின் நம்பிக்கையின்மையும் தான் .

 

நினைத்துப்பாருங்கள் நல்லது செய்தாலே மக்கள் வெற்றியை கொடுத்துவிடுவார்கள் என்றால் நிச்சயமாக எந்த அரசியல்வாதியும் தவறே செய்ய மாட்டான் . பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிட முடியாது என்கிற நம்பிக்கை அரசியல்வாதிக்கு  இருந்தால் நிச்சயமாக பணத்தினை சுருட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டான் .

 

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் சக மக்களின் மீதான நம்பிக்கையின்மை . ஆம் நண்பர்களே இன்று ஜனநாயகம் பண நாயகமாகிவிட்டது . காரணம் நல்லது செய்தாலே வென்றுவிட முடியாது என்கிற அரசியல்வாதியின் நம்பிக்கையின்மையும் , பக்கத்து வீட்டுக்காரன் காசு வாங்கிட்டுதானே வாக்களிக்கிறான் நாம் சரியாக போட்டு என்னாக போகிறது என்கிற நம்பிக்கையின்மையும் தான் .

 

நினைத்துப்பாருங்கள் நல்லது செய்தாலே மக்கள் வெற்றியை கொடுத்துவிடுவார்கள் என்றால் நிச்சயமாக எந்த அரசியல்வாதியும் தவறே செய்ய மாட்டான் . பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிட முடியாது என்கிற நம்பிக்கை அரசியல்வாதிக்கு  இருந்தால் நிச்சயமாக பணத்தினை சுருட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டான் .

 

 

நாம் என்ன செய்கிறோம் ? நாம் பக்கத்து வீட்டுக்காரன் மேலேயும் பக்கத்து வீட்டுக்காரன் நம் மேலேயும் பழியை போட்டுவிட்டு வாக்கினை பணம் வாங்கிக்கொண்டு போடுகிறான் .

 

பக்கத்து வீட்டுக்காரன் வாங்க மாட்டான் , பக்கத்து ஊர்க்காரர்கள் வாங்க மாட்டார்கள் , பக்கத்து மாவட்டக்காரர்கள் வாங்க மாட்டார்கள் , தமிழக மக்களே வாங்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் வந்துவிட்டால் நன்மை செய்யும் அரசியல்வாதி துணிந்து நன்மை செய்வான் . பணத்தின் மீது  நாட்டம் செலுத்த மாட்டான் . .

 

அரசியல்வாதிகளின் மனம் பதவிக்குத்தான் முதல் உரிமை கொடுக்கும் , பணத்திற்கு அல்ல .

 

 

ஜனநாயகம் குடிமகனுக்கு அளித்துள்ள அற்புதமான கொடை “வாக்களிக்கும் உரிமை ” . அதனை முறையாக பயன்படுத்தினால் நிச்சயமாக கக்கன் காமராசருக்கு பிறகு சொல்லக்கூடிய நல்ல அரசியல்வாதியை உருவாக்கிட முடியும் .
 

நம்பிக்கையோடு ஜனநாயகம் வளர்ப்போம் .

நன்றி

 

பாமரன் கருத்து

Share with your friends !

2 thoughts on “கக்கனும் காமராசரும் வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? சிறப்பு பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *