அதிமுகவிற்கு வந்த சோதனையா ? யாரால் முடியும் அதிமுகவை வழிநடத்திட ?
அதிமுகவிற்கு வந்த சோதனையா?
திமுகவில் இருந்து எம்ஜியார் அவர்கள் பிரிந்து வந்தபோதும் சரி , எம்ஜிஆர் அவர்கள் மறைந்தபோது அக்கட்சியினை வழிநடத்த கடும் போரட்டங்களை சந்தித்து கைப்பற்றி வெற்றியாக நடத்திய ஜெயலலிதாவும் சரி இருவருக்குமே நடிகர் நடிகை என்கிற வழியில் நல்ல அறிமுகமும் முகத்திற்காக ஓட்டுபோடும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கும் இருந்தது .
அண்ணாவின் கொள்கைகளை அப்படியே கடைபிடிப்பதாக கூறிக்கொண்டாலும் பெரிய கொள்கை பேச்சுகளும் போராட்டங்களும் அதிமுகவில் இல்லை ..அப்படி எதுவும் இல்லையென்றாலும் அந்த கட்சியால் ஆட்சியை பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர் ஜெயலலிதா என்கிற முகம் மட்டுமே …
இனி எந்த முகம் :
சசிகலா :
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தோழி , கூட 30 ஆண்டுகள் பயணித்தவர் என்கிற உரிமையில் கட்சியை கைப்பற்றினாலும் அதிமுகவின் அடிப்படையான முக அரசியலுக்கு தகுந்தவராக அவர் இருக்கிறாரா ? என்பதே அடிப்படை கேள்வி …
யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிற நிலையில் தான் அனைத்து உறுப்பினர்களும் சசிகலாவிற்கு மக்கள் விருப்பத்தையும் மீறி ஆதரவு அளித்தனர் …ஆக அடுத்த தேர்தலில் அது வெற்றியை பெற்றுத்தராது
கூடவே இப்போது 4 ஆண்டுகள் தண்டணை மூலமாக 10 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட முடியாது …
பன்னிர்செல்வம் :
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சல்லிக்கட்டு போராட்டம் , கிருஷ்ணா நதிநீர் பெற்றுத்தந்தது என தனது செயல்பாட்டின் மூலமாக நல்ல பெயரே அவருக்கு இருந்தது ..
சசிகலா முதலமைச்சராக அவர்களது கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பொங்கியெழுந்த பன்னிர்செல்வம் அவர்களுக்கு மக்களிடத்தில் பெருத்த ஆதரவு கிளம்பியது .
அது பன்னிர்செல்வத்திற்க்கு ஆதரவு என்பதைவிட சசிகலாவிற்கு எதிரான மனநிலையால் அவருக்கு கிடைத்த ஆதரவு என்றே பார்க்க வேண்டும் ….
சசிகலாவை விட பன்னிர்செல்வம் அவர்களுக்கு மக்களிடத்தில் ஆதரவு அதிகம் .ஆனால் அடுத்த முறை ஆட்சியை கைப்பற்றிடும் அளவுக்கு அதுபோதுமானதாக இருக்குமா என்றால் இருக்காது என்பதே உண்மை ..
தீபா :
ஜெயலலிதாவின் அண்ணண் மகள் ,ஜெயலலிதாவின் உருவ ஒற்றுமை ஆகிய தகுதிகளை மட்டுமே கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் தீபா .
ஆனாலும் பெரும்பாலான கிராமங்களில் தீபாவுக்கு ஆதரவு அலை வீசுகிறது என்பதே உண்மை …ரத்த சொந்தங்களுக்கு உரிமை அளிக்கக்கூடிய தேசமாக இன்னும் தமிழகம் இருகின்றது என்பதற்கு இதுவே சாட்சி …
ஆனாலும் ஜெயலலிதா அளவிற்கு கட்சியையும் ஆட்சியையும் நடத்திடும் திறமை வாய்ந்தவராக இவர் இல்லையென்பதே பெரும்பாலனவர்கள் கருத்து …
யாரால தான் முடியும் :
பன்னிர்செல்வத்திற்கு அரசு சசிகலாவுக்கு கட்சி ..இதை மக்கள் பெரிய அளவில் எதிர்க்கவில்லை .ஆனால் அந்த நிலைமை திரும்ப இப்போது வாய்ப்பில்லை
இப்போது இருக்ககூடிய சூழ்நிலையில் பன்னிர்செல்வ
ம் அதிமுகவிற்கு திரும்பக்கூடிய சூழ்நிலை குறைவாக இருகின்றது ..அப்படி அவர் சென்றால் அவர் மீதான மதிப்பு குறையும் என்பது உறுதி ….
ஒருவேளை தீபாவும் பன்னிர்செல்வமும் இணைந்தால் மக்களிடம் வரவேற்பு பெற வாய்ப்புண்டு …அதே நேரத்தில் தற்போதய அரசுக்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருப்பதினால் நினைவு சக்தி குறைந்த தமிழக மக்களிடத்தில் நிலைத்து நின்று அடுத்த தேர்தலில் பங்கேற்க முடியுமா ? என்பதையும் சிந்திக்க வேண்டும்
முகத்தை உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது ஆனால் அந்த முகம் அதிமுகவிற்கு இனி கிடைக்க வாய்ப்பில்லை …
முக அரசியலில் இருந்து அதிமுக விடுபடுகிறது ….
காலம் தான் பதில் சொல்லவேண்டும் ….