தாய்மை முடிவல்ல – செல்லி ஆன் | Shelly-Ann Fraser-Pryce | win historic golds at world champs

“நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே” – தாய்மை தடையல்ல

தன்னிகரற்ற அம்மா - செல்லி ஆன்

2009, 2013 மற்றும் 2015 என மூன்று முறை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றிருந்த செல்லி ஆன் ஒரு காலைப்பொழுதில் பயிற்சிக்கு செல்லாமல் படுக்கை மீது கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆழ்ந்த சிந்தனையில் கவலையோடு இருக்கிறார். அதற்க்கு காரணம் தான் கர்ப்பமாக இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்திருந்தது. அதிவேகமாக ஓடுகின்ற போட்டியில் பங்கெடுக்கும் பெண் வந்துவிடக்கூடாது என தவிர்க்கிற ஒரு விசயம் குழந்தை பெற்றெடுப்பது தான். ஆனால் அது நடந்துவிட்டது. வேறென்ன செய்ய முடியும்? குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார் செல்லி.

2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடப்பதை அவரால் தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த போட்டி நடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு அடுத்தநாள் தான் தனது மகனை பெற்றெடுக்கிறார் செல்லி. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கேற்று பதக்கம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இப்போது இன்னொரு பதக்கத்தை பெற்றிருக்கிறேன், எனது மகனை என நினைத்துத் தேறினார்.

மீண்டும் களத்திற்கு வந்த அம்மா

முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் செல்லி ஆன்

செல்லி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி பரவியவுடன் இனி அவர் ஓடுவதை நிறுத்திவிடுவார் என்பது போன்ற பல கருத்துக்கள் கிளம்பின. பல சவால்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அனைத்து சவால்களை நான் கடந்து வருவதற்கு எனது கணவர், மகன், சக போட்டியாளர்கள், பயிச்சியாளர்கள் என அனைவரும் ஒத்துழைத்ததாக நன்றி கூறுகிறார்.

 

தனது மகனுக்கு 2 வயது ஆகும் தருவாயில் மீண்டும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 10.71 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதல் ஆளாக வந்தார் செல்லி. இது நிச்சயமாக சாத்தியமற்ற ஒன்று என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். தான் முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்கவே இல்லை என தனக்கிருந்த மன அழுத்தத்தை நினைவுகூரும் போது செல்லி கூறுகிறார்.

உலகிலேயே அதிக வயதை எட்டிய (32 வயதுப்பெண்) மற்றும் அம்மா ஒருவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது இதுவே முதல் முறை.

அம்மா என்பது தடையல்ல

தன்னிகரற்ற அம்மா - செல்லி ஆன்

பெரும்பாலான பெண்கள் தாய்மை அடைந்துவிட்டால் அனைத்தும் முடிந்துபோய்விட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என உணர்த்தி இருக்கிறார் செல்லி ஆன். குழந்தை பிறந்த முதல் 10 வாரங்களுக்கு அதிக எடை தூக்க கூடாது. 30 வயது ஒரு குழந்தை என ஏக மன அழுத்தம் இருந்தது. இந்த நிலைமையில் இருக்கும் பெண் ஓடவே கூடாது. ஆனால் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த உயரத்தில் நிற்கிறேன் என்றால் அதற்க்கு நான் செய்த கடுமையான பயிற்சிகள் தான் காரணம்.

 

செல்லி ஆன் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் “நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே” 

 

குறிப்பாக இந்தியாவில் பல திறமையுடைய பெண்கள் திருமணம், மகப்பேறு என்றானபிறகு தங்களது கனவுகளை முடக்கிப்போட்டு விடுகிறார்கள். பிள்ளை வளர்ப்பு ஒன்றே தனது பணி என அவர்களாகவே தங்களை ஒதுக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. தனது கனவை நோக்கி பயணித்துக்கொண்டே குடும்ப வாழ்வையும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதற்கு செல்லி ஆன் மிகச்சிறந்த உதாரணம் .

தாய்மார்களே கனவுகளை நோக்கி புறப்படுங்கள்!

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *