ரஜினி அரசியலுக்கு வருகிறார் . ஆனால் ?
ரஜினியும் அரசியலும் :
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் தான் . அனைத்துவித நடிகர்களின் ரசிகர்களையும் கட்டிப்போடும் திறமை இவருக்கு உண்டு .
திரையுலகில் சாதித்த ரஜினி அவர்களுக்கு அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இன்றல்ல மூப்பனார் காலத்திலேயே வந்துவிட்டது . பல சமயங்களில் அவர் வெளிப்படையான ஆதரவையும் கட்சிகளுக்கு அளித்து வந்திருக்கிறார் .
ஆகவே கமல் சொல்வதைப்போல ரஜினி அவர்களும் அன்றே அரசியலுக்கு வந்துவிட்டார் . ஆனால் தேர்தல் களத்திற்குள் நுழைந்து போட்டியிட அவர் வந்ததில்லை .
ஆனால் பல முறை தான் அரசியலுக்கு வருவேன் என்பார் பிறகு படப்பிடிப்பு வேலைகளுக்கு சென்றுவிடுவார் .இவரின் இந்த தயக்க நிலைப்பாடு இவர் மீது விமர்சனங்களையும் கேலிகளையும் அள்ளித்தெளித்தன .
இறுதியாக இந்த டிசம்பர் 31 இல் தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் .
ரஜினியை தடுப்பது எது ?
ரஜினியை தடுப்பது அவரது மனமே . அரசியல் குறித்து தான் முழுமையாக அறிந்ததால் தான் வர தயங்குகிறேன் என்று கூறுகிறார் ரஜினி .
இது முற்றிலுமான உண்மை . இக்கால அரசியல்வாதிகளையும் மக்களையும் பற்றி நன்றாக அறிந்துவைத்திருக்கிறார் ரஜினி . வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கும் சிலருக்காக வந்துவிட்டால் போதாது அரசியல்வாதிகளையும் மக்களையும் சமாளிக்கும் திறம் இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது தெரியும் அவருக்கு .
சிவாஜிகணேசன் அரசியல் தோல்வி , அமிதாப் பச்சன் போன்றோரின் அரசியல் வேண்டாம் என்கிற அறிவுரை , நிகழ்கால அரசியல் , பணத்திற்கு விலைபோகும் மக்களின் செயல்பாடு என அனைத்துமே ரஜினியை யோசிக்க வைக்கின்றன .
ஆனாலும் வர போகின்றார் ?
இத்தனை யோசனைகள் , தடைகள் இருந்தாலும் அத்தனையையும் தானடி தான் அரசியலுக்கு வரப்போவதாக நிச்சயமாக டிசம்பர் 31 அன்று கூறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது .
காரணம் மிக எளிது , இத்தனை காலம் வருவேன் வருவேன் என்று சொல்லிவிட்டு இறுதியாக இப்போதுதான் டிசம்பர் 31 அன்று முடிவை அறிவிக்கிறேன் என்று சொல்லியிருக்கின்றார் . அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை சொல்ல எதற்காக இன்னொரு தேதியை சொல்லவேண்டும் . ஆகையால் கண்டிப்பாக அவரது முடிவு அரசியலுக்கு வருவேன் என்பதாகத்தான் இருக்கும் .
ஆக்டிவ் அரசியல்வாதியாக இருக்க மாட்டார் :
நமது கணிப்பின்படி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ஆக்டிவ் அரசியல்வாதியாக வலம்வர வாய்ப்பில்லை .
அவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனால் தனது இமேஜ் போகும் என்பதை அறிந்திருப்பார் .
ஆகையால் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளிப்பார் , அதிகபட்சமாக தன் கட்சிக்காரர்களுக்கென சீட்டையும் வாங்கி பிரச்சாரத்திற்கு செல்லவும் வாய்ப்புண்டு .
ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது . ஆனால் ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் .
இது அவரது கடந்தகால செயல்பாடுகளை கொண்ட அனுமானம் மட்டுமே .
நன்றி
பாமரன் கருத்து