ரஜினிக்கு உள்ள அரசியல் சவால்கள் என்ன ?-  எனது பார்வை

அரசியலுக்கு வருவேன் அரசியலுக்கு வருவேன் என சொல்லி சொல்லி காலத்தை கடத்திவந்த சூப்பர்  ஸ்டார் இந்தமுறை தனது ஆதரவாளர்களை ஏமாற்றாமல் அரசியலுக்கு வருவதை உறுதிசெய்துள்ளார் . அதற்கான செயல்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டார் .
ரஜினி தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக  இருப்பதனால் அவரது அரசியல் வருகைக்கு பலத்த ஆதரவும் பலத்த எதிர்ப்பும் உருவானது  .

யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை வரவேற்பது நம் கடமை . ஆகையால் ரஜினி அவர்களையும் அரசியல் களத்திற்கு வரவேற்கின்றோம் .

சரி …. அரசியலில் நுழைந்துள்ள  ரஜினியின் நிறைகளையும்  சவால்களையும் பற்றி பேசுவோமே .

ரஜினிக்கு உள்ள சவால்கள் :

தமிழனை தமிழனே ஆள வேண்டும் :

ரஜினிக்கு பெரும்பாலான இடங்களில் இருந்து வந்த எதிர்ப்பு “தமிழன் அல்ல ” என்பதே . உண்மைதான் பிறப்பால் ரஜினி அவர்கள் தமிழன் அல்ல .

இதற்கு அவர் அளித்துள்ள பதிலில் “நான் தமிழன்தான் , என்னை வாழவைத்தது தமிழகம் தான் ” என உறுதிபட தெரிவித்துள்ளார் .

வாக்களிக்க போகும் குடிமக்கள் எவ்வாறு நினைக்க போகிறார்கள் என்பதே முக்கியம் .

(இந்த கருத்தாக்கம் தமிழினவாதிகளின் வாக்குகளில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் .)
ஆன்மீக அரசியலும் பாஜக ஆதரவும் : 
ரஜினி மிகபெரிய ஆன்மீகவாதி ,பல சமயங்களில் இமயமலைக்கு செல்லும் பழக்கம் கொண்டவர் . ஆனால் அரசியலில் நுழைந்தவுடன் “ஆன்மீக அரசியல் ” செய்யப்போகிறேன் என்றவுடன் மதவாத அரசியல் செய்யபோகிறாரோ என்கிற குழப்பம் எழுந்தது . அதற்கு அவர் கடமை கண்ணியம் என விளக்கங்களை கொடுத்தாலும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கின்றது .

இதற்கு முக்கிய காரணம் ரஜினிக்கு பாஜக கொடுக்கும் ஆதரவு . கமல் கட்சி ஆரம்பிக்க போகின்றேன் என்றவுடன் எதிர்ப்புகளை காட்டிய பாஜக ரஜினிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் ரஜினியை பாஜகவினர் தான் இயக்குகிறார்கள் என்ற தோற்றம் உருவானது .அதனை இன்றளவும் மறுக்கவில்லை ரஜினி அவர்கள் .

 

சமாளிக்கும் திறம் :

 

அரசியல் என்றாலே எண்ணற்ற முடிவுகளை எண்ணற்ற கேள்விகளுக்கு பதில்களை நொடிப்பொழுதில் கொடுக்கவேண்டி இருக்கும் . அந்த திறமை ரஜினிக்கு இருக்கின்றதா என தெரியவில்லை .

காரணம் இதுவரை அவர் ஆற்றிய உரைகளில் சாதாரண அறிவுரைகளை மட்டுமே கூறுகிறார் . மீடியா கொள்கைகள் என கேட்டபொழுது  பிறகு கூறுகிறேன் என கூறி சமாளிக்காமல்” கொள்கையை  கேட்டால் தலை சுற்றுகிறது” என்கிறார் .

சவால்கள் இல்லாமல் எதுவுமில்லை ஆகையால் ரஜினி துணிந்து தனது சவால்களை முறியடித்து வெற்றிபெறலாம் .

 

ரஜினிக்கு உள்ள நிறைகள் என்ன ?

 

நல்ல மனிதர் ரஜினி :

 

ரஜினி நல்ல மனிதர் . எவரையும் மதிக்கும் மாண்பு அவரிடம் இருக்கின்றது . அவர் கொள்கைகளை கொண்டிருந்தாலும் கொண்டிராவிட்டாலும் அவரால் தீமையை மக்களுக்கு செய்ய முடியாது .

பாஜக அவரை வைத்து வளர்ந்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக ரஜினி அவர்களுக்கு சரிபட்டுவர மாட்டார் .

எவர்  மனதும் கஷ்டப்பட்டுவிட கூடாது என நினைத்துக்கொண்டிருப்பதாலேயே ரஜினி சில தகவல்களை மறுக்காமல் இருக்கிறார் . இதுதான் அவர் பிரச்சனை .
ரஜினி தான் இன்றும் “சூப்பர் ஸ்டார்” :
அரசியல் கட்சிகள் என்னதான் ரஜினி தமிழரல்ல என்று கூப்பாடு போட்டாலும் தமிழகத்தில் ரஜினிக்கு உள்ள மாஸ் குறையவில்லை . இன்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ரஜினிக்கு ஆதரவு என்பதும் அவர் மீதான அன்பு என்பதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன .
அதனை ரஜினி எப்படி வாக்குகளாக மாற்றிட போகிறார் என்பதே அவருக்கு இருக்கின்ற சவால் .
ரஜினி சவால்களை உடைத்தெறிந்து வெற்றிநாயகனாக கோட்டைக்கு செல்வாரா ? காலம்தான் பதில் சொல்லும் .
நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “ரஜினிக்கு உள்ள அரசியல் சவால்கள் என்ன ?-  எனது பார்வை

  • February 24, 2018 at 7:27 am
    Permalink

    திரு. ரஜினி அவர்களின் நடிப்புக்கு நானும் ரசிகன்தான் … அரசியலென்று வந்துவிட்டாலே , ஒவ்வொருவருமே தங்களின் கருத்துகளை முன்வைப்பர், குறைகூறுவார்கள்… அரசியலில் வெளிப்படைத்தன்மை ரொம்ப முக்கியமானது… ஆனால் , ரஜினி அவர்களிடம் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை … அதை சொன்னால் அவர் கோபித்துக்கொள்வார் , இதை சொன்னால் இவர் கோபித்துக்கொள்வார் என்ற மனநிலை இருந்தால் அரசியலில் வெற்றிபெறமுடியாது… ஒரு தலைவன் தான் எடுக்கும் முடிவுகளிலிருந்து பின்வாங்குதல் கூடாது… மேலும் , ரஜினி அவர்களின் அரசியல் மாஸ் தற்பொழுது வெகுவாக குறைந்துள்ளது… நீண்ட வருடங்களுக்கு பிறகு , தான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கூறியதும் பெருமகிழ்ச்சியுற்றனர் அவரின் ரசிகர்கள் … மேலும் அவர் கூறுகையில், அடுத்த சட்டமன்ற தேர்தல்வரையில் அனைவரும் அமைதியாக இருக்கவேண்டும், யாரையும் குறைகூறக்கூடாது என்கிறார்.. அது , எவ்வாறு சாத்தியமாகும்… … சிலர் அவர் படத்தின் புரமோஷனுக்காக அவ்வாறு கூறுகிறார் என்றும் ,
    ஆளும்கட்சியை எதிர்த்தால் படம் வெளிவருவதில் சிக்கல் ஆகும் என்பதால் அவ்வாறு கூறுகின்றார் என்றும் கூறினர்… இது ஓய்வதற்குள்
    அடுத்த தேர்தலுக்கான வேலையை ஆரம்பிப்பார் என்று பார்த்தால், நேற்று அவரின் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்… இது , அவரின் அரசியல் வருகையை நிச்சயமாக பாதிக்கும்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *