கமலுக்கு சாதாரண பாமரனின் கேள்விகள் – உங்களுக்கு  இருக்கிறதா ?

கேள்விகளே புரிதலுக்கான அடிப்படை

கமல் ட்விட்டரில் பதிவிடும்போது அவை சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும்படியாக  இருக்காது . அதற்கு அர்த்தங்களையும் விளக்கங்களையும் பலர் கூறுவது உண்டு . சில நேரங்களில் அவரே கூறுவதும் உண்டு .

கட்சி ஆரம்பித்து இருக்கும் கமல் இப்போதும் அதுபோன்றே பேசிவருவது பல கேள்விகளை எழுப்புகிறது . அவ்வாறு நமக்கு எழுந்த கேள்விகளை இங்கே கேட்கிறோம் . உங்களுக்கு பதில் தெரிந்தாலும் பதிவிடலாம் .

 

இடதா வலதா ?

 

சந்திரபாபு நாயுடு தன்னிடம் “உங்கள் கட்சி கொள்கை என்ன ? இடதா வலதா ? என கேட்டார் . நான் ” இடதா வலதா என கவலைப்படாமல் மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதனை எடுத்துக்கொள்வதே கொள்கை என்றேன் ” என கூறினார் .

 

இடதா வலதா என்பதற்கு மய்யம் என சொல்லும்போது “கடவுள் இருக்குதுனு சொல்றவனையும் நம்பலாம் , கடவுள் இல்லைனு சொல்றவனையும் நம்பலாம் . நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்ப கூடாது ” என்ற அவரின் பதிலே நம் நினைவுக்கு வருகின்றது .

 

(வலதுசாரி என்போர் பழமைவாதிகள் , இடதுசாரி என்போர் புதுமைவாதிகள் )

 

கமல் அவர்கள் பேசியது மிகவும் ரசிக்கும்படியான கைதட்டல்களை வாங்கித்தரக்கூடிய பேச்சுக்கள் தான் . ஆனால் நன்றாக கவனித்தீர்கள் என்றால் அவரது பதில் நேரடியானதாக இல்லாமல் குற்றம் குறை சொல்ல முடியாதபடி மறைந்து இருக்கும் (பதிலே அல்ல ).

 

நாம் என்ன தினந்தோறும் பேசிக்கொண்டிருந்தோமோ அதையே மேடையில் கூறியிருக்கிறார் . ஆகா நாம் நினைத்ததை பேசுகிறாரே என்ற ரீதியில் வந்த கைதட்டுகள் என தோன்றுகிறது.

 

தரமான கல்வி , சுகாதாரம், மதுவை அரசு விற்பதற்கு எதிராக பேசுவது , இலவசங்களுக்கு எதிராக பேசுவது
என்பதுஅனைவரின் கொள்கையிலும் இருக்கும் . ஆனால் கொள்கை என்பது சமூக மாற்றங்களை ஏற்படுத்த முன்னெடுக்கும் முடிவுகளே கொள்கைகள் எனப்படும் .

 

உதாரணத்திற்கு சாதி மறுப்பு திருமணங்களில் கமல் என்ன நிலைப்பாடு எடுப்பார் ?

 

சாதியை ஒழிப்பதாக கூறும் அவர் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நிறுத்த முடிவெடுப்பாரா  ? அல்லது மாற்றங்களுக்கு உட்படுத்துவரா ?

 

கோவில்களில் அனைவரும் அர்ச்சகராகும் திட்டத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பார் ?

 

இலவசம் இருக்காது என்றால் என்ன ? எதை இலவசம் என்கிறார் ? ஸ்கூட்டர் , மிக்சி பிற மட்டுமா ? அல்லது மானியங்கள் உள்ளிட்ட அனைத்தையுமேவா ?

 

இதில் ஒன்றிற்கு கூட கமலின் நிலைப்பாடு நமக்கு தெளிவாக தெரியவில்லையே ?

 

கட்சியின் பெயரை அறிவித்த போது கொள்கைகளை கொஞ்சமும் கூறாமல் பிறகு கூறுகிறேன் என்பது மக்கள் மத்தியில் எடுபடுமா என தெரியவில்லை.

 

6 கைகளும் 6 மாநிலங்களும் :

 

அனைவரது மனதிலும் எளிமையாக பதிய கூடியது கட்சி கொடி . ஆகையால் தான் கட்சியின் மிக முக்கிய கொள்கையை கட்சி கொள்கையில் இருப்பதாக பார்த்துக்கொள்வார்கள் . 

கமலின் கட்சிக்கொடியில் தென் இந்தியாவின் 6 மாநிலங்கள் மட்டும் இருப்பது எதற்காக ?  

திராவிட பகுதிகளை குறிப்பதற்காகவா ? 

இந்த 6 மாநிலங்களில் அக்கறை செலுத்தும் என்பதை குறிக்கவா ?  

திராவிட நாடுதான் லட்சியம் என்பதை சொல்லவா ? 

திரையில் “இந்தியனாக” காட்டிக்கொண்டுவிட்டு கட்சியில் தென்னிந்தியனாக காட்டுவதன் பொருள் என்ன ? அதனை விளக்கிடவில்லையே !

 

குறிப்பு : சில அறிஞர்களுக்கு வேண்டுமானால் கமலின் அர்த்தம் புரிந்திருக்கும் ஆனால் பாமர மக்களுக்கு இன்னும் புரியவில்லை .

 

மேம்போக்கான சமாளிப்பு பேச்சுக்களை தவிர்த்து நேரடியாக இந்த பிரச்சனையில் எனது நிலைப்பாடு இதுதான் என கமல் பேச வேண்டும் .
 
இந்த கேள்விகள் நமது விளக்கத்திற்க்கானவையே ! எதிர்ப்புக்கானவை அல்ல !

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *