மதத்தை காட்டி உணவை மறுத்தவருக்கு சொமேட்டோ கொடுத்த நெத்தியடி | Zomato
வேறு ஒரு நபரை உங்களுக்கு நியமிக்க முடியாது, பணத்தையும் திருப்பி தர முடியாது என சொல்லிவிட்டது Zomato நிறுவனம்
மதத்தின் பெயரால் மூடர்கள் சிலர் செய்கின்ற செயல்கள் அவ்வப்போது நாம் மனிதர்கள் தானா என்ற கேள்வியை முன்வைத்துவிட்டுப்போகின்றன. அப்படியொரு நிகழ்வு தான் தற்போது நடந்திருக்கிறது. தான் ஆர்டர் செய்த உணவினை கொண்டுவருவதற்கு இந்து அல்லாத ஒருவரை நியமித்ததற்காக உணவினை கேன்சல் செய்யச்சொன்னத்தோடு மட்டுமில்லாமல் அதனை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள கொடுமை தற்போது அரங்கேறி இருக்கிறது. இதில் சிறப்பு என்னவெனில் “வேறு ஒரு நபரை உங்களுக்கு நியமிக்க முடியாது, பணத்தையும் திருப்பி தர முடியாது என சொல்லிவிட்டது Zomato நிறுவனம்.
மத்தியபிரதேச மாநிலம் , ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா எனும் நபர் ட்விட்டரில் @ZomatoIN ஐ டேக் செய்து ஒரு பதிவினை போடுகிறார். அதில் “என்னுடைய ஆர்டரை கொண்டுவர ஒரு ஹிந்து அல்லாத நபரை போட்டுவிட்டார்கள். அவர்கள் நான் கேட்டும் வேறு ஒரு நபரை போட மறுத்துவிட்டார்கள், அதனால் நான் என்னுடைய ஆர்டரை கேன்சல் செய்துவிட்டேன். எனக்கு பணமும் திருப்பி தரப்படவில்லை. என்னை உணவினை பெற்றுக்கொள்ள நிர்பந்திக்க முடியாது, எனக்கு பணம் தேவை இல்லை” என குறிப்பிட்டு இருந்தார்.
Just cancelled an order on @ZomatoIN they allocated a non hindu rider for my food they said they can't change rider and can't refund on cancellation I said you can't force me to take a delivery I don't want don't refund just cancel
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
This is my objection pic.twitter.com/U4DjaHONoo
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
அதற்க்கு Zomato நிர்வாகத்தின் சார்பாக “உணவிற்கு மதம் கிடையாது” என பதில் அளித்திருந்தார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள Zomato வின் நிறுவனர் “இந்தியா குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம், எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருக்கின்ற பன்மைத்துவத்தை மதிக்கிறோம். அதற்கு சவால்விடும் வகையிலான ஒரு வியாபாரத்தை இழப்பதில் எங்களுக்கு கவலை இல்லை” என பதில் அளித்து இருக்கிறார்.
We are proud of the idea of India – and the diversity of our esteemed customers and partners. We aren’t sorry to lose any business that comes in the way of our values. 🇮🇳 https://t.co/cgSIW2ow9B
— Deepinder Goyal (@deepigoyal) July 31, 2019
இதுமாதிரியொரு முட்டாள்தனத்தை எவரும் செய்திடக்கூடாது
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!