அரசியல் பழகு தோழா – அண்ணாவை போல சிறந்த தொண்டனாக இரு

அரசியல் பழகு தோழா !

ஒரு அரசியல் கட்சியானாலும் நிறுவனமானாலும் அதன் தலைமையும் தொண்டனும் எவ்வாறு நடந்துகொள்ளுதல் வேண்டும் என்பதற்கு அறிஞர் அண்ணாவே மிக சிறந்த உதாரணம் .

அறிஞர் அண்ணா :

அறிஞர் அண்ணாவிற்கு தொண்டனாக பெரியாரின் திராவிட கழகத்தில் பணியாற்றிய அனுபவமும் பிறகு உருவான திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைமை பொறுப்பில் இருந்த அனுபவமும் உண்டு .

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

பெரியாரின் திருமணம் :

பெரியாருக்கு வயது 71 . மணியம்மைக்கு வயது 26 . பெரியார் மணியம்மையை திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டிருந்தார் .

பெண்களின் முன்னேற்றம் , சமூக சீர்திருத்தம் உள்ளிட்டவற்றை முதன்மையாக கொண்டிருந்த திராவிட கழகத்திற்கும் அதன் முன்னோடியான பெரியாரே இவ்வாறு செய்வதென்பது நல்லதல்ல என்பதாலும் கட்சிக்குள் எதிர்ப்பு உண்டானது .

இருந்தாலும் திருமணம் நடந்தேறிவிட்டது .

கண்டன கணைகள் கண்ணீர் துளிகளானது :

10 ஜூலை 1947 ஆம் ஆண்டு திராவிட நாடு இதழில் பெரியாரின்

திருமணத்தை கண்டித்தவர்களின் கடிதங்கள் இடம்பெற்றன .மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் தொண்டர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டன . அதற்க்கான தலைப்பு “கண்டன கணைகள் ”

தலைப்பை பார்த்த அண்ணா முகம் சுளித்தார் . நாம் பெரியாரை கண்டிக்கும் அளவுக்கா வளர்ந்துவிட்டோம் .

இனி வரும் வாரங்களில் “கண்ணீர் துளிகள் ” என்கிற தலைப்பில் வெளியிடுங்கள் என்றார் .அதன்படியே தொடர்ந்தது .

தொண்டன் எப்படி இருக்க வேண்டும் :

  • தொண்டன் என்பவன் முகத்திற்க்காக அல்லாமல் கொள்கைகளுக்காக தனது தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் .
  • ஒருவேளை அந்த தலைமையே கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக பேசுவதை தவிர்த்து எதிர்த்து துணிவாக தனது கருத்தை சொல்லும் துணிவுடன் இருக்க வேண்டும் .
  • தலைமையோ வேறு எவரோ தவறு செய்திருப்பின் கொள்கைகளால் மட்டுமே எதிர்த்து நிற்க வேண்டும் . அதனை விடுத்து அவர்களின் கடந்த கால பங்களிப்பை மறந்து தூற்றுதல் நல்ல தொண்டனுக்கு அழகல்ல …
  • இவை அனைத்தையும் ஒவ்வொரு தருணத்திலும் அண்ணா செய்து கொண்டே வந்துள்ளார் .

திராவிட கழகத்தை கைப்பற்றி அடுத்த தலைவராக அண்ணாவை நியமிக்க பலர் நினைத்த போதும் தலைமை இடம் கிடைத்துவிடும் என்கிற அவாவில் செயல்படாமல் ஒரு சிறந்த தொண்டனாக செயல்பட்ட அண்ணாவை போல ஒவ்வொரு தொண்டனும் செயல்படுதல் வேண்டும் .

நீங்களும் சிறந்த தொண்டனாக இருங்கள் .

அரசியல் பழகு தோழா !

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *