கமல் – அரசியல் சாணக்கியனா – என் பார்வை

ஜெயலலிதா அவர்களின் இறப்பு , கருணாநிதி அவர்களின் உடல்நிலை பாதிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களையும் வெற்றிடத்தையும் கொண்டு வந்தது .

குறிப்பாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவில் நிலவிவந்த இழுபறிகள் அரசியல் வெற்றிடத்தையும் , மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த எண்ணங்களையும் கொண்டுவந்தன .

இதனை பயன்படுத்தி ரஜினி , கமல் என்னும் இரு பெரும் நடிகர்கள் தீவிர அரசியலில் நுழைந்தனர் .

கமல் – அரசியல் சாணக்கியன் :

கமல் தனது அரசியல் என்ட்ரியை ட்விட்டரில் இருந்து துவங்கினார் . அவரது குரலுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் இருந்துகொண்டே இருந்தன . மீடியாக்களும் கமலின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது .

வெற்றிடத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வந்துள்ளீர்கள் என்போருக்கு,  தான் இப்போதல்ல இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்தே அரசியலில் இருக்கின்றேன் என பதில் தந்தார் .
இவரால்  “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக எளிதாக கிராமத்து மக்களையும் சந்திக்க முடிந்தது . அதில் அரசியல் கருத்துக்களை கூறுவது பிரச்சனைகளை தீர்த்துவைப்பது போன்ற செயல்களின் மூலமாக மக்களின் அபிப்பிராயத்தை பெற முயன்றார் . அதில் வெற்றியும் கிடைத்தாகவே தெரிகின்றது .

கமல் அரசியல் பேசுகின்றார் அவ்வளவுதான் என ரஜினி உட்பட அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ரஜினி அறிவிப்பதற்கு முன்பாகவே அறிவித்தார் . இது ரஜினியே எதிர்பார்க்கவில்லை . இது கமலின் சிறந்த அரசியல் மூவ் ஆக பார்க்கப்பட்டது .

ஆன்மீக அரசியல் பக்கம் ரஜினி சாய்ந்தபோது தமிழக மக்களின் மனதில் சற்று தயக்கமிருந்தது ….பல இடங்களில் இருந்து எதிர்ப்பும் வந்தது .கமலோ தமிழக மக்களின் ஆதரவை ஏற்கனவே பெற்ற “திராவிடம் ” என் கொள்கையில் இருக்கும் என சொல்லி ஆதரவை அதிகரித்து கொண்டார் .

ரஜினியை பாஜக இயக்குகிறது என்னும் குற்றசாட்டு இருக்கும்நிலையில் பாஜக கமலை எதிர்ப்பதால் அதுவும் ஆதரவாக மக்களிடத்தில மாறுகிறது .

பெரும்பாலும் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்பு என்பது பழைய கட்சிகளிடம் இருந்தே வரும் . அதனை கொஞ்சம் தவிர்ப்பதற்காகவே தனது கட்சி குறித்தும் கொள்கைகள் குறித்தும் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசியல்கட்சிகளின் தலைமைகளை சந்தித்துள்ளார் (அதிமுக தவிர ) இதுவும் கமலின் சாணக்கியத்தனம் என்றே கூறலாம் .

நல்ல அரசியல் அறிவு , பேசும் திறமை , எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கமலிடம் இருப்பது கூடுதல் பலம் .

எவ்வளவு சாணக்கியத்தனம் இருந்தாலும் மக்களின் மனதை வென்றாலே ஆட்சி கட்டிலில் அமர முடியும் . கமலின் இந்த சாணக்கியதனங்கள் அவரை வெல்ல வைக்குமா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

கமலை குறித்து எழுதிவிட்டபடியால் கமலை ஆதரிக்கிறோம் என்பதல்ல …இது கமல் என்னும் புது அரசியல்வாதி குறித்த எமது எண்ணத்தை சொல்வது மட்டுமே . நீங்கள் ஒரு புது அரசியல்வாதியாக வந்தால் இவற்றில் சிலவற்றை பின்பற்றலாம் .

விஜயகாந்த் கமல் ரஜினி அல்ல எவரும் அரசியலுக்கு வர உரிமை உண்டு . ஆனால் நடிகன் என்ற ஒற்றை தகுதியை கொண்டு ஆட்சிக்கு எவராலும் வர இயலாது .

மக்களும் நல்ல நடிகன் என்றால் படம் பாருங்கள் , நல்ல கொள்கையுடையவன் என்றால் வாக்கு செலுத்துங்கள்  .

அடுத்த பதிவில் ரஜினி குறித்தும் அவருக்கு உள்ள சவால்கள் குறித்தும் எழுதுகிறேன் .

தொடர்ந்து படியுங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

2 thoughts on “கமல் – அரசியல் சாணக்கியனா – என் பார்வை

  • February 20, 2018 at 1:17 pm
    Permalink

    Kamal arasiyalku varathu nalla visayam but avar varuvathal IPA yentha maittram varum ennaku Thereyala……vaipu 20% than en karuthu

    Reply
  • February 20, 2018 at 4:10 pm
    Permalink

    கமல் அவர்களின் அரசியல் பயணம் நன்றாக இருப்பினும் அவர் ஏன் அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது கட்சிப்பணியை ஆரம்பிக்கிறார் என்று தெரியவில்லை… திரு. அப்துல் கலாம் மறைந்த பொழுது கமலோ, ரஜினியோ யாரும் அவரின் இறுதி சடங்கிற்க்கு வரவில்லை ஆனால் , இப்பொழுது கலாமின் நினைவிடத்திலிருந்து தனது கட்சிப்பணியை ஆரம்பிக்கிறார். நிச்சயமாக, இது கமல் அவர்கள் கலாம்மீது கொண்ட பற்றுகிடையாது. மாறாக, இளைஞர்களைக் கவர அவர் எடுத்துக்கொண்ட ஒரு ஆயுதம் மட்டுமே.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *