நம்ம ஊரு “ஊற்று” – அமெரிக்காவின் Home made water purifier கண்டுபிடிப்பானது எப்படி ?

தற்போது நடந்து முடிந்த ISEF அறிவியல் அரங்கில் இறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜீன்கார்லஸ் மேலன்டாஸ் எளிமையான முறையில் தண்ணீர் சுத்திகரிப்பதற்கான செயல்திட்டத்தை முன்வைத்தார் . அவர் வைத்திருக்கும் இந்த திட்டம் நமது கிராமங்களில் இருக்கும் குளங்களில் பயன்படுத்துகின்ற “ஊற்று” போன்றே இருக்கின்றது .

People running for drinking water after Maria hurricane, America

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பாக மரியா புயலின் கொடூர தாக்குதலில் அமெரிக்காவின் பல மாகாணங்கள் சின்னாபின்னமாயின . பல நாட்களுக்கு மக்கள் மின்சாரம் இன்றியும் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இன்றியும் அலைந்தனர் . இத்தனைக்கும் புயலினால் அருகாமையில் தண்ணீர் கிடந்தும் அவை குடிக்க முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது .

இதனை கருத்திலே கொண்ட ஜீன்கார்லஸ் மேலன்டாஸ் , இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களை கொண்டு மின்சாரம் இன்றி தண்ணீர் சுத்திகரிப்பானை எவ்வாறு அமைப்பது என ஆராய்ந்தார் . இதற்கு ஒரு முடிவையும் கண்டுபிடித்தார் .

Jeancarlos Meléndez who made home made water purifier

அவரது கண்டுபிடிப்பில் மூன்று வாளிகள் தேவைப்படுகிறது . முதல் வாளியின் அடிப்புறம் அடுத்த வாளியின் மேற்புறத்தோடு இணைக்கப்பட்டு இருக்கும் . இரண்டாவது வாளியின் அடிப்புறம் அடுத்த வாளியின் மேற்புறத்தோடு இணைக்கப்பட்டு இருக்கும் .

HOME MADE WATER PURIFIER :

முதல் வாளியில் சரளை , மணல் மற்றும் கரித்தூள் பாதி அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளது . மணல் மற்றும் சரளை இயல்பாகவே தண்ணீரில் இருக்ககூடிய பெரிய துகள்களை பிடித்துக்கொள்ளும் . அடுத்ததாக இருக்கக்கூடிய கரித்துகளோ நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்களை அகற்றிவிடும் .

Gravel , sand , and crushed charcoal

இரண்டாவது வாளி காலியாக இருக்கின்றது . முதல் வாளியில் இருந்து வெளியேறக்கூடிய பெரிய துகள்கள் இல்லாமல் வெளிவந்த நீரில் சிறு சிறு துகள்கள் இருக்குமல்லவா . அவை அனைத்தும் இந்த இரண்டாவது வாளியில் அடிப்புறத்தில் தங்கிவிடும் .

மூன்றாவது வாளியில் குளோரின் தண்ணீருடன் சேர்க்கப்படுகிறது . இந்த
குளோரின் தண்ணீரில் இருக்கக்கூடிய கிருமிகளை அழித்து தண்ணீரை மேலும் சுத்தப்படுகிறது .

இவரது கண்டுபிடிப்பு ISEF அறிவியல் அரங்கில் இறுதிப்போட்டியில் பங்கேற்றது . நிச்சயமாக இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மக்கள் பாதிக்கப்படும்போது உதவிகரமாக இருக்கும் .

இவரது கண்டுபிடிப்பு நமது கிராமங்களில் இன்றளவும் இருக்கின்ற ஊற்று முறையை போன்றே இருக்கின்றது . ஆமாம் , குளங்களில் தேங்கி இருக்கும் நீரினை அப்படியே பயன்படுத்திடாமல் அருகிலே ஒரு பள்ளம் தோண்டி அதில் கசிந்துவரும் தண்ணீரை கிராமத்து மக்கள் பயன்படுத்துவார்கள் .

அதே முறைமை தான் அமெரிக்காவில் கண்டுபிடிப்பாக மாறியிருக்கின்றது . நமது மாணவர்களும் நமது பிளாக்கவழக்கங்களில் இருக்கக்கூடிய அறிவியல் உண்மையை உணர்ந்து கண்டுபிடிப்பாக்கினால் வெற்றியாளராக வலம் வரலாம் .

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *