Your Smart Phone Hacked? | How to Know? | How to Safe from Hackers? | Tamil | Mobile Phone எப்படி ஹேக் செய்யப்படுகிறது?
இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான வேலைகள் அனைத்தையுமே Mobile Phone வழியாகவே செய்து முடித்துவிடுகிறோம் . நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது முதற்க்கொண்டு , பில் செலுத்துவது , வங்கி பண பரிமாற்றங்களை மேற்கொள்ளுவது , பொருள்களை ஆன்லைனில் வாங்குவது என அனைத்து வேலைகளையும் Mobile Phone மூலமாகவே செய்துவிடுகின்றோம் .
ஆகையால் நம்மைப்பற்றிய சொந்த தகவல்கள் (போட்டோ , வீடியோ , மெசேஜ் முதலியன ) , வங்கி தகவல்கள் என அனைத்துமே நமது மொபைலுக்குள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே . ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மொபைல் போன்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றனவாம் . ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் அவ்வளவாக இல்லை என்பது மிகவும் கவலைப்படவேண்டிய செய்தி.
நம் தகவலை திருடி என்ன செய்யப்போகிறார்கள் என அலட்சியமாக இருக்கும் ஒரு பிரிவினரும் , தகவல் திருட்டினை தடுக்க வழிமுறைகளை தேடும் மற்றொரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள் . இருபிரிவினருக்குமான தகவல்களை இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.
மொபைல் போன்கள் எதற்காக ஹேக் செய்யப்படுகின்றன ? | Why Mobiles are hacked?
1. உங்களுடைய சொந்த விசயங்களான போட்டோ , வீடியோ , டாக்குமெண்ட்ஸ் (Personal Details – Photo, Video, Documents) போன்றவற்றை உங்களுக்கு தெரியாமல் அறிந்துகொள்ள.
2. உங்களுடைய password களை (Banking, Websites, Social Media Accounts) அறிந்துகொள்வதற்காக
3. உங்களுடைய நடவெடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அந்த தகவல்களை பயன்படுத்துவது (Advertising, Promotional Ads)
Mobile Phone எப்படி ஹேக் செய்யப்படுகிறது?
ஹேக் என்றால் நமது மொபைல் இல் நுழைந்து நமது தகவல்களை நமது அனுமதியின்றி அறிந்துகொள்வது . பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின்மூலமாக ஹேக்கிங் நடைபெறுகின்றது .
1) நமது மொபைலை திருடியோ அல்லது நாம் இல்லாத தருணங்களில் நமது மொபைலை இயக்கியோ தகவல்களை திருடுவது
2 ) அங்கீகரிக்கப்படாத Mobile Application களை இண்ஸ்டால் செய்யும்போது அதனில் இருக்கும் Spy Program மூலமாக
3) தெரியாத நபர்களிடமிருந்து வருகின்ற file களை திறக்கும் போது Hacking Program இன்ஸ்டால் செய்யப்படுவதன் மூலமாக
பெரும்பாலானவர்கள் தற்போது Password பாதுகாப்பினை முறையாக பயன்படுத்துவதினால் முதலாவது முறைப்படி தகவல்கள் திருப்படுவது குறைவே . அதிகப்படியான ஹேக்கிங் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறைப்படிதான் நடக்கின்றன .
Hack செய்யப்பட்டிருப்பதை அறிவது எப்படி ?
ஹேக் செய்யப்பட்ட மொபைலில் வெளிபடையாக எந்த App ம் இயங்குவது கிடையாது . அனைத்தும் மொபைலின் பின்பக்கமாகத்தான் (Background) இயங்கும் . ஆகவே ஹேக் செய்யப்பட்டிருப்பதை பின்வரும் வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக அறியலாம்
அடிக்கடி இறங்கும் பேட்டரி சார்ஜ் [Battery Draining]
உள்ளுக்குள் இயங்கும் Spy App தொடர்ச்சியாக உங்களது தகவல்களை இன்னொரு நபருக்கு (Host க்கு) அனுப்பிக்கொண்டே இருக்கும் . ஆகையால் உங்களது மொபைல் பயன்படுத்தாமல் இருந்தாலும் Spy App இயங்குவதனால் பேட்டரி சார்ஜ் அடிக்கடி குறையும் .
திடீரென உங்களது மொபைலில் இதனை கண்டறிந்தால் அதிகமாக இயங்கிய ஆப்களின் தரவுகளை சோதித்துப்பாருங்கள் . ஏதேனும் ஒரு ஆப் தேவையில்லாமல் செயல்பட்டிருந்தால் அதனை uninstall செய்துவிடுங்கள் .
அதிகரிக்கும் டேட்டா பயன்பாடு (abnormal data usuage)
திடீரென நாம் பயன்படுத்துகின்ற டேட்டாவின் அளவு அதிகரிக்கும் . Background இல் செயல்படும் App தொடர்ச்சியாக தகவலை அனுப்பிக்கொண்டு இருப்பதனால் டேட்டாவின் பயன்பாடு அதிகரிக்கும் .
Noise or unwanted sound
நமது மொபைலில் இருந்து தேவையில்லாத சத்தங்கள் தொடர்ச்சியாக வந்தால் நிச்சயமாக கவனிக்கவேண்டும் .
உங்களது மொபைலில் இருக்கும் ஆப்களை தெரிந்துகொள்ளுங்கள்
எங்கேயோ இருக்கின்ற நபர்கள் தான் ஹேக் செய்யவேண்டும் என்பதில்லை . கணவன் கூட மனைவிக்கு தெரியாமல் மனைவியின் மொபைலில் Spy App இண்ஸ்டால் செய்து கண்காணித்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன .
கோளாறுகளை சரி செய்ய கடைகளில் கொடுக்கும்போதும் Spy App களை இண்ஸ்டால் செய்துகொடுக்க வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன .
பாமரன் கருத்து