Why Amazon Flipkart give huge discounts? How they get Profit? | TAMIL 

அமேசானின் Prime Day Deals தற்போது நடந்துவருகின்றது . இதனைப்போலவே பிளிப்கார்ட் Big Shopping Day என ஒன்றினை அறிவித்துள்ளது . இப்படிப்பட்ட நாட்களில் Mobile Phones, Home Appliances,  பல பொருள்களை மிக குறைந்த விலைக்கு விற்றுவருகிறார்கள் . பிறகு தங்களது நிறுவனத்திற்கு இவ்வளவு லாபம் எனவும் அறிவிக்கிறார்கள்.

 

  • கேள்வி இப்படி குறைந்த விலைக்கு பொருள்களை விற்பதற்கு காரணம் என்ன ? 
  • அதிகமாக ஆபர்களை கொடுத்தாலும் இந்த நிறுவனங்கள் லாபம் பெறுவது எப்படி ?
  •  

இந்த கேள்விக்கான பதில்களைத்தான் நாம் பார்க்க இருக்கின்றோம் .

 

What is E – Commerce?

 

Sale/Buy Products via Internet E-COMMERCE
Sale/Buy Products via Internet E-COMMERCE

முன்பெல்லாம் ஒரு பொருளை வீட்டிற்கு வாங்கவேண்டும் என நினைத்தால் வார இறுதி நாட்களிலோ அல்லது விசேஷ நாட்களிலோ கடைகளுக்கு சென்று பார்த்து பார்த்து வாங்குவார்கள் .

 

வாங்கும் முடிவை வேகமாக எடுக்கிறோம்

 

ஆனால் தற்போது மக்களின் மனநிலை மாறிவிட்டது . வேகமாக இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய சூழலில் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்குவதில் நேரத்தை கழிக்க யாரும் விரும்பவில்லை . மொபைலில் என்ன பொருள் வேண்டுமோ தேடுகிறார்கள் , அதன் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்க்கிறார்கள் . விலை கட்டுப்படியானால் பொருள் பிடித்து இருந்தால் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக்கொள்கிறார்கள் . பொருள் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வீட்டிற்கே வந்துவிடுகிறது .

 

Amazon Flipkart எப்படி இயங்குகிறார்கள்?

 

 

 தற்போதுதான் அமேசான் (Amazon) சில மின்னணு பொருள்களை உற்பத்தி செய்கின்றது ,ஆரம்பகட்டத்தில் அவ்வாறெல்லாம் இல்லை .

 

Amazon, Flipkart போன்ற e commerce நிறுவனங்கள் எந்த பொருள்களையும் உற்பத்தி செய்வது கிடையாது , சரியாக சொல்லவேண்டும் என்றால் விற்பனையாளர் கூட கிடையாது . அவை விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கு இடையிலே இருக்கக்கூடியவை .

 

இப்படித்தான் அவை இயங்குகின்றன,

 

  • பொருள்களை விற்பனை செய்பவர் (Store Owner or Whole Sale Shop) தன் நிறுவனத்தில் விற்கக்கூடிய பொருள்களை அமேசானில் இவ்வளவு விலைக்கு விற்க விரும்புகின்றேன் என ப்ரோபோசல் கொடுப்பார்

 

  • அல்லது அமேசான் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு கடைக்காரரிடமும் பொருள்களின் விலை நிர்ணயம் பற்றி பேசுவார்கள்

 

  • வாடிக்கையாளர் அமேசான் போன்ற இணையதளத்திற்குள் சென்று பொருள்களை வாங்கும்போது , பல விற்பனையாளர்களின் விலை அங்கு காட்டப்படும் .
  •  

  • வாடிக்கையாளர் பொருளினை ஆர்டர் செய்வார் .
  •  

  • அந்த குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்தோ அல்லது ஏற்கனவே அவர்களிடமிருந்து வாங்கி வைக்கப்பட்டு இருக்கும் அமேசான் ஸ்டோர்களிலிருந்தோ வாடிக்கையாளருக்கு பொருள் அனுப்பப்படும் .
  •  

  • அமேசான் கடைக்காரருக்கு பொருளுக்கான விலையை கொடுக்கும் .

 

  • அமேசான் மூலமாக பொருள் விற்கப்படும்போது கடைக்காரர் அமேசானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை கமிஷனாக வழங்குவார்
  •  

அமேசான் பிளிப்கார்ட் போன்றவை கண்டபடி ஆபர்களை வழங்குவது எப்படி ?

flipkart_big_shopping_days_sale
flipkart_big_shopping_days_sale

 

கடுமையான போட்டி அதிகபடியான தள்ளுபடி

 

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டில் மக்களின் வாங்கும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . அப்படிப்பட்ட சூழலில் யார் முன்னணியில் இருப்பது  என்ற நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிதான் கண்டபடி ஆபர்களை வழங்கிட மிக முக்கிய காரணம் .

 

ஆபர் பணம் (Offer Money) எங்கிருந்து வருகின்றது ?

 

பல சமயங்களில் வழங்கப்படும் ஆபர் அனைத்துமே கடைக்காரரின் ஆபராகத்தான் இருக்கும் . ஒரு பொருள் தன்னுடைய கடையில் சரியாக விற்பனை ஆகவில்லை என கருதினாலோ அல்லது விற்பனையை அதிகரிக்க நினைத்தாலோ “நான் குறைந்த விலைக்கு இந்த பொருளை விற்க தயார் ” என்பார் . அந்த சமயத்தில் நிறுவனங்களுக்கு நஷ்டம் இல்லை .

 

Amazon prime day
Amazon prime day

 

சில பொருள்களுக்கு அமேசான் நிறுவனமே அதிகமாக ஆபர்களை வழங்கும் . அப்போது கடைக்காரர் தரக்கூடிய ஆபர் போக மீதப்பணத்தை அமேசான் தன்னுடைய சொந்தப்பணத்தில் இருந்தே கொடுக்கும் .வங்கிகள் வழங்கக்கூடிய ஆபர்களிலும் இதே போன்றுதான் நடக்கிறது .

 

வாடிக்கையாளரே பிரதானம்

 

உதாரணத்திற்கு HDFC வங்கி பிளிப்கார்ட் அமேசான் இரண்டிற்குமே 5 % ஆபர் தருகின்றோம் (அவர்கள் வங்கியை பிரபலப்படுத்த ) என கூறுகிறார்கள்  என வைத்துக்கொண்டால்,  அமேசான் 10 % ஆபர் தரும் . இது பிளிப்கார்டை முந்துவதற்க்காக , மீதமுள்ள 5 % தொகை வாடிக்கையாளரின் சார்பாக அமேசான் வங்கிக்கு செலுத்தும்.

 

எதற்காக சொந்தப்பணத்தை இழக்கிறார்கள் ?

 

வியாபாரத்தில் ஒன்றில் விட்டு இன்னொன்றில் பிடிப்பதாக சொல்வார்களே

 

அந்த முறையைத்தான் அனைத்து நிறுவனங்களும் கையாளுகின்றன . நன்றாக கவனித்து பார்த்தீர்களானால் அதனை நன்றாக உணர முடியும் . ஒட்டுமொத்தமாக விற்கக்கூடிய பொருள்களில் 20 % பொருள்கள் அதிகப்படியான ஆபர்களுடனும் 80 % முதல் 90 % பொருள்கள் நடுத்தரமான ஆபர்களுடனுமே இருக்கும் .இந்த நிறுவனங்களில் ஆபர் நிர்ணயம் செய்வதற்கென்றே பல குழுக்கள் செயல்படும் . அவர்களின் செயல்பாடு எதனை நோக்கியதாக இருக்குமென்றால் நிறுவனத்தின் லாபத்திற்கு ஆபத்து ஏற்படாமலும் ஒட்டுமொத்த ஆபர் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக செல்லாமலும் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும் .

 

வாங்கும் நபர்கள் ஆபர் அதிகமான பொருள்களை மட்டும் வாங்கிவிட்டு  பிற பொருள்களை வாங்காமல் போனால் ? நிச்சயமாக வாய்ப்பு இருக்கின்றது .  நிறுவனங்களுக்கு அது தெரியும் . ஆனால் தொழிலில் ரிஸ்க் இருக்கத்தானே செய்யும் .

 

புதிய வாடிக்கையாளரை பெறுவதும்
பழைய வாடிக்கையாளரை திருப்தியாக வைத்திருப்பதே நிறுவனங்களின் வெற்றி

 

அமேசான் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கப்படும் ஆபர்களுக்காகவே பல நூறு கோடிகளை செலவளிக்கின்றன .

 
இப்படி அதிகப்படியாக ஆபர்களை கொடுப்பதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறதா என்றால் ? நிச்சயமாக இல்லை . அவற்றின் லாபத்தில் சிறு தொகையினை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செலவிடுகின்றன அவ்வளவுதான்  

Pamaran Karuthu

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *