- கேள்வி இப்படி குறைந்த விலைக்கு பொருள்களை விற்பதற்கு காரணம் என்ன ?
- அதிகமாக ஆபர்களை கொடுத்தாலும் இந்த நிறுவனங்கள் லாபம் பெறுவது எப்படி ?
What is E – Commerce?
முன்பெல்லாம் ஒரு பொருளை வீட்டிற்கு வாங்கவேண்டும் என நினைத்தால் வார இறுதி நாட்களிலோ அல்லது விசேஷ நாட்களிலோ கடைகளுக்கு சென்று பார்த்து பார்த்து வாங்குவார்கள் .
வாங்கும் முடிவை வேகமாக எடுக்கிறோம்
Amazon Flipkart எப்படி இயங்குகிறார்கள்?
தற்போதுதான் அமேசான் (Amazon) சில மின்னணு பொருள்களை உற்பத்தி செய்கின்றது ,ஆரம்பகட்டத்தில் அவ்வாறெல்லாம் இல்லை .
- பொருள்களை விற்பனை செய்பவர் (Store Owner or Whole Sale Shop) தன் நிறுவனத்தில் விற்கக்கூடிய பொருள்களை அமேசானில் இவ்வளவு விலைக்கு விற்க விரும்புகின்றேன் என ப்ரோபோசல் கொடுப்பார்
- அல்லது அமேசான் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு கடைக்காரரிடமும் பொருள்களின் விலை நிர்ணயம் பற்றி பேசுவார்கள்
- வாடிக்கையாளர் அமேசான் போன்ற இணையதளத்திற்குள் சென்று பொருள்களை வாங்கும்போது , பல விற்பனையாளர்களின் விலை அங்கு காட்டப்படும் .
- வாடிக்கையாளர் பொருளினை ஆர்டர் செய்வார் .
- அந்த குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்தோ அல்லது ஏற்கனவே அவர்களிடமிருந்து வாங்கி வைக்கப்பட்டு இருக்கும் அமேசான் ஸ்டோர்களிலிருந்தோ வாடிக்கையாளருக்கு பொருள் அனுப்பப்படும் .
- அமேசான் கடைக்காரருக்கு பொருளுக்கான விலையை கொடுக்கும் .
- அமேசான் மூலமாக பொருள் விற்கப்படும்போது கடைக்காரர் அமேசானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை கமிஷனாக வழங்குவார்
அமேசான் பிளிப்கார்ட் போன்றவை கண்டபடி ஆபர்களை வழங்குவது எப்படி ?
கடுமையான போட்டி அதிகபடியான தள்ளுபடி
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டில் மக்களின் வாங்கும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . அப்படிப்பட்ட சூழலில் யார் முன்னணியில் இருப்பது என்ற நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிதான் கண்டபடி ஆபர்களை வழங்கிட மிக முக்கிய காரணம் .
ஆபர் பணம் (Offer Money) எங்கிருந்து வருகின்றது ?
பல சமயங்களில் வழங்கப்படும் ஆபர் அனைத்துமே கடைக்காரரின் ஆபராகத்தான் இருக்கும் . ஒரு பொருள் தன்னுடைய கடையில் சரியாக விற்பனை ஆகவில்லை என கருதினாலோ அல்லது விற்பனையை அதிகரிக்க நினைத்தாலோ “நான் குறைந்த விலைக்கு இந்த பொருளை விற்க தயார் ” என்பார் . அந்த சமயத்தில் நிறுவனங்களுக்கு நஷ்டம் இல்லை .
சில பொருள்களுக்கு அமேசான் நிறுவனமே அதிகமாக ஆபர்களை வழங்கும் . அப்போது கடைக்காரர் தரக்கூடிய ஆபர் போக மீதப்பணத்தை அமேசான் தன்னுடைய சொந்தப்பணத்தில் இருந்தே கொடுக்கும் .வங்கிகள் வழங்கக்கூடிய ஆபர்களிலும் இதே போன்றுதான் நடக்கிறது .
வாடிக்கையாளரே பிரதானம்
எதற்காக சொந்தப்பணத்தை இழக்கிறார்கள் ?
வியாபாரத்தில் ஒன்றில் விட்டு இன்னொன்றில் பிடிப்பதாக சொல்வார்களே
அந்த முறையைத்தான் அனைத்து நிறுவனங்களும் கையாளுகின்றன . நன்றாக கவனித்து பார்த்தீர்களானால் அதனை நன்றாக உணர முடியும் . ஒட்டுமொத்தமாக விற்கக்கூடிய பொருள்களில் 20 % பொருள்கள் அதிகப்படியான ஆபர்களுடனும் 80 % முதல் 90 % பொருள்கள் நடுத்தரமான ஆபர்களுடனுமே இருக்கும் .இந்த நிறுவனங்களில் ஆபர் நிர்ணயம் செய்வதற்கென்றே பல குழுக்கள் செயல்படும் . அவர்களின் செயல்பாடு எதனை நோக்கியதாக இருக்குமென்றால் நிறுவனத்தின் லாபத்திற்கு ஆபத்து ஏற்படாமலும் ஒட்டுமொத்த ஆபர் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக செல்லாமலும் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும் .
புதிய வாடிக்கையாளரை பெறுவதும்
பழைய வாடிக்கையாளரை திருப்தியாக வைத்திருப்பதே நிறுவனங்களின் வெற்றி
இப்படி அதிகப்படியாக ஆபர்களை கொடுப்பதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறதா என்றால் ? நிச்சயமாக இல்லை . அவற்றின் லாபத்தில் சிறு தொகையினை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செலவிடுகின்றன அவ்வளவுதான்