Youtube Down WHY? | Youtube சேவை நிறுத்தம், ஏன்?

 


உலகின் பெரும்பகுதி மக்கள் வீடியோ பார்ப்பதற்கு பயன்படுத்துகின்ற கூகுளின் Youtube தற்போது இயங்கவில்லை . உலகம் முழுமைக்கும் உள்ள பயனாளர்களிடமிருந்து Youtube Down என்ற செய்தி கிடைப்பதனால் உலகம் முழுமைக்கும் youtube இயங்கவில்லை என தெரிகின்றது .

 

இந்தியாவில் 8.10 AM முதல் youtube இயங்க ஆரம்பித்து இருக்கின்றது .

 




Youtube Down, Why?



Youtube இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது என பயனாளர்கள் தெரிவித்தவுடன் அதுகுறித்து Youtube ட்விட்டரில் பகிர்ந்துகொடுள்ள செய்தியில் “உங்களது புகாரை அளித்தமைக்கு நன்றி , தற்போது வேலை செய்து வருகின்றோம் . தொந்தரவுக்கு வருந்துகின்றோம் ” என தெரிவித்துள்ளது.



ஆனால் தற்போது Youtube Down ஆனதற்கான காரணத்தை Youtube இதுவரை தெரிவிக்கவில்லை . ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க வேலை செய்து வருவதாக உறுதியளித்துள்ளது .

 


 

Never Seen Before 

 

Youtube இந்தியாவை பொறுத்தவரையில் அதிகாலை 6.30 AM முதல் பிரச்சினையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது . இதற்கு முன்பு சில சமயங்களில் இதனைப்போன்று பிரச்சனைகளை Youtube சந்தித்து இருந்தாலும் பிரச்சனை இவ்வளவு நேரத்திற்கு நீடித்து இருப்பது இதுவே முதல் முறை .



Youtube , Down ஆனதற்கான காரணத்தை சரியாக சொல்லாமல் இருப்பது கவனிக்கவேண்டிய விசயமாக பார்க்கப்படுகின்றது .



Youtube ஒரு மிகப்பெரிய தளம் . அங்கு நாளொன்றுக்கு எண்ணிலடங்கா  வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன . 

 

இணையத்தளத்தினை அப்டேட் செய்திடும்போது இதுபோன்றதொரு பிரச்சனை ஏற்படலாம் . ஆனால் Youtube அதனை வெளிப்படையாக சொல்லாமல் இருந்ததினால் கவலை அடைந்திருந்தனர் வலைதளவாசிகள் .

 




Youtube is now Working



இந்தியாவில் 8.10 AM முதல் youtube இயங்க ஆரம்பித்து இருக்கின்றது . உலகம் முழுமைக்கும் இயங்குகின்றதா என தெரியவில்லை . Youtube இன் அதிகாரபூர்வ  ட்விட்டரில் இன்னும் இதற்கான காரணம் அப்டேட் எதுவும் கூறப்படவில்லை .

 

எண்ணற்ற நபர்கள் youtube மூலமாக சம்பாதித்து வருகின்ற சூழலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு வீடியோக்கள் delete ஆனால் ? மிகப்பெரிய கவலை அளிக்கும் கேள்வியாக இது இருக்கின்றது .

 


 

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *