10 security advise for women who hiring Auto Cab | Cab எடுக்குறீங்களா, 10 விசயத்தை படிங்க

பாதுகாப்பாக இருப்பது பலவீனமல்ல , நல்லது
தற்போது நடைபெறக்கூடிய விசயங்களை பார்க்கும் போது பெண்களுக்கு எது தான் 100 சதவிகித பாதுகாப்பு கொண்ட இடம் என பார்த்தால் எதையுமே சொல்ல முடிவதில்லை . அப்படி எங்கும் பரந்து கிடக்கின்றது பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் , குற்றங்கள் .

இதற்கு ஒருபக்கம் ஆண்களை குறைகூறினாலும் மறுபக்கம் பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா?  அந்தவகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு .

பெண்கள் ஆட்டோ , கேப் போன்றவற்றை எடுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும்

    ஏப்ரல் மாதம் ஒரு பெண் உத்திரபிரதேசம் , அமேதி பகுதியில் சாலையோரமாக மயக்கமுற்று கிடக்கிறார் , அவருக்கு அருகில் ஒரு தவழும் குழந்தையும் இருக்கின்றது . அவரை பொதுமக்கள் மீட்டு விசாரிக்கும்பொது , அவர் கேப் (Share) எடுத்ததாகவும் வரும் வழியில் ஓட்டுநர் மற்றும் உடன்வந்தவர்கள் மூன்றுபேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகவும் கூறுகிறார் . மருத்துவமனைக்கு செல்லவிருந்த இப்பெண்ணுக்கு நடந்த இக்கொடுமையை செய்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள் .

    மே 2018  ஹரியானாவில் 23 வயதுடைய பெண் , 6 மாத கர்ப்பிணியான அவர் கணவருடன் மருத்துவமனைக்கு செல்கின்றார் . திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிளில் அமருவது கடினமாக இருக்கும் என்பதனால் ஒரு ஆட்டோவில் மனைவியை ஏற்றிவிடுகிறார் .
கர்ப்பிணியான அவருக்கு ஆட்டோ ஓட்டுநர் தண்ணீர் கொடுக்கின்றார் . அதனை குடித்தபின் மயங்கிய அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த படுகிறார் . இந்த குற்றத்தை செய்தவர்களையும் போலீசார் விசாரிக்கிறார்கள் .

இந்த இரண்டு நிகழ்வுகள் சில துளிகள்தான் . நாளும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன . இந்த சூழ்நிலையில் குற்றவாளிகளை தண்டிப்பதால் மட்டுமே பெண்களை காப்பாற்றிவிட முடியாது .

பாலியல் கொடுமைகளில் இருந்து விடுபட அதுகுறித்த விழிப்புணர்வு மிக அவசியம் .
தற்போது பல கால் டாக்ஸி நிறுவனங்கள் வந்துவிட்டன . அவை போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுனர்களை போதிய விசாரனை இன்றி பணிக்கு அமர்த்துகின்றன .

உண்மையில் அந்த நிறுவனத்திடம் உரிமம் பெற்றவர்தான் வாகனத்தை ஓட்டுகிறாரா அல்லது அவரது கருவியை வைத்துக்கொண்டு வேறு நபர் ஓட்டுகிறாரா என்பதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு கடினமான விசயங்கள் .

ஆகவே இவற்றை பெண்கள் பயன்படுத்தும்போது சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமாக பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் .

10 Security advise for women who hiring Call Taxi or an Auto :

  • தனியாக கேப் எடுப்பதை தவிர்ப்பது நல்லது .

 

  • இரவு நேரங்களில் உடன் பணியாற்றும் நண்பர்களுடன் செல்லுவது நல்லது .

 

  • உங்களது  ஆப்பில் வருகின்ற வண்டி எண்ணும் உங்களை அழைக்க வருகிற வாகன எண்ணும் ஒன்றாக இல்லையெனில் என்ன காரணம் சொன்னாலும் ஏற வேண்டாம் .
  • முடிந்தவரை தனியாக செல்லும் பெண்களே ஷேர் கேப் எடுப்பதை தவிர்ப்பது நல்லது .
  • பெற்றோரிடம் கூறி நம்பிக்கையான நிரந்தர ஆட்டோவினை புக் செய்துவைத்துக்கொள்ளலாம் .
  • சில ஓட்டுனர்கள் எனது நண்பர் ஒருவர் இங்கு காத்திருக்கிறார் அவரையும் அழைத்து செல்லலாமா என பணிவுடன் கேட்பார் . நீங்களும் அவருடைய பணிவினை நம்பி ஒப்புக்கொள்ள வேண்டாம்.
  • இப்போது பல பாதுகாப்பு ஆப்கள் இலவசமாகவே இருக்கின்றன . உங்களுக்கு ஓட்டுனரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் பிறருக்கு நீங்கள் ஆபத்தில் இருப்பதை தெரியப்படுத்துங்கள் .
  • ஓட்டுனரை தாக்குவது , கதவை திறந்து குதிப்பது போன்ற ஆபத்தை விளைவிக்கும் முயற்சிகளை முதலிலேயே மேற்கொள்ளாதீர்கள் . சமயோஜிதமாக செயல்பட்டு எப்படி மீளலாம் என யோசித்து செயல்படுங்கள் .
  • உதாரணத்திற்கு உங்களது ஓட்டுநர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிந்தால் , உங்களின் மீது அவர் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதனை ஜாடைமாடையாக சொல்லுங்கள் . அந்த நேரத்தில் சில பொய்களை கூட சொல்லலாம் , உங்களது அப்பா மிக பெரிய போலீஸ்காரர் , அப்படி இப்படி என பேசலாம் .
  • நீங்கள் ஆபத்தில் இருந்தால் ஆட்கள் இருக்கும் பகுதியில் வாகனம் கடக்கும்போது நீங்கள் இறங்க முயற்சிக்கலாம் . குறிப்பாக சிக்னலில் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் .

இவை சில பாதுகாப்பு வழிமுறைகளே , இதனைத்தவிர உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் கமெண்ட் இல் பதிவிடவும் .

PAMARAN KARUTHU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *