கண்களில் ஓவியமாய் வாழுவேன்
உன் விழிகளில்
என்னுருவம் பதியவே
விளம்பரமாய் நானும்
சுவரொட்டி நிற்கின்றேன்
ஆதவனும் நிலவும்
அங்கங்கு இடம்பெயர
மாதமாய் நானும்
மாறாமல் நிற்கிறேன்
மயில் விழிகளில்
என்னுருவம் பதியசெய்
வாழுவேன் நானும்
கண்களில் ஓவியமாய்
காதல் இல்லை கவிதை
Pingback:அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள் – பாமரன் கருத்து