கமல் – அரசியல் சாணக்கியனா – என் பார்வை
ஜெயலலிதா அவர்களின் இறப்பு , கருணாநிதி அவர்களின் உடல்நிலை பாதிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களையும் வெற்றிடத்தையும் கொண்டு வந்தது .
குறிப்பாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவில் நிலவிவந்த இழுபறிகள் அரசியல் வெற்றிடத்தையும் , மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த எண்ணங்களையும் கொண்டுவந்தன .
இதனை பயன்படுத்தி ரஜினி , கமல் என்னும் இரு பெரும் நடிகர்கள் தீவிர அரசியலில் நுழைந்தனர் .
கமல் – அரசியல் சாணக்கியன் :
கமல் தனது அரசியல் என்ட்ரியை ட்விட்டரில் இருந்து துவங்கினார் . அவரது குரலுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் இருந்துகொண்டே இருந்தன . மீடியாக்களும் கமலின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது .
கமல் அரசியல் பேசுகின்றார் அவ்வளவுதான் என ரஜினி உட்பட அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ரஜினி அறிவிப்பதற்கு முன்பாகவே அறிவித்தார் . இது ரஜினியே எதிர்பார்க்கவில்லை . இது கமலின் சிறந்த அரசியல் மூவ் ஆக பார்க்கப்பட்டது .
ஆன்மீக அரசியல் பக்கம் ரஜினி சாய்ந்தபோது தமிழக மக்களின் மனதில் சற்று தயக்கமிருந்தது ….பல இடங்களில் இருந்து எதிர்ப்பும் வந்தது .கமலோ தமிழக மக்களின் ஆதரவை ஏற்கனவே பெற்ற “திராவிடம் ” என் கொள்கையில் இருக்கும் என சொல்லி ஆதரவை அதிகரித்து கொண்டார் .
ரஜினியை பாஜக இயக்குகிறது என்னும் குற்றசாட்டு இருக்கும்நிலையில் பாஜக கமலை எதிர்ப்பதால் அதுவும் ஆதரவாக மக்களிடத்தில மாறுகிறது .
பெரும்பாலும் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்பு என்பது பழைய கட்சிகளிடம் இருந்தே வரும் . அதனை கொஞ்சம் தவிர்ப்பதற்காகவே தனது கட்சி குறித்தும் கொள்கைகள் குறித்தும் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசியல்கட்சிகளின் தலைமைகளை சந்தித்துள்ளார் (அதிமுக தவிர ) இதுவும் கமலின் சாணக்கியத்தனம் என்றே கூறலாம் .
நல்ல அரசியல் அறிவு , பேசும் திறமை , எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கமலிடம் இருப்பது கூடுதல் பலம் .
கமலை குறித்து எழுதிவிட்டபடியால் கமலை ஆதரிக்கிறோம் என்பதல்ல …இது கமல் என்னும் புது அரசியல்வாதி குறித்த எமது எண்ணத்தை சொல்வது மட்டுமே . நீங்கள் ஒரு புது அரசியல்வாதியாக வந்தால் இவற்றில் சிலவற்றை பின்பற்றலாம் .
விஜயகாந்த் கமல் ரஜினி அல்ல எவரும் அரசியலுக்கு வர உரிமை உண்டு . ஆனால் நடிகன் என்ற ஒற்றை தகுதியை கொண்டு ஆட்சிக்கு எவராலும் வர இயலாது .
மக்களும் நல்ல நடிகன் என்றால் படம் பாருங்கள் , நல்ல கொள்கையுடையவன் என்றால் வாக்கு செலுத்துங்கள் .
அடுத்த பதிவில் ரஜினி குறித்தும் அவருக்கு உள்ள சவால்கள் குறித்தும் எழுதுகிறேன் .
தொடர்ந்து படியுங்கள் .
நன்றி
Kamal arasiyalku varathu nalla visayam but avar varuvathal IPA yentha maittram varum ennaku Thereyala……vaipu 20% than en karuthu
கமல் அவர்களின் அரசியல் பயணம் நன்றாக இருப்பினும் அவர் ஏன் அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது கட்சிப்பணியை ஆரம்பிக்கிறார் என்று தெரியவில்லை… திரு. அப்துல் கலாம் மறைந்த பொழுது கமலோ, ரஜினியோ யாரும் அவரின் இறுதி சடங்கிற்க்கு வரவில்லை ஆனால் , இப்பொழுது கலாமின் நினைவிடத்திலிருந்து தனது கட்சிப்பணியை ஆரம்பிக்கிறார். நிச்சயமாக, இது கமல் அவர்கள் கலாம்மீது கொண்ட பற்றுகிடையாது. மாறாக, இளைஞர்களைக் கவர அவர் எடுத்துக்கொண்ட ஒரு ஆயுதம் மட்டுமே.